How to Manage Your SBI Debit Card on Yono Lite SBI Mobile App
SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு Debit Card-யை Manage செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த வசதியின் மூலம் வாடிக்கையாளர் தன்னுடைய Debit Card இன் Withdrawal Limit, Merchant (POS) Transaction மற்றும் e-Commerce (CNP) Transaction போன்றவற்றின் உச்சவரம்பை மாற்ற முடியும்.
SBI வழங்கும் Manage Debit Card என்ற வசதியை, ஒரு வாடிக்கையாளர் எவ்வாறு பயன்படுத்துவது ? மற்றும் இந்த வசதியினால் ஏற்படும் நன்மை என்ன ? இந்த கேள்விகளுக்கான முழு விளக்கத்தையும் இங்கு காணலாம்.
Table of Contents
Debit Card Fraud
ஒவ்வொரு வங்கியும் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு, Debit Card என்னும் ATM அட்டையை வழங்குகின்றன. இதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை, இந்த ATM அட்டையை பயன்படுத்தி Withdraw செய்ய முடியும்.
அதாவது ATM அட்டையை பயன்படுத்தி அருகில் உள்ள ஏதாவது ஒரு ATM இயந்திரத்தில் பணத்தை எடுக்க முடியும். இந்த முறையில் விரைவாகவும், எளிமையாகவும் பணம் எடுக்க முடிவதால், மக்கள் அனைவரும் இதை பெரிதும் விரும்புகின்றனர்.
இருப்பினும், இந்த Debit Card இன் மூலம் பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. வாடிக்கையாளர்கள் இந்த மோசடிகளில் சிக்கிக்கொண்டு தங்களின் பணத்தை இழக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு நாளும் மோசடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, கார்டுதாரர்கள் தங்களின் ATM Card-யை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்.
ஏ.டி.ம் அட்டைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த, SBI வங்கி பல்வேறு பாதுகாப்பு வசதிகளை வழங்குகிறது. இந்த பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், தங்களின் ஏ.டி.ம் அட்டைகளை பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.
Manage Debit Card Facility
SBI வங்கி வழங்கும் பல்வேறு வசதிகளில் Manage Debit Card என்ற வசதியும் ஒன்றாகும். SBI இன் Yono Lite என்ற மொபைல் செயலியின் மூலம் ஏ.டி.ம் அட்டையை நிர்வகிக்கும் வசதியினை பெறலாம்.
டெபிட் அட்டையை நிர்வகிக்கும் வசதியினால் என்ன பயன் ?
இந்த வசதியை பயன்படுத்தி டெபிட் அட்டையின் செயல்பாடுகளை, வெவ்வேறு பயன்பாட்டு வகைகளுக்கு Enable / Disable செய்யலாம்.
உங்களின் டெபிட் அட்டையின் மூலம் சர்வதேச பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அதற்க்கு நீங்கள் International Usage மற்றும் CNP பயன்பாட்டை Enable செய்ய வேண்டும். அதே போல் உங்களின் அட்டையை எந்த ஒரு POS சாதனங்களில் பயன்படுத்த வேண்டுமென்றாலும், அதற்க்கு POS Transaction என்பதை Enable செய்ய வேண்டும்.
மேலும் உங்களின் ATM Withdrawal உச்ச வரம்புகளையும் நிர்ணயிக்க முடியும்.
இதை இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், உங்களின் டெபிட் அட்டையை எங்கும் மற்றும் எந்த நேரத்திலும் கட்டுப்படுத்த முடியும்.
Manage SBI Debit Card on Yono Lite
உங்களின் ATM / Debit Card-யை SBI Yono Lite செயலியின் மூலம் எவ்வாறு நிர்வகிப்பது என்பதை பற்றி காணலாம்.
- உங்களின் ஸ்மார்க் போனில் Yono Lite என்ற செயலியை Install செய்து Login செய்யவும்.
- இப்பொழுது Yono Lite செயலியின் Dashboard திறக்கும்.
- Services என்ற Option-யை கிளிக் செய்யவும்.
- Manage Debit Card என்பதை தேர்வு செய்யவும்.
- Account Number-யை தேர்வு செய்து பிறகு டெபிட் அட்டை எண்ணை தேர்வு செய்யவும்.
- இப்பொழுது டெபிட் கார்டு Manage செய்வது தொடர்பாக பல்வேறு தேர்வுகள் தெரிவதை காண்பீர்கள்.
1. Domestic usage ON / OFF
நீங்கள் Domestic usage என்பதை ON செய்தால், உள்நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ATM Machine மூலம் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை OFF செய்தால் எந்த ஒரு ATM இயந்திரத்திலும் பணத்தை எடுக்க முடியாது.
நீங்கள் உங்களுக்கு தெரிந்த நபர்கள் / உறவினர்கள் வீட்டில், ஏ.டி.ம் அட்டையை மறந்துவிட்டிர்கள் என்றால், அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று நீங்கள் நினைத்தால் Domestic Usage-யை OFF செய்திடலாம். இதன் மூலம் உங்களின் அட்டை முடக்கப்படும்.
2. International Usage ON / OFF
SBI வங்கியின் ATM அட்டையை எந்த ஒரு சர்வதேச ATM இயந்திரத்திலும் பயன்படுத்த முடியும். நீங்கள் சர்வதேச பயணம் மேற்கொள்ளும்போது, உங்கள் அட்டையை அங்கே பயன்படுத்தலாம்.
நீங்கள் வெளிநாட்டு பயணம் செல்லாத நேரத்தில், International Usage-யை OFF செய்திருப்பது நல்லது. இதனால் சர்வதேச நாடுகளில் அதை பயன்படுத்த முடியாது.
3. ATM txns ON / OFF
இந்த Option-யை நீங்கள் ON செய்திருந்தால், அனைத்து ATM இயந்திரங்களிலும் உங்களின் ஏ.டி.ம் அட்டை வேலை செய்யும். இதை OFF செய்துவிட்டால், எந்த ஏ.டி.ம் இயந்திரத்திலும் வேலை செய்யாது.
உங்களின் டெபிட் கார்டை சிறிது நேரம் முடக்கி வைக்க இந்த தேர்வை பயன்படுத்தலாம்.
4. Merchant (POS) txns ON / OFF
இப்பொழுது பெரும்பாலான கடைகளில் Point of Sale (POS) இயந்திரங்கள் இருப்பதை காண முடிகிறது. நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு POS முறையின் மூலம் கட்டணத்தை செலுத்த முடியும்.
அதாவது கடைக்காரர்களிடம் உள்ள POS இயந்திரத்தில் உங்களின் டெபிட் கார்டை தேய்த்து பிறகு PIN நம்பரை உள்ளிட வேண்டும். PIN நம்பரை உள்ளிட்டவுடன் நீங்கள் வாங்கிய பொருள்களுக்கான கட்டணம் கடைக்காரரின் வங்கிக்கணக்கிற்கு சென்றுவிடும்.
இந்த ON / OFF செய்வதின் மூலம் POS-யை இயக்கலாம் / முடக்கலாம்.
5. e-Commerce (CNP) txns ON / OFF
நீங்கள் ஆன்லைன் Shopping செய்பவரா? அப்படி செய்யும்போது அதற்கான Payment-யை டெபிட் கார்டை கொண்டு செலுத்துபவர் என்றால், இது உங்களுக்கான தேர்வு தான்.
இந்த விருப்பத்தை ON / OFF செய்வதன் மூலம் டெபிட் கார்டின் ஆன்லைன் பயன்பாட்டை இயக்க / முடக்கலாம்.
மேற்சொன்ன தகவல்களின் படி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் டெபிட் கார்டை, மொபைல் செயலி மூலமாகவே கட்டுப்படுத்த முடியும். இது உங்களின் டெபிட் அட்டைக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. எனவே ஒவ்வொரு SBI வாடிக்கையாளரும் டெபிட் கார்டை எவ்வாறு Manage செய்ய வேண்டும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- How to Block and Unblock SBI ATM Card
- Change SBI ATM PIN Number in Online
- How to Change Mobile Number in SBI Account Online
- Apply New SBI ATM Card Online