ATM Card ServiceSBI Online

How to Deposit Cash in SBI Cash Deposit Machine (CDM)

சில வங்கிகள் வங்கிக்கு போகாமலே பணத்தை டெபாசிட் செய்யும் வசதியை வழங்குகின்றன. அதாவது Cash Deposit Machine (CDM) என்னும் இயந்திரத்தின் மூலம் பணத்தை டெபாசிட் செய்யலாம். SBI வங்கியில் இந்த CDM இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை எவ்வாறு டெபாசிட் செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

SBI Cash Deposit Machine

அனைத்து வங்கிகளும் பெரும்பாலான வங்கி சேவைகளை ஆன்லைன் மூலமாக வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.

இதற்க்கு முன்பு வரை வாடிக்கையாளரின் Bank Account-ல் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டுமென்றால் நேரடியாக வங்கிக்கு தான் செல்ல  வேண்டும். ஆனால் தற்போது அந்த நிலைமை மாறிவிட்டது.

நம்மிடம் இருக்கும் பணத்தை டெபாசிட் செய்ய வங்கிக்குள் செல்ல வேண்டிய தேவையில்லை. ஒரு SBI Cash Deposit Machine (CDM) மூலமாகவே பணத்தை உங்களின் வங்கிக்கணக்கு எண்ணில் வரவு வைக்க முடியும்.

இந்த CDM இயந்திரமானது ATM இயந்திரத்தை போன்றதாகும். ஆனால் இதில் பணத்தை வைப்பதற்கு பிரத்யேகமான இடம் இருக்கும். டெபாசிட் செய்யும் போது பணத்தை அதில் வைத்தால் இயந்திரம் உள்ளே இழுத்துக்கொள்ளும். பிறகு அந்த பணம் எண்ணப்பட்டு உங்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

எனவே CDM இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்யவும் மற்றும் பணத்தை எடுக்கவும் முடியும்.  அதாவது CDM இயந்திரத்தை பணத்தை போடுவதற்கும், பணத்தை எடுப்பதற்கும் பயன்படுத்தலாம். நீங்கள் பணத்தை Deposit செய்தவுடன் அதற்கான ரசீது சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

பொதுவாக SBI வங்கியில் பணத்தை CDM இயந்திரத்தின் மூலம் டெபாசிட் செய்யும் போது இரண்டு முறைகளில் டெபாசிட் செய்யலாம். அதாவது ATM Card யை பயன்படுத்தியும் மற்றும் ATM Card இல்லாமலும் டெபாசிட் செய்ய முடியும். இந்த இரண்டு முறைகளையும் நாம் விரிவாக காணலாம்.

Read  Tamil Nadu 12th Exam Result 2023: Check Your Result

How to Deposit Cash in SBI CDM Machine With ATM Card

நீங்கள் உங்களின் SBI ATM Card-யை பயன்படுத்தி பின்வரும் செயல்முறைகளின் மூலம் டெபாசிட் செய்யலாம்.

Step 1: முதலில் SBI Cash Deposit Machine-ல் உங்களின் Debit Card-யை Insert செய்யவும்.

Step 2: Banking என்பதை தேர்வு செய்யவும்.

Click Banking Option

Step 3: இப்பொழுது உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்க.

Select Language

Step 4: 4 இலக்க ATM PIN நம்பரை Enter செய்யவும்.

Enter SBI ATM PIN - Cash Deposit Machine

Step 5: இப்போது Transaction-யை தேர்வு செய்வதற்கான Option வரும். அதில் Deposit என்பதை கிளிக் செய்க.

Select Deposit

Step 6: Cash Deposit என்பதை Select செய்யவும்.

Select Cash Deposit

Step 7: ஒரு Transaction-க்கு அதிகபட்சமாக Rs.2,00,000 வரை டெபாசிட் செய்யலாம். மேலும் சேவை கட்டணம் 0 ஆகும். இப்பொழுது Continue என்பதை தேர்வு செய்யவும்.

Click Continue -SBI Cash Deposit Machine

Step 8: Select Account Type என்பதில் Savings என்பதை தேர்வு செய்க. 

Select Savings

Step 9: இப்பொழுது பணத்தை வைப்பதற்கான ஒரு Box திறக்கும். அதில் நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்தை வைக்க வேண்டும்.

Give Your Cash in CDM

Step 10: நீங்கள் டெபாசிட் செய்யும் பணமானது Rs.100, Rs.200, Rs.500, Rs.2000 போன்றவைகளாக இருக்க வேண்டும். இப்பொழுது Enter என்பதை  அழுத்துக.

Click Enter

Step 11: இப்போது CDM இயந்திரத்தில் வைக்கப்பட்ட பணமானது எண்ணப்பட்டு முழுத்தொகையும் திரையில் தோன்றும். அதை சரிபார்த்த பிறகு Confirm என்பதை அழுத்துக.

Click Confirm-SBI Cash Deposit Machine

Step 12: தற்போது நீங்கள் டெபாசிட் செய்த பணமானது வெற்றிகரமாக உங்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. மேலும் அதற்கான ரசீது சீட்டையும் பெறுவீர்கள்.

Transaction Complete

How to Deposit Cash in SBI CDM Without ATM Card

ATM Card இல்லாமலும் SBI Cash Deposit Machine-ல் பணத்தை டெபாசிட் செய்யலாம். இதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Read  How to Add Beneficiary in SBI Internet Banking

Step 1: SBI CDM இயந்திரத்தின் திரையில் தோன்றும் Cardless Deposit என்பதை தேர்வு செய்யவும்.

Click Cardless Deposit

Step 2: இப்போது மொழியை தேர்வு செய்யவும்.

Select Language 1

Step 3: Select Bank என்பதில் SBI-யை தேர்வு செய்க.

Select SBI

Step 4: உங்களின் 10 இலக்க மொபைல் எண்ணை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்க.

Enter 10 Digit Mobile Number

Step 5: Account Type-ல் Savings என்பதை தேர்வு செய்யவும்.

Select Account Type

Step 6: இப்பொழுது பயனாளரின் 11 இலக்க Bank Account Number-யை Enter செய்து Confirm என்பதை அழுத்துக.

Enter 11 Digit Account Number

Step 7: தற்போது பயனாளரின் Account நம்பர் மற்றும் பயனாளரின் பெயர் போன்றவை தோன்றும். இப்போது Continue என்பதை அழுத்தவும்.

Click Continue - sbi Cash Deposit Machine

Step 8: Cardless முறையில் டெபாசிட் செய்ய Rs.25 சேவை கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் இந்த முறையில் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக Rs.49,900 வரை டெபாசிட் செய்யலாம்.

Step 9: இப்போது பணம் வைப்பதற்கான Box திறக்கும். அதில் பணத்தை வைத்து Enter என்பதை அழுத்தவும்.

Deposit Cash

Step 10: நீங்கள் வைத்த பணத்தின் தொகை திரையில் தோன்றும். அதை சரிபார்த்த பிறகு Confirm அழுத்தவும்.

Click Confirm

Step 11: நீங்கள் Deposit செய்த பணமானது வெற்றிகரமாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.

Transaction Complete

 

How to Find SBI CDM Near Me

சில எளிமையான வழிகளில் உங்களுக்கு அருகில் உள்ள CDM இயந்திரத்தை கண்டுபிடிக்கலாம்.

Google Map-யை Open செய்து அதில் “SBI Cash Deposit Machine Near Me ” என்று டைப் செய்து Search செய்தால் உங்களுக்கு அருகில் உள்ள CDM-களை காட்டும். நீங்கள் இவ்வாறு தேடும்போது Location-யை On செய்ய வேண்டும்.

மேலும் கீழ்காணும் Locator இணையதளத்தை பயன்படுத்தியும் CDM இயந்திரத்தை தேடலாம்.

SBI CDM Locator Near Me

Select Gategory என்ற இடத்தில் CDM என்பதை தேர்வு செய்யவும. பிறகு உங்களின் Address-யை Enter செய்க. Radius என்ற இடத்தில் எத்தனை கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும் என்பதை Set செய்ய வேண்டும்.

Read  How to Register & Use SBI Secure OTP App

இப்பொழுது கடைசியாக Search என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு அருகில் உள்ள Cash Deposit Machine-ன் இடத்தை காணலாம்.

Advance Search என்பது தேர்வு செய்யும்போது State, Location மற்றும் Address போன்றவற்றை Enter செய்து Search செய்ய வேண்டும்.

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய சந்தேகங்கள் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.

முடிவுரை

CDM இயந்திரத்தை பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்யும் போது உங்களின் நேரத்தை சேமிக்கலாம். இந்த இயந்திரத்தில் SBI வங்கிக்கணக்கு வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். மேலே கொடுக்கப்பட்ட விவரங்களின் மூலம் CDM இயந்திரத்தில் எவ்வாறு டெபாசிட் செய்வது என்று அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே பதிவிடவும்.

இதையும் படியுங்கள்:

FAQ 

CDM இயந்திரம் என்றால் என்ன?

CDM இயந்திரம் என்பது Cash Deposit Machine ஆகும். இதில் வங்கிக்கு போகாமலேயே பணத்தை உங்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்ய முடியும்.


CDM இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்ய ATM Card வேண்டுமா?

SBI CDM இயந்திரத்தில் ATM Card யை பயன்படுத்தியும் மற்றும் ATM Card இல்லாமலும் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். 


SBI CDM இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்த பிறகு, அந்த பணம் கணக்கில் வர எவ்வளவு நேரம் ஆகும்?

நீங்கள் இயந்திரத்தில் பணத்தை டெபாசிட் செய்த பிறகு, உடனே உங்களின் கணக்கில் வரவு வைக்கப்படும்.


டெபாசிட் செய்த பணம் கணக்கில் வந்துவிட்டதா என்று எவ்வாறு தெரிந்து கொள்வது?

மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங், ATM மூலம் இருப்பை சரிபார்த்தல், Missed Call Service ஆகியவற்றில் ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தி கணக்கில் பணத்தை வந்துவிட்டதா என்று சரிபார்க்கலாம்.


SBI CDM இயந்திரத்தில் SBI கணக்கு அல்லாத மற்ற வங்கிக்கணக்குகளுக்கு டெபாசிட் செய்ய முடியுமா?

முடியாது. SBI CDM இயந்திரத்தில் SBI வங்கிக்கணக்குகளுக்கு மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.


CDM இல் டெபாசிட் செய்ய OTP ஏதேனும் தேவைப்படுமா?

இல்லை தேவைப்படாது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole