ATM Card ServiceSBI Online

How to Generate / Change SBI Debit Card PIN Number Online

SBI வாடிக்கையாளர்கள் தங்களின் Debit Card PIN Number-யை Online மூலமாகவே Generate அல்லது Change செய்துகொள்ளலாம். இதை பற்றிய விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.

ATM Card சேவையானது அனைத்து வங்கி வாடிக்கையாளர்களாலும் பயன்படுத்தப்படும் தவிர்க்க முடியாத ஒன்றாகும். ATM சேவையின் மூலம் நாட்டில் எங்கிருந்தும் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியும்.

Debit Card-யை பயன்படுத்தி பணத்தை எடுக்கும் போது 4 இலக்க PIN Number மூலம் அங்கீகரிக்கப்படுகிறது. சரியான PIN Number-யை உள்ளிட்டு பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும் தற்போது சில E-Commerce பரிவர்தனைகளிலும் ATM PIN Number மூலம் அங்கீகரிக்கப்படுகின்றன.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் தங்களின் ATM PIN எண்ணை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதை யாருக்கும் தெரியப்படுத்த வேண்டாம். 

Why Change ATM  PIN Number

Debit Card PIN நம்பரை பாதுகாப்பு கருதி அவ்வப்போது மாற்றிக்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். உங்களின் ரகசிய பின் நம்பரானது மற்றவர்களுக்கு தெரிந்துவிட்டது என்று நீங்கள் உணர்ந்தால், உடனடியாக பின் நம்பரை மாற்றிவிடுவது நல்லது.

உங்களின் ATM பின் நம்பரை நீங்கள் மறந்திருக்கலாம். இதனால் புதிய PIN நம்பரை Generate செய்ய வேண்டியிருக்கும். 

நீங்கள் புதிய ATM Card-யை பெற்று அதற்கான பின் நம்பரை உருவாக்குவதாக இருக்கலாம்.

இவ்வாறு பல்வேறு காரணங்களால் ATM PIN நம்பரை Generate அல்லது Change செய்ய நேரிடலாம். இதற்காக SBI வங்கியானது வாடிக்கையாளர்களின் சிரமங்களை குறைக்க எளிமையான வழிகளை வழங்கியுள்ளது.

Read  SBI UPI Limit Exceeded Error: Why Showing this Error

SBI Debit Card PIN Change Online

SBI டெபிட் கார்டுகளின் பின் நம்பரை மாற்ற அல்லது உருவாக்க வங்கிக்கு செல்ல வேண்டியதில்லை. Online மூலமாகவே இந்த சேவையை பெற முடியும்.

Online மூலமாக SBI ATM Card இன் PIN Number-யை Generate அல்லது Change செய்வதற்கான சில வழிமுறைகளை பற்றி காணலாம்.

Method 1: Generate / Change ATM PIN Through Net Banking 

  • Online SBI என்ற இணையதளத்தை அணுகவும்.
  • உங்களின் SBI Net Banking சேவையை Login செய்யவும்.

Login SBI Net Banking

  • Login செய்தவுடன் E-Services என்பதை கிளிக் செய்யவும்.

Select E Services

  • இந்த பக்கத்தில் பலவிதமான சேவைகள் தோன்றும். அவற்றில் ATM Card Services என்பதை தேர்வு செய்யவும்.

Select ATM Card Services

  • ATM PIN Generation என்பதை கிளிக் செய்யவும்.

ATM PIN Generation

  • இப்பொழுது Using One Time Password (OTP) மற்றும் Using Profile Password என்ற இரண்டுவிதமான தேர்வுகள் இருக்கும். இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்க.

Select OTP For PIN Number Set

  • இங்கு OTP Option தேர்வு செய்யப்படுகிறது.
  • இப்போது உங்களின் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP Number-யை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.

Enter OTP and Submit

  • உங்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகள் இருந்தால், அதில் எந்த வங்கிக்கணக்குடன் உங்களின் ATM Link ஆகி உள்ளது என்பதை தேர்வு செய்ய வேண்டும். ஒரே வங்கிக்கணக்கு இருந்தால் அது தானாகவே தேர்வாகி இருக்கும்.

Select Account Number

  • தற்போது Active இல் உள்ள ATM அட்டைகளின் List தோன்றும். அதில் நீங்கள் PIN Number-யை மாற்ற நினைக்கும் கார்டை தேர்வு செய்க. 

Select Debit Card from list

  • நீங்கள் Set செய்ய நினைக்கும் பின் நம்பரில் முதல் 2 இலக்க எண்களை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்க.

Enter First 2 digit number

  • இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு  அடுத்த 2 இலக்க எண் வரும். இந்த பக்கத்தில் நீங்கள் முதலில் Enter செய்த 2 எண்கள் மற்றும் மொபைல் எண்ணிற்கு வந்த 2 எண்கள் என 4 இலக்க PIN நம்பரை Enter செய்து Submit செய்யவும்.
Read  How to Lock & Unlock SBI Net Banking Access in Online

Enter 4 Digit Pin Number

  • தற்போது உங்களின் 4 இலக்க PIN Number வெற்றிகரமாக Change செய்யப்பட்டது.

Pin Number Generated Successfully

Method 2: Generate / Change ATM PIN Through ATM Center

Generate One Time PIN (Green PIN)

  • உங்களுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு SBI ATM Center-க்கு செல்லவும்.
  • உங்களின் SBI ATM Card-யை Insert செய்யவும்.
  • PIN Generation என்பதை தேர்வு செய்க.

Select Pin Generation in atm machine

  • உங்களின் 11 இலக்க SBI Bank Account Number Enter செய்து Confirm என்பதை தேர்வு செய்க.

Enter Account Number

  • வங்கிக்கணக்கில் பதிவு செய்த 10 இலக்க மொபைல் நம்பரை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்க.

Enter Mobile Number

  • இப்போது திரையில் ஒரு செய்தி தோன்றும். அதற்கு கீழே உள்ள Confirm என்பதை அழுத்துக.

See Message then Confirm

  • இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும்.

Send otp your mobile number

Change ATM PIN

  • மீண்டும் உங்களின் ATM Card-யை Insert செய்யவும்.
  • Banking என்பதை தேர்வு செய்யவும்.

Select Pin Banking in atm machine

  • உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த One Time PIN (OTP) எண்ணை Type செய்யவும்.

Enter One Time PIN

  • PIN Change என்பதை தேர்வு செய்க.

Select PIN Change

  • புதிய PIN Number-யை Enter செய்யவும்.

Enter New PIN

  • பிறகு மீண்டும் PIN Number-யை Re-Enter செய்யவும்.
  • இப்பொழுது புதிய PIN Number வெற்றிகரமாக Change செய்யப்பட்டுவிடும்.

Method 3: SBI Debit Card (ATM) PIN Change  By Call Center (IVR)

SBI Call Center இன் மூலம் ATM PIN Number-யை Generate செய்ய முடியும். இந்த Call Center ஆனது 24*7 நேரமும் செயல்படக்கூடிய சேவையாகும்.

IVR சேவையின் மூலம் Debit Card PIN Number-யை Generate செய்யும் செயல்முறைகள் பின்வரும் :

Generate Green PIN 

  • உங்களின் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து 1800 112211 அல்லது 1800 425 3800 என்ற எண்ணிற்கு Call செய்யவும்.
  • IVR குரல் மூலம் சொல்லப்படுவதை கவனமாக கேட்டு சரியான தேர்வுகளை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்களின் ATM Card இன் 16 இலக்க எண்களை Enter செய்யவும்.
  • பிறகு Bank Account Number-யை Enter செய்யவும்.
  • இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு One Time PIN-யை பெறுவீர்கள்.
Read  How to Add Beneficiary in SBI Internet Banking

Generate New ATM PIN 

  • உங்களுக்கு அருகில் உள்ள SBI ATM Center-க்கு செல்லவும்.]
  • ATM Card-யை Insert செய்க.
  • Banking என்பதை தேர்வு செய்க.
  • ஏற்கனவே IVR மூலம் பெற்ற OTP எண்ணை Enter செய்யவும்.
  • PIN Change என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்பொழுது புதிய PIN நம்பரை Set செய்யலாம்.

Method 4: SBI ATM PIN Change By SMS 

உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து SMS அனுப்பியும் PIN நம்பரை மாற்றலாம்.

SMS அனுப்புவதற்கு தேவையான தகவல்கள் பின்வருமாறு :

அனைத்து தகவல்களையும் SMS வடிவில் பின்வருமாறு Type செய்து 567676 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

PIN<Space>Last 4 Digit ATM Number<Space>Last 4 Digit Bank Account Number 

Example: PIN 9875 6546

  • இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP நம்பரை பெறுவீர்கள்.
  • இப்போது அருகில் உள்ள State Bank of India ATM Center-க்கு செல்லவும்.
  • உங்களின் Debit Card-யை Insert செய்யவும்.
  • திரையில் தோன்றும் Banking என்ற தேர்வை Select செய்யவும்.
  • உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த தற்காலிக PIN நம்பரை உள்ளிடவும்.
  • PIN Change என்ற Option-யை தேர்வு செய்து புதிய PIN Number-யை Set செய்யலாம்.

குறிப்பு: மொபைல் எண்ணிற்கு வந்த OTP ஆனது 48 மணிநேரம் மட்டுமே செல்லுபடியாகும். ஒருவேளை 48 மணி நேரத்திற்குள் ATM நிலையத்திற்கு சென்று PIN-யை Set செய்யவில்லை என்றால், மறுபடியும் OTP எண்ணை உருவாக்க வேண்டும்.

மேற்கண்ட நான்கு வழிமுறைகளில் ஏதாவது ஒரு வழிமுறையை செயல்படுத்தி SBI Debit Card PIN நம்பரை Online இல் Change செய்யலாம். இதை பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்:

2 thoughts on “How to Generate / Change SBI Debit Card PIN Number Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole