What is SBI Green Remit Card: How to Apply & Use Remit Card
SBI வங்கியானது தனது வாடிக்கையாளர்களுக்கு Green Remit Card-யை வழங்குகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் Non-Home Branch-லும் தங்களின் வங்கிக்கணக்கில் பணத்தை Deposit செய்ய முடியும். இதை பற்றிய முழுமையான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.
Table of Contents
What is SBI Green Remit Card?
Green Remit Card என்பது PIN Number இல்லாமல் பயன்படுத்தும் காந்த பட்டை அடிப்படையிலான ஒரு எளிய கார்டு ஆகும். இது State Bank of India வங்கியால் காகிதமற்ற பேங்கிங்யை நோக்கமாக கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
நியமிக்கப்பட்ட பயனாளியின் SBI வங்கிக்கணக்கில் கிரீன் ரெமிட் கார்டை பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.
ஒரு பயனாளியின் வங்கிக்கணக்கில் Cash Deposit Machine (CDM) மூலம் பணத்தை டெபாசிட் செய்வதற்கு SBI Green Remit Card-யை பயன்படுத்தலாம்.
மேலும் வங்கியில் உள்ள Green Counter Channel (GCC) மூலம் Non-Home Branch வங்கிக்கணக்கில், பணத்தை Deposit செய்ய இந்த அட்டையை பயன்படுத்தலாம்.
பொதுவாக சாதாரண வங்கிக்கிளை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது 2 முதல் 4 நிமிடங்கள் ஆகும். ஆனால் Green Counter Channel மூலம் அனுப்பப்படும் பரிவதார்த்தனைகள் ஒரு நிமிடத்திற்கும் குறைவு ஆகும்.
Eligibility
அனைத்து SBI வாடிக்கையாளர்களும் கிரீன் ரெமிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
SBI வங்கியில் கணக்கு இல்லாதவர்கள், சீரான இடைவெளியில் SBI கணக்கிற்கு பணத்தை அனுப்ப விரும்புகிறவர்கள் இந்த கார்டை பெறலாம்.
How to Apply For Green Remit Card
வாடிக்கையாளர்கள் SBI GCC கிளை அல்லது CDM கிளையில் சென்று ஒரு எளிய விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் ஏதாவது ஒரு அடையாள சான்றை இணைக்க வேண்டும்.
நீங்கள் விண்ணப்பத்தை சமர்பித்தவுடன், ஒரு கிரீன் ரெமிட் கார்டை எடுத்து நீங்கள் கோரிய வங்கிக்கணக்குடன் Mapping செய்யப்படும்.
இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கிரீன் ரெமிட் கார்டை ஒரு SBI வங்கிக் கணக்கிற்கு மட்டுமே வாங்க முடியும்.
அட்டை வழங்குவதற்கு கட்டணமாக Rs.20 செலுத்த வேண்டும். பிறகு உடனடியாக அட்டை உங்களுக்கு வழங்கப்படும்.
How to Deposit Money Using SBI Green Remit card
நீங்கள் கிரீன் ரெமிட் கார்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கீழே விளக்கப்பட்டுள்ளது.
- முதலில் ஏதாவது ஒரு SBI GCC அல்லது CDM அணுகவும்.
- உங்களின் Green Remit Card-யை இயந்திரத்தில் Swipe செய்யவும்.
- இப்பொழுது இயந்திரத்தின் திரையில் வங்கிக்கணக்கு விவரங்களை காண முடியும்.
- SBI கணக்கில் செலுத்த வேண்டிய தொகையை உள்ளிட்டு, உங்களிடம் இருக்கும் பணத்தை Deposit செய்ய வேண்டும்.
- உங்களின் பரிவர்த்தனை முடிந்த பிறகு அதற்கான Aknowledgement சீட்டு வரும்.
- பரிவர்த்தனை வெற்றியடைந்தவுடன் பயனாளி மற்றும் செலுத்துபவர் ஆகிய இருவரும் SMS செய்தியை பெறுவார்கள்.
- பண பரிவர்த்தனை நிறைவடைந்த பிறகு பயனாளியின் கணக்கு புதுப்பிக்கப்படும்.
இந்த அட்டையின் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக Rs.25,000 வரை டெபாசிட் செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு Rs.1 lakh வரை டெபாசிட் செய்யலாம்.
ஒரு ரெமிட் கார்டை கொண்டு ஒருவருக்கு மட்டுமே பணத்தை அனுப்ப முடியும்.
கிரீன் ரெமிட் கார்டை பயன்படுத்தி ரொக்க பணத்தை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும். இந்த அட்டையினை பயன்படுத்தி பணத்தை Withdrawal செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- How to Apply SBI ATM Card Online
- SBI Cash Deposit Machine
- SBI Cash Withdrawal Without ATM Card
- How to Change Mobile Number in SBI Account