SBI Bank has Introduced OTP to Login to Internet Banking
SBI வங்கியானது Internet Banking யை Login செய்வதற்கு OTP முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது SBI இணைய வங்கிச்சேவையின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்துகிறது. இதை பற்றிய தகவலை இந்த பதில் காணலாம்.
SBI வங்கியானது இணைய வங்கிச்சேவை மற்றும் மொபைல் வங்கிச்சேவையை வழங்குவதில் இந்தியாவிலேயே முன்னணி வங்கியாக திகழ்கிறது.
State Bank of India வழங்கும் இந்த ஆன்லைன் வசதிகளை பயன்படுத்தும்போது, நீங்கள் பெரும்பாலும் வங்கிக்கிளைக்கு போக வேண்டிய தேவை இருக்காது. ஏனெனில் பெரும்பாலான வங்கிசேவைகள் ஆன்லைன் மூலமாகவே கிடைப்பதால் வங்கிக்கிளைக்கு போக வேண்டிய அவசியம் இருக்காது.
SBI இணைய வங்கிச்சேவையில் வழங்கும் சில வசதிகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்.
- உங்களின் கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு Money Transfer செய்தல்
- Beneficiary Add செய்தல்
- மொபைல் நம்பர் மற்றும் ஈமெயில் ஐடி யை மாற்றுதல்
- புதிய ATM Card க்கு Apply செய்தல்
- ATM Card க்கு PIN Number யை மாற்றுதல்
- வங்கிக்கிளையை மாற்றுதல்
- Demand Draft (DD) எடுத்தல்
- UPI பரிவர்த்தனைகளை Enable/ Disable செய்தல்
- Mini Statement எடுத்தல்
- RD மற்றும் FD கணக்கை திறத்தல்
இதுபோன்ற இன்னும் பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் பெற முடியும்.
மேற்கண்ட வசதிகள் அனைத்தும் நீங்கள் SBI Internet Banking யை Login செய்தலே பெறமுடியும்.
SBI Internet Banking OTP Based Login
இதற்க்கு முன்பு வரைக்கும் நீங்கள் இணைய வங்கிச்சேவையை Login செய்ய வேண்டுமென்றால், Username மற்றும் Password யை உள்ளிட்டலே போதுமானது ஆகும்.
தற்போது இணைய வங்கிச்சேவையின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு, SBI வங்கி ஒரு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அது தான் OTP அடிப்படையில் Login செய்வது ஆகும்.
இதற்காக நீங்கள் எதுவும் செய்ய தேவையில்லை. நீங்கள் ஏற்கனவே உங்களின் Internet Banking யை Login செய்வதற்கு Username மற்றும் Password யை Enter செய்தால் Open ஆகிவிடும்.
ஆனால் இனிமேல் நீங்கள் Username மற்றும் Password யை Enter செய்து Login என்பதை கிளிக் செய்தவுடன், உங்களின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும்.
அந்த OTP Number யை Enter செய்தால் மட்டுமே உங்களால் இணைய வங்கிச்சேவையை பயன்படுத்த முடியும். இதன் மூலம் உங்களின் யூசர்நேம் மற்றும் கடவுச்சொல் ஆகியவை மற்றவர்களுக்கு தெரிந்தாலும் அவர்களால் Open செய்ய முடியாது.
ஏனெனில் இந்த OTP Login ஆனது, உங்களின் இணைய வங்கிச்சேவைக்கு இரண்டாவது காரணி அங்கீகாரம் (Second Factor Authentication) மூலம் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
இந்த கட்டுரையில் SBI வங்கி அறிமுகப்படுத்திய புதிய வசதியை பற்றி தெரிந்து கொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களை Notification களாக பெறுவதற்கு கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளவும்.