SBI Online

SBI Internet Banking சேவையை Online-ல் Open செய்வது எப்படி

உங்களின் Savings Bank Account-யை மொபைல் அல்லது கணினி மூலம் இயக்கும்போது, வங்கி தொடர்புடைய வேலைகளை எளிமையாகவும், விரைவாகவும் செய்யலாம். அதாவது பண பரிமாற்றம், புதிய ATM Card -க்கு Apply செய்தல், மொபைல் எண்ணை மாற்றுதல், Recurring Deposit மற்றும் Fixed Deposit கணக்கினை திறத்தல் இதுபோன்ற பல வசதிகளை பெறமுடியும்.

இந்த வசதிகளை வங்கிகள் வழங்கும் Internet Banking சேவையை பயன்படுத்தி பெறலாம்.

Internet Banking Service

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும், அந்த வங்கிகள் வழங்கும் பலவிதமான Online சேவைகளை பயன்படுத்துவார்கள். வங்கிகளின் ஆன்லைன் சேவைகளை பயன்படுத்தும்போது அது நமக்கு நேரத்தை குறைப்பதாக இருக்கும்.

எடுத்துக்காட்டாக, இதற்க்கு முன்பு வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை எடுக்கவேண்டும் என்றால், வங்கியில் சென்று பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி, பிறகு அதை வரிசையில் நின்று காத்திருந்து எடுக்க வேண்டும்.

ஆனால், தற்போது வங்கிகள் கொடுக்கும் ATM சேவைகளை பயன்படுத்தி பணத்தை விரைவாகவும் எளிமையாகவும் எடுக்கலாம். இதனால் நாம் பெருமளவு நேரத்தை சேமிக்கலாம்.

மேலும் வங்கிகள் வழங்கும் Internet Banking சேவையின் மூலம் பல்வேறு சேவைகளை வீட்டில் இருந்தே பெறலாம். அதாவது ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணத்தை Transfer செய்தல், புதிய ATM கார்டுக்கு Apply செய்தல், ATM PIN நம்பரை உருவாக்குதல் மற்றும் பணத்தை பல திட்டங்களில் முதலீடு செய்தல் போன்ற பல சேவைகளை Internet Banking சேவை மூலம் பெறலாம்.

SBI வங்கியில் Internet Banking சேவையை Online மூலமாக எப்படி Open செய்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.

How to Open SBI Internet Banking Service Online

பின்வரும் செயல்முறையை பயன்படுத்தி SBI வங்கியில் Internet Banking Service -யை Open செய்யலாம் 

Step 1: முதலில் https://retail.onlinesbi.com/retail/login.htm# என்ற SBI-ன் இணையவங்கி வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும். அதில் உள்ள New User என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

SBI Internet Banking Service                                        SBI Internet Banking Service

Read  How to Generate / Change SBI Debit Card PIN Number Online

Step 2: New User என்பதை கிளிக் செய்தவுடன் மேலே ஒரு Popup Window ஓபன் ஆகும். அதில் உள்ள OK என்ற பட்டனை கிளிக் செய்க.

SBI InternetBanking

Step 3: இப்பொழுது இன்னொரு popup Window திறக்கும். அதில் ஏற்கனவே New User Registration என்பது தேர்வாகி இருக்கும். இப்போது கீழே இருக்கும் Next என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

SBI InternetBanking

Step 4: இந்த இணைய பக்கத்தில் அதில் கேட்கப்பட்டுள்ள Account Number,CIF Number,Branch Code,Mobile Number போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும். இதில் CIF நம்பர் ஆனது  வங்கியின்  Passbook-ல் இருக்கும்.

Step 5: Facility Required என்ற இடத்தில் Full Transaction Rights என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதில் அனைத்து தகவல்களும் கொடுத்த பின்னர் Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

SBI Internet Banking

Step 6: இப்பொழுது உங்களின் பதிவு செய்த Mobile Number-க்கு OTP Number வரும். அதை இந்த Box-ல் Enter செய்து Confirm என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும். ஒருவேளை உங்கள் Mobile எண்ணிற்கு OTP வரவில்லை என்றால் Click here resend the OTP  என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

SBI InternetBanking Service

Step 7: இதில் முதலில் உள்ள I have ATM Card என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதை தேர்வு செய்தால் நீங்கள் வங்கிக்கு போகாமல் ATM Card தகவல்களை கொண்டு இணையவங்கி சேவையை Activate செய்யலாம்.

Step 8: உங்களிடம் ATM Card இல்லையென்றால் இரண்டாவதாக உள்ள I do not my ATM Card என்பதை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் இதை தேர்வு செய்யும் பட்சத்தில் வங்கிக்கு சென்று தான் Activate செய்ய முடியும்.

Step 9: பெரும்பாலும் அனைவரிடமும் ATM Card இருப்பதால் முதல் தேர்வை கிளிக் செய்து Submit என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

SBI InternetBanking Service

Step 10: உங்களின் ATM Card குறித்த தகவல்களை இதில் நிரப்ப வேண்டும். ATM Card Number, Expiry Date, ATM Card Holder Name, ATM PIN போன்றவற்றை நிரப்ப வேண்டும். 

SBI Internet Banking Service

குறிப்பு:

இந்த இணையதளம் SBI வங்கியின் உண்மையான தளம் என்பதால் இதில் கொடுக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பானது ஆகும்.மேலும் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் அனைத்தும் சரிபார்ப்புக்கு மட்டுமே பயன்படுத்துவதால் எந்த அச்சமும் தேவையில்லை.

Read  How to Add Nominee in SBI Account Online: Step by Step Guide
Login Password 

Step 11: உங்களின் Internet Banking சேவையை Open செய்வதற்கான Username மற்றும் Password போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதை பயன்படுத்தி மட்டுமே இணையவங்கி சேவையை Open செய்ய முடியும்.

Step 12: Username என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமானதை கொடுக்கலாம். நீங்கள் கொடுக்கும் Username எழுத்துக்களாகவோ, எண்களாகவோ அல்லது இரண்டும் கலந்தோ இருக்கலாம். Example :SELVAMANI, selvamani, Selvamani654

Step 13: உங்களின் Username-யை தேர்ந்தெடுத்தப்பின் அதை உள்ளிட்டு அதற்க்கு கீழே உள்ள Check username availability என்பதை கிளிக் செய்யவேண்டும்.

Step 14: நீங்கள் கொடுத்த Username வேறுயாரும் பயன்படுத்தவில்லை எனில் available என்று வரும்.எனவே இந்த Username-யை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Step 15: ஒருவேளை நீங்கள் கொடுத்த Username வேறு யாராவது பயன்படுத்திக் கொண்டு இருந்தால் நீங்கள் அதை பயன்படுத்த முடியாது. இதனால் நீங்கள் வேறு ஒரு Username-யை கொடுத்து மீண்டும் Check செய்ய வேண்டும்.

Step 16: New Login Password என்னும் இடத்தில் உங்களுக்கு வேண்டிய Password-யை கொடுக்க வேண்டும்.

Step 17: பிறகு Confirm Login Password என்ற இடத்தில் அதே Password-யை மீண்டும் கொடுக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் Password ஆனது Letters, Numbers, Symbol போன்றவை அனைத்தும் கலந்து இருக்க வேண்டும்.  Example: GJi!765klG 

Step 18 : Password-யை கொடுத்தபின்பு i accept the Terms and Conditions என்பதை டிக் செய்து Submit-யை அழுத்த வேண்டும்.

SBI InternetBanking

Step 19: இப்பொழுது உங்கள் Internet Banking சேவையை Open செய்துவிட்டீர்கள். இனி நீங்கள் SBI வங்கியின் இணையவங்கி சேவையை பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 

SBI InternetBanking

குறிப்பு:

உங்களின் Username மற்றும் Password-யை யாருக்கும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிந்தால் அவர்களும் உங்களது Internet Banking சேவையை Open செய்ய முடியும்.

Profile Password:

உங்களின் SBI Internet Banking சேவையை வெற்றிகரமாக Open செய்துவிட்டு முதல் முறையாக Login செய்யும் போது Profile Password-யை Set செய்ய வேண்டியதிருக்கும்.

உங்களின் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சலை மாற்றுதல், Beneficiary Add செய்தல் மற்றும் புதிய ATM Card-க்கு Apply செய்தல் போன்ற பலவற்றிர்க்கு இந்த Profile Password ஆனது தேவைப்படும். எனவே இந்த Profile Password-யையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

Read  SBI KYC New Update: வங்கிக்கு போகாமல் KYC சமர்ப்பிக்கலாம்

நீங்கள் Profile Password-யை Set செய்யும்போது ஏற்கனவே Set செய்த Login Password-யை கொடுக்கக்கூடாது. வேறு ஒரு புதிய Password-யை தான் கொடுக்கவேண்டும். அதாவது Login Password மற்றும் Profile Password ஒன்றாக இருக்ககூடாது.

மேலும் Profile Password-யை Set செய்யும்போது Hint Question என்று ஒன்று வரும். அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதற்கான விடையையும் கீழே உள்ள Box-ல் கொடுக்கவேண்டும். இது எதற்கு என்றால் ஒருவேளை நீங்கள் Profile Password-யை மறந்துவிட்டால் இந்த Option-யை பயன்படுத்தி புதிய Profile Password-யை உருவாக்கலாம்.

இணைய வங்கி சேவையை பயன்படுத்தினால் பெரும்பாலும் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது. ஆனால், அதேநேரத்தில் இணைய வங்கிசேவையை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். வங்கிகளின் இணையவங்கி தளங்களில் கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தகவல்களை முழுமையாக அறிந்துகொண்டு விழிப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும்.

SBI Internet Banking FAQs 

1. SBI Internet Banking சேவையை Open செய்ய என்னென்ன தேவை ?

  • வங்கிக்கணக்கு குறித்த தகவல்கள் (Account Number, CIF Number, Branch Code)
  • வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் 
  • ATM Card 

2. SBI இணையவங்கி பாதுகாப்பானதா ?

வங்கி உங்களின் தகவல்களை பாதுகாக்க மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. User ID, Password, OTP மற்றும் பிற தகவல்கலின் மூலம் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

3. SBI இணையவங்கி Activate ஆக எவ்வளவு நேரம் பிடிக்கும் ?

தனிநபர் கணக்கில் இணைய வங்கி சேவையை திறக்கும் போதே ATM Card தகவல்களை கொடுப்பதால் உடனடியாக Activate ஆகிவிடும். உங்களிடம் ATM Card இல்லையென்றால் வங்கிக்கிளைக்கு சென்று Activate செய்யலாம்.

4. Net Banking -யை மொபைல் மற்றும் கணினில் பயன்படுத்த முடியுமா ?

மொபைல் மற்றும் கணினி ஆகிய இரண்டிலும் Net Banking -யை பயன்படுத்தலாம்.

5. Username மற்றும் Password -யை மறந்துவிட்டால் என்ன செய்வது?

Username மற்றும் Password -யை மறந்துவிட்டால் அதை மீட்டமைத்துக்கொள்ளலாம்.

6. இணைய வங்கி மூலம் புதிய ATM அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா?

முடியும். சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் புதிய ATM அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

7. ஆன்லைன் மூலம் மற்றவர்களுக்கு பணத்தை அனுப்பலாமா?

எந்தவொரு வங்கிக்கணக்கிற்கும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்ப முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest