SBI Online

SBI KYC New Update: வங்கிக்கு போகாமல் KYC சமர்ப்பிக்கலாம்

தற்போது நோய் பெருந்தோற்று காரணமாக அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இதனால் SBI வாடிக்கையாளர்கள் KYC Update செய்யும் Documents களை Post அல்லது Registered Email மூலம் அனுப்பினால், அது ஏற்றுக்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. இதை பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

வங்கிகளில் எந்தவொரு கணக்கை தொடங்கினாலும் அதற்க்கு KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வங்கிகளில் குறிப்பிட்ட சேவைகளை பெறுவதற்கும் KYC அவசியமாகும்.

முதலில் இந்த KYC என்றால் என்ன என்பதை பார்ப்போம்.

KYC என்பதின் முழு விரிவாக்கம் Know Your Customer (வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல்) ஆகும். 

ஒரு கணக்கை திறக்கும்போது மற்றும் அவ்வப்போது காலப்போக்கில் வாடிக்கையாளரின் அடையாளத்தை அடையாளம் கண்டு ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய கட்டாய செயல்முறை ஆகும்.

SBI வங்கியானது சமீபத்தில் ஒரு அறிவிப்பைவெளியிட்டது. அதில் வாடிக்கையாளர்கள் KYC Update செய்ய வேண்டியதிருந்தால் அதை 31-மார்ச்-2021 க்குள் Update செய்ய வேண்டும். அப்படி அப்டேட் செய்ய தவறும் வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கை பகுதி முடக்கம் (Partial Freeze) செய்யப்படும் என்று கூறியுள்ளது.

ஒருவேளை உங்களின் வங்கிக்கணக்கை பகுதி முடக்கம் செய்யப்பட்டால் பரிவர்த்தனைகள், பணத்தை திரும்ப பெறுதல், SBI Mobile Banking மற்றும் Internet Banking இல் போன்ற சேவைகளை பெறுவதில் சிரமங்கள் ஏற்படலாம்.

Read  How to Change Mobile Number in SBI Bank Account Online

எனவே SBI இல் KYC Details யை Update செய்துவிட்டால் வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கை எவ்வித சிரமமும் இன்றி தொடர்ந்து பயன்படுத்தலாம்.

SBI இல் KYC Update செய்யும் Documents யை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

இதற்க்கு முன்பு வரைக்கும் SBI வாடிக்கையாளர்கள் தங்களின் KYC ஆவணங்களை வங்கிக்கிளைக்கு சென்று தான் Submit செய்ய வேண்டும். 

ஆனால் இன்றைய அசாதாரண சூழலால் வங்கிக்கிளைக்கு சென்று சமர்ப்பிப்பது மிகவும் சிரமமாக இருக்கும். எனவே வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு KYC ஆவணங்களை வீட்டில் இருந்தே Submit செய்யுமாறு அறிவித்துள்ளது.

SBI New KYC Update in Tamil

வங்கிக்கிளைக்கு ஆவணங்களை அனுப்புவதற்கு கீழே உள்ள இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

1. Registered Email 

2. Post 

1. Registered Email 

உங்களின் SBI Bank Account இல் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் (Email) மூலம் சம்மந்தப்பட்ட ஆவணங்களை அனுப்பலாம்.

இதற்க்கு நீங்கள் முதலில் KYC ஆவணங்களின் நகல்களில் சுய கையொப்பம் (Self Attested) போட வேண்டும். பிறகு அதை Scanner அல்லது Mobile மூலம் Scan செய்து, உங்களின் ஈமெயில் மூலம் அனுப்ப வேண்டும்.

Read  SBI Internet Banking Password-யை Reset செய்வது எப்படி

எந்த மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்?

இதை உங்களின் SBI Branchஇன் மின்னஞ்சலுக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.

உங்களின் SBI வங்கிக்கிளையின் மின்னஞ்சல் தெரியவில்லையா? கவலை வேண்டும். இது உங்களின் SBI Passbook இன் முதல் பக்கத்தில் Print செய்யப்பட்டிருக்கும். அல்லது இணையதளத்தில் தேடினாலே இதை பற்றிய விவரங்கள் வரும்.

நீங்கள் மின்னஞ்சலை அனுப்பும்போது உங்களின் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலில் இருந்து மட்டுமே அனுப்ப வேண்டும். ஒருவேளை பதிவு செய்யப்படாத மின்னஞ்சலில் இருந்து அனுப்பினால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

2. Post 

இரண்டாவதாக Post மூலமாகவும் உங்களின் ஆவணங்களை அனுப்பலாம்.

தேவையான ஆவணங்களின் நகல்களில் சுய கையொப்பம் இட்டு அதை Post மூலமாக உங்களின் வங்கிக்கிளைக்கு அனுப்பலாம்.

மேற்சொன்ன இரண்டு வழிகளில் ஏதாவது ஒன்றின் மூலம் ஆவணங்களை அனுப்பலாம்.

யாரெல்லாம் KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

பொதுவாக ஒருவர் வங்கிக்கணக்கினை ஆரம்பிக்கும் போதே KYC ஆவணங்களை சமர்ப்பித்து தான் Open செய்கிறார்கள். எனவே SBI வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவருமே KYC ஆவணங்களை சமர்ப்பிக்க தேவை இல்லை.

சிலர் கணக்கை Open செய்து நீண்ட காலம் அதை பயன்படுத்தாமல் இருப்பார்கள். இதனால் அவர்களின் கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்டு இருக்கும். அவர்கள் இந்த ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே அதை மீட்டெடுக்க முடியும்.

Read  How to Withdraw Money From SBI ATM

சிலவகையான கணக்குகளை Open செய்யும் வாடிக்கையாளர்கள், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது KYC ஆவணங்களை Update செய்ய வேண்டியதிருக்கலாம். அவ்வாறான வாடிக்கையாளர்களும் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

SBI வாடிக்கையாளர்கள் KYC ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதிருந்தால், அந்த செய்தியை SMS மற்றும் Email மூலமாக பெறுவார்கள். ஒருவேளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டியதிருந்தால், SBI வங்கி தரப்பிலிருந்து SMS மூலம் தெரிவித்திருப்பார்கள்.

எனவே நீங்கள் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை.

KYC இல் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்?

பொதுவாக அடையாள சான்று, முகவரி சான்று மற்றும் பான் கார்டை சமர்ப்பித்தால் போதுமானது ஆகும்.

Voter Card, Driving License, Passport மற்றும் ஆதார் Card போன்ற இன்னும் பல ஆவணங்கள் உள்ளன. இவற்றில் அடையாள மற்றும் முகவரி சான்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஆவணங்களை அனுப்பவும்.

இவற்றில் ஆதார் அட்டையானது, அடையாள சான்று மற்றும் முகவரி சான்று ஆகிய இரண்டிற்கும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனவே KYC ஆவணங்களுக்கு ஆதார் அட்டை மற்றும் பான் அட்டை இந்த இரண்டையும் எடுத்துக்கொள்ளலாம்.

இதை பற்றி மேலும் உங்களுக்கு தகவல் தேவைப்பட்டால் SBI Customer Care க்கு தொடர்பு கொண்டு அவர்களிடம் கேட்கலாம்.

இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் இது போன்ற பல பயனுள்ள கட்டுரைகளை வெளியிடும்போது, அதை நீங்கள் அறிவிப்புகளாக பெறுவதற்கு கீழே மூலையில் உள்ள Bell பட்டனை கிளிக் செய்து Subscribe செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole