SBI Passbook Printing: How to Print Your Passbook in Machine
State Bank of India (SBI) ஆனது ஆன்லைன் வங்கிச் சேவைகளை வழங்குவதில் முதன்மை வகிக்கிறது. SBI வழங்கும் பல்வேறு ஆன்லைன் சேவைகளில் Passbook Printing செய்யும் வசதியும் ஒன்றாகும். நீங்கள் உங்களின் SBI Passbook-யை வங்கிக்கு போகாமல், Passbook Printing Machine மூலம் Print செய்ய விரும்புகிறீர்களா? அதற்கான செயல்முறைகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
வங்கி பாஸ்புக் என்பது ஒரு வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் நடக்கும் பண பரிவர்த்தனைகளை தெரிந்துகொள்வதற்கு, வங்கி சார்பில் வழங்கப்படும் புத்தகமாகும்.
வங்கிகளில் பாஸ்புக்கை Enter செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால் SBI வங்கியானது இந்த குறையை போக்க, தானாகவே பாஸ்புக்கை Enter செய்யும் இயந்திரங்களை செயல்படுத்துகிறது. இதனால் பாஸ்புக்கை Update செய்ய நீண்ட நேரம் காத்திருப்பதை தடுக்கிறது.
Table of Contents
How to Work Passbook Printing Machine
உங்களுடைய SBI Passbook-யை வங்கியில் கொடுத்து Barcode Sticker-யை ஒட்டிக்கொள்ள வேண்டும். Barcode Sticker ஒட்டிய பாஸ்புக்கை Automatic Passbook Printer இல் Insert செய்யும்போது, அது தானாகவே உள்ளே இழுக்கப்பட்டுவிடும்.
பாஸ்புக்கில் உள்ள Barcode தானியங்கி இயந்திரத்தால் படிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிக்கணக்குடன் இணைக்கும்.
பிறகு அந்த வங்கிக்கணக்கின் பரிவர்த்தனைகளை பாஸ்புக்கில் Print செய்ய ஆரம்பிக்கும். இவ்வாறு தான் அந்த தானியங்கி இயந்திரம் வேலை செய்கிறது.
How to print your passbook at SBI Swayam kiosk Machine
- உங்களின் பாஸ்புக்கிற்கு பார்கோடு இல்லையென்றால், அதை வங்கியில் சென்று ஒட்டிக்கொள்ளவும்.
- தானியங்கி இயந்திரத்தின் திரையில் மொழியை தேர்வு செய்யும் Option இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும்.
- உங்களின் காலியான பாஸ்புக் பக்கத்தை இயந்திரத்தில் Insert செய்யவும்.
- இப்பொழுது பாஸ்புக் தானாகவே உள் இழுக்கப்பட்டு Print செய்ய தொடங்கும்.
- பரிவர்த்தனை விவரங்களை Print செய்த பிறகு, புத்தகம் வெளியே தள்ளப்படும்.
How to View Your Passbook in Mobile
- SBI Yono Lite App-யை Login செய்யவும்.
- My Accounts என்பதை கிளிக் செய்க.
- mPassbook என்ற Option-யை தேர்வு செய்யவும்.
- பிறகு View mPassbook > Account Number-யை கிளிக் செய்க.
- இப்பொழுது உங்களின் mPassbook இல் மொத்த Transaction தகவல்களும் தெரிவதை காணலாம்.
- Refresh என்பதை கிளிக் செய்வதின் மூலம் உங்களின் சமீபத்திய Transaction-களை Update செய்யலாம்.
மேற்சொன்ன தகவல்கள் உங்களின் வங்கி பரிவர்த்தனைகளை பற்றி தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.
தொடர்புடைய கட்டுரைகள்: