SBI Saving Account Minimum Balance and Penalty Charges
SBI வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்குகளில் Minimum Balance-யை பராமரிக்க வேண்டும். அவ்வாறு குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வங்கிக்கணக்குகளில் அதற்கான Penalty Charge வசூல் செய்யப்படுகிறது.
Minimum Balance-யை பராமரிக்காத வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் விதிக்கும் முறையை கொண்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர்.
அபராத தொகை அதிகமாக இருந்ததால் இதற்க்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு நிபுணர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை ஏற்று SBI வங்கி 75% வரை அபராத தொகையினை குறைத்து.
Table of Contents
SBI Average Monthly Balance (AMB)
வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் கணக்கில் Average Monthly Balance-யை Maintain செய்ய வேண்டும்.
இந்த AMB தொகையானது வங்கிகள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மாறுபடும். அதாவது Metro, Urban, Semi-Urban, Rural போன்ற இடங்களுக்கு தகுந்தவாறு மாறுபடும்.
SBI Minimum Balance For Metro and Urban Branches
மெட்ரோ மற்றும் நகரங்களில் உள்ள SBI வங்கிகளில், குறைந்தபட்ச இருப்பு தொகையாக Rs.3000 பராமரிக்க வேண்டும்.
Penalty Charges For SBI Metro/Urban Branches
AMB தொகை 50%-க்கும் அதிகமாக இருக்கும்போது,
அதாவது Rs.3000-க்கு குறைவாகவும் மற்றும் Rs.1500-க்கு அதிகமாகவும் இருந்தால் அதற்கு Rs.10 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
AMB தொகை 50%-லிருந்து 75% வரை குறைவாக இருக்கும்போது,
அதாவது Rs.1500-க்கும் குறைவாகவும் மற்றும் Rs.750-க்கு அதிகமாகவும் இருந்தால் அதற்கு Rs.12 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
AMB தொகை 75%-க்கும் குறைவாக இருக்கும்போது,
அதாவது Rs.750-க்கு குறைவாக இருந்தால் அதற்கு Rs.15 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
SBI Minimum Balance For Semi-Urban Branches
அரை நகர்புறங்களில் உள்ள SBI வங்கிகளில், குறைந்தபட்ச இருப்பு தொகையாக Rs.2000 பராமரிக்க வேண்டும்.
Penalty Charges For SBI Semi-Urban Branches
AMB தொகை 50%-க்கும் அதிகமாக இருக்கும்போது,
அதாவது Rs.2000-க்கு குறைவாகவும் மற்றும் Rs.1000-க்கு அதிகமாகவும் இருந்தால் அதற்கு Rs.7.50 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
AMB தொகை 50%-லிருந்து 75% வரை குறைவாக இருக்கும்போது,
அதாவது Rs.1000-க்கும் குறைவாகவும் மற்றும் Rs.500-க்கு அதிகமாகவும் இருந்தால் அதற்கு Rs.10 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
AMB தொகை 75%-க்கும் குறைவாக இருக்கும்போது,
அதாவது Rs.500-க்கு குறைவாக இருந்தால் அதற்கு Rs.12 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
SBI Minimum Balance For Rural Branches
கிராம புறங்களில் உள்ள SBI வங்கிகளில், குறைந்தபட்ச இருப்பு தொகையாக Rs.1000 பராமரிக்க வேண்டும்.
Penalty Charges For SBI Rural Branches
AMB தொகை 50%-க்கும் அதிகமாக இருக்கும்போது,
அதாவது Rs.1000-க்கு குறைவாகவும் மற்றும் Rs.500-க்கு அதிகமாகவும் இருந்தால் அதற்கு Rs.5 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
AMB தொகை 50%-லிருந்து 75% வரை குறைவாக இருக்கும்போது,
அதாவது Rs.500-க்கும் குறைவாகவும் மற்றும் Rs.250-க்கு அதிகமாகவும் இருந்தால் அதற்கு Rs.7.50 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
AMB தொகை 75%-க்கும் குறைவாக இருக்கும்போது,
அதாவது Rs.250-க்கு குறைவாக இருந்தால் அதற்கு Rs.10 + GST கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஒரு வங்கிக்கிளையானது மெட்ரோ, Urban, Semi-Urban அல்லது Rural என எவ்வாறு தெரிந்து கொள்வது ?
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கிளை எந்த வகையை சேர்ந்தது என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி காணலாம்.
- முதலில் dbie.rbi.org.in என்ற இணையதளத்தை அணுக வேண்டும்.
- இதில் மாநிலம், மாவட்டம் மற்றும் வங்கியின் பெயர் ஆகியவற்றை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு Submit என்பதை கிளிக் செய்க.
- இப்பொழுது அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளும் வரிசையில் தோன்றும்.
- அதில் உங்களின் வங்கிக்கிளையை கண்டுபிடித்த பின்பு Population Group என்ற இடத்தில் உங்கள் வங்கிக்கிளையின் வகையை காணலாம்.
வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்குகளில் சரியான Minimum Balance-யை பராமரித்தால், தேவையற்ற அபராதங்களை தவிர்க்கலாம். ஒருவேளை குறைந்தபட்ச தொகையை பராமரிக்க முடியவில்லை என்றால் Zero Balance சேமிப்பு கணக்காக மாற்றிக்கொள்ளலாம்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- How to Open SBI Saving Account Online
- SBI Internet Banking Online
- NEFT, RTGS, IMPS Transactions
- How to Change Mobile Number in SBI Online