SBI Saving Bank : Service Charges and Fees List – Tamil

State Bank of India (SBI) வங்கியானது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு இலவச வங்கி சேவைகளை வழங்குகிறது. இருப்பினும், அனைத்து சேவைகளும் இலவசமாக வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட சில வங்கி சேவைகளுக்கு Service Charges-யை வசூலிக்கின்றன.

வாடிக்கையாளர்கள் பரிவர்தணை மற்றும் சில வங்கி சேவைகளை பயன்படுத்தும்போதும் கட்டண விதிகள் தெரியாததால் பணத்தை இழக்கின்றனர். 

எனவே, SBI வங்கியானது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் சேவை கட்டணங்களை  (Service Charges) பற்றி தெரிந்துகொள்வது நல்லதாகும்.

SBI Saving Bank Service Charges

SBI சேமிப்பு வங்கியின் சில முக்கிய சேவை கட்டணங்களை பற்றி கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

ATM withdrawal

எஸ்.பி.ஐ வங்கியில் ATM Card-ன் மூலமாக பணத்தை Withdrawal செய்யும்போது, ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 10 முறை மட்டுமே எடுக்க முடியும்.

ஸ்டேட் பேங்க் ATM அல்லாத மற்ற வங்கி ATM-களில் 5 முறையும் (மெட்ரோவில் 3), SBI ATM-ல் 5 முறையும் எடுக்கலாம். இந்த வரம்பை தாண்டி பணம் எடுக்கும்போது அதற்கான சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

Read  SBI Bank has Introduced OTP to Login to Internet Banking

நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறிய நிதி பரிவதர்த்தனைகளுக்கான சேவை கட்டணம் மற்ற வங்கி ATM-களில் Rs.20+GST ஆகவும் ஸ்டேட் பேங்க் ஏ.டி.ம்-களில் 10+GST ஆகவும் உள்ளன.

Minimum Balance 

வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டும். அவ்வாறு Minimum Balance-யை பராமரிக்காத கணக்குகளுக்கு கட்டணங்களை விதிக்க RBI அனுமதி அளித்துள்ளது.

எஸ்.பி.ஐ வங்கிக்கணக்குகளை மூன்று வகைகளாக வகைப்படுத்தலாம். அவை பெருநகர (Metro) & நகர (Urban) கிளைகள், அரை நகர (Semi-Urban) கிளைகள் மற்றும் கிராம (Rural) கிளைகள் ஆகும்.

Metro மற்றும் Urban வங்கிக்கிளைகளில் Rs.3000 ஆகவும், Semi-Urban கிளைகளில் Rs.2000 ஆகவும், Rural வங்கிகளில் Rs.1000 ஆகவும் Minimum Balance-யை பராமரிக்க வேண்டும். குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத பட்சத்தில் அதற்கான அபராத தொகை வசூலிப்பார்கள்.

Metro மற்றும் Urban வங்கிகளில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்றால் Rs.15+GST வசூலிக்கப்படும். அதேபோல், Semi-Urban மற்றும் Rural வங்கிகளில் முறையே Rs.12+GST மற்றும் Rs.10+GST பிடித்தம் செய்யப்படும்.

SMS Alert Charges 

பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிக்கணக்கு தொடர்பான தகவல்களை வாடிக்கையாளருக்கு அனுப்புவது வங்கி பாதுகாப்பை நோக்கமாக கொண்டுள்ளது. இருப்பினும், இதற்கான வங்கி சேவை கட்டணத்தை வசூலிக்கிறது.

Read  How to Apply For SBI Debit Card in Online: Step-by-step Guide

ஒரு காலாண்டிற்கு சராசரியாக Rs.25,000 மற்றும் அதற்க்கு குறைவான காலாண்டு நிலுவை தொகையை பராமரிக்கும் டெபிட் கார்டுதாரர்களிடமிருந்து SMS Alert கட்டணம் வசூலிக்கப்படும்.

ஒரு காலாண்டிற்கு SMS Alert-டிற்கான கட்டணம் Rs.12+GST  ஆகும்.

ATM / Debit Card Replacement Charges

SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் ATM Card-யை Replacement செய்வதற்கு Rs.300+GST-யை Charge செய்கிறது.

மேலும், Debit Card-க்கு ஆண்டு பராமரிப்பு கட்டணம் Charge செய்யப்படுகிறது. இந்த கட்டணமானது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் Debit Card-ன் வகையை பொறுத்து மாறுபடும்.

டெபிட் கார்டின் வகைகளுக்கு ஏற்ற பராமரிப்பு கட்டணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • Classic Debit Card – Rs.125+GST 
  • Silver/Global/Contactless Debit Card – Rs.125+GST
  • Yuva/Gold/Combo Debit Card –  Rs.175+GST
  • Platinum Debit Card – Rs.250+GST
  • Pride/Premium Business Debit Card – Rs.350+GST
  • My Card (Image Card) – Rs.175+GST

Duplicate Passbook

வங்கி கணக்குகளின் பண பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை அறிய Bank Passbook ஆனது பெரிதும் பயன்படுகிறது. ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் Passbook-யை Enter செய்து கடந்த கால பரிவர்த்தனைகள் மற்றும் தற்போதைய பண இருப்பு போன்ற தகவல்களை பெறலாம்.

Read  Difference Between NEFT, RTGS & IMPS Transfer: Limits, Charges

SBI வங்கியின் Passbook-யை தொலைந்துவிட்டால், அதற்கான Duplicate Passbook பெறுவதற்கு Rs.100+GST-யை கட்டணமாக செலுத்த வேண்டும்.

புதிய Passbook-ல் ஒவ்வொரு பக்கத்தையும் அச்சிடுவதற்கு பக்கத்திற்கு Rs.40 வீதம் செலுத்த வேண்டும் (தொலைந்திருந்தால்).

Passbook-ன் அனைத்து பக்கங்களும் நிரம்பிவிட்டால், புதிய Passbook-யை பெறுவதற்கு கட்டணம் ஏதும் செலுத்த தேவை இல்லை.

வங்கி வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளின் கட்டண விவரங்களை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். இவ்வாறு தெரிந்து கொள்வதின் மூலம் வங்கி சேவைகளை சிறப்பாக கையாளலாம்.

இந்த கட்டுரையில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் Comments பிரிவில் பதிவிடுங்கள்.

Source – sbi.co.in

தொடர்புடைய கட்டுரைகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *