How to Register & Use SBI Secure OTP App
State Bank of India வங்கியின் வாடிக்கையாளர்கள் பல்வேறு ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு SMS இல்லாமலேயே OTP Number-யை உருவாக்க முடியும். இதற்காக வங்கியானது SBI Secure OTP என்ற App-யை வழங்கியுள்ளது. இதை பற்றிய விவரங்களை இந்த கட்டுரையில் விளக்கமாக காணலாம்.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியானது இந்தியாவிலேயே மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகும். மேலும் இணைய வங்கிசேவைகளை வழங்குவதில் முன்னனியில் உள்ளது.
வாடிக்கையாளர்களின் கணக்குகளை பாதுகாப்பதற்கு பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை SBI வங்கி வழங்குகிறது. அதில் ஒவ்வொரு வங்கியும் பயன்படுத்தும் OTP என்ற One Time Password-ம் அடங்கும்.
இன்றைய நவீன காலத்தில் நாம் ஆன்லைன் பரிவர்தனைகளையே அதிகமாக மேற்கொள்கிறோம். அதாவது NEFT, RTGS மற்றும் IMPS போன்ற பண பரிவர்தனைகளை ஆன்லைன் மூலம் எளிமையாக செய்யலாம். ஆனால், பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள OTP என்பது மிக முக்கியமானதாகும்.
உங்களின் Internet Banking அல்லது Mobile Banking மூலமாக Transaction-களை செய்ய விரும்பினால், நீங்கள் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP Number-யை Enter செய்தால் மட்டுமே அந்த பரிவர்த்தனையானது முழுமையடையும்.
சில நேரங்களில் பரிவர்த்தனைகளை செய்யும்போது, OTP எண்ணானது வருவதில்லையா ? அல்லது OTP எண்னை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கிறீர்களா ?
இவ்வாறான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஸ்டேட் பேங்க் வங்கியானது SBI Secure OTP என்ற App-யை வழங்கியுள்ளது.
Table of Contents
What is SBI Secure OTP App
நாம் ஆன்லைன் வழியாக வங்கிப்பரிவர்தனைகளை மேற்கொள்ளும்போது OTP என்னும் One Time Password தேவைப்படும். இந்த OTP எண்ணானது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு SMS வழியாக வரும்.
இணைய வழி பரிவர்தனைகளுக்கான OTP-யை SMS வழியாக பெறாமல், SBI Secure OTP என்ற App-ன் மூலம் உருவாக்கலாம்.
உங்களின் வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP-யை பெறாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் என்பதே இதன் பொருள். உங்களின் ஸ்மார்ட் போனில் இருக்கும் செயலியின் மூலமாகவே இந்த ஒருமுறை கடவுச்சொல்லை உருவாக்கலாம்.
How to Register State Bank Secure OTP App
- உங்களின் ஸ்மார்ட் போனில் SBI Secure OTP என்ற App-யை Download செய்து Install செய்ய வேண்டும். (Google Play Store அல்லது Apple Store-ல்)
- Internet Banking-ன் Username மற்றும் Password-யை உள்ளிட்டு Register என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு Send OTP என்பதை கிளிக் செய்க.
- I Agree என்பதை டிக் செய்து Ok என்பதை கிளிக் செய்க.
- தற்போது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும். அதை Enter செய்து Confirm என்பதை அழுத்த வேண்டும்.
- பிறகு 4 இலக்க PIN Number-யை Set செய்ய வேண்டும்.
- இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு Activation Code வரும்.
How to Activate Secure OTP App
மொபைல் செயலியில் பதிவு செய்தவுடன் உங்களின் மொபைல் எண்ணிற்கு Activation Code வரும். அந்த Activation Code-யை Internet Banking-ல் கொடுத்து Activate செய்தால் தான் Registration முழுமையடையும்.
SBI இணைய வங்கியின் மூலம் Secure OTP App-யை எவ்வாறு Activate செய்வது என்பதை பற்றி காணலாம்.
- உங்களின் SBI Internet Banking-யை Username மற்றும் Password-யை Enter செய்து Login செய்ய வேண்டும்.
- My Accounts & Profile என்பதை தேர்வு செய்து, அடுத்து வரும் Profile என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது கடையாக Activate Secure OTP என்ற Option இருக்கும். அந்த தேர்வை கிளிக் செய்க.
- Profile Password-யை Enter செய்து Submit என்பதை அழுத்தவும்.
- திரையில் ஒரு செய்தி தெரியும். அதில் Ok என்பதை அழுத்துக.
- இப்பொழுது ஏற்கனவே உங்களின் மொபைல் எண்ணிற்கு வந்த Activation Code-யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்க.
- தற்போது OTP Authentication ஆனது, மொபைல் SMS-ல் இருந்து Secure OTP செயலுக்கு மாறியிருக்கும்.
இனி ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதற்கான ஒரு முறை கடவுச்சொல் SMS வழியே வராது. தற்போது நீங்கள் Register செய்த மொபைல் செயலியின் மூலமாகவே ஒரு முறை கடவுச்சொல்லை உருவாக்கலாம்.
How to Use Secure OTP
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பாதுகாப்பு ஓ.டி.பி செயலியை Registration செய்த பிறகு, அதை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி காணலாம்.
இணைய வங்கி அல்லது மொபைல் பேங்கிங் சேவையின் மூலம் ஒரு Transaction-யை மேற்கொள்வோம்.
எடுத்துக்காட்டாக,
Mobile Banking மூலமாக ஒரு மொபைல் எண்ணிற்கு Recharge செய்வதாக கொள்வோம்.
Confirm என்பதை கிளிக் செய்தவுடன் ஒருமுறை கடவுச்சொல்லை கேட்கும்.
ஒரு முறை கடவுச்சொல்லை பெற கீழ்கண்ட செயல்முறையை பின்பற்றவும்.
- உங்களின் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்துள்ள SBI Secure OTP என்ற செயலியை Open செய்ய வேண்டும்.
- ஏற்கனவே Set செய்த 4 இலக்க PIN Number-யை Enter செய்ய வேண்டும்.
- பிறகு Get Online OTP என்பதை கிளிக் செய்க.
- இப்பொழுது Online OTP Number தோன்றும்.
- அந்த ஓடி.பி எண்ணை கொண்டு Recharge பரிவர்த்தனையை நிறைவு செய்யலாம்.
How to Deregister / Deactivate Secure OTP App
நீங்கள் Register செய்த எஸ்.பி.ஐ பாதுகாப்பு ஓ.டி.பி செயலியை பயன்படுத்த விரும்பவில்லை என்றால் அதை Deregister அல்லது Deactivate செய்ய முடியும்.
SBI Secure OTP App-யை Secure OTP App மூலமாகவோ அல்லது Internet Banking மூலமாகவோ Deregister செய்ய முடியும்.
Deregister Through App
- எஸ்.பி.ஐ Secure OTP செயலியை Open செய்ய வேண்டும்.
- இப்பொழுது Settings என்பதை கிளிக் செய்க.
- தற்போது Change mPIN மற்றும் Deregister என்ற இரண்டு தேர்வுகள் இருக்கும். அதில் Deregister என்பதை தேர்வு செய்க.
- Confirm என்பதை கிளிக் செய்க.
- இப்போது ஒரு Pop up திரை தோன்றும். அதில் Confirm என்பதை கிளிக் செய்க.
- Confirm என்பதை கிளிக் செய்தவுடன் வெற்றிகரமாக Deregister ஆகிவிடும்.
Deregister Through Internet Banking
நீங்கள் எஸ்.பி.ஐ பாதுகாப்பு ஓ.டி.பி செயலியை Uninstall செய்துவிட்டால், பிறகு அதை மொபைல் App மூலம் Deactivate செய்ய முடியாது. எனவே, அப்போது இணைய வங்கி சேவையை பயன்படுத்தி Deactivate செய்யலாம்.
- SBI Internet Banking சேவையை Login செய்ய வேண்டும்.
- My Accounts & Profile என்ற தேர்வில் உள்ள Profile என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் தோன்றும் சேவைகளில் High Security Options என்பதை கிளிக் செய்க.
- Profile Password-யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்க.
- Mode of Authentication Through OTP என்ற Option-ல் ஏற்கனவே State Bank Secure OTP என்பது தேர்வாகி இருக்கும். அதில் SMS என்பதை கிளிக் செய்து Submit என்பதை அழுத்த வேண்டும்.
- இப்பொழுது வெற்றிகரமாக Deactivate ஆகிவிடும்.
Deactivate செய்த பிறகு பரிவர்தனைகளுக்கான ஒரு முறை கடவுச்சொல்லானது பழையபடி SMS வழியே பெறுவீர்கள்.
இந்த கட்டுரையில் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.
தொடர்புடைய கட்டுரைகள்:
- How to Open SBI Savings Account in Mobile
- How to Open SBI Mobile Banking
- Withdraw Cash Without ATM Card – YONO
- Add Nomination in Online
- Reset SBI Netbanking Password Online