Tamil Nadu 12th Exam Result 2023: Check Your Result
Tamil Nadu 12th Exam Result 2023: 12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் அரசு தேர்வுகள் இயக்கம் இன்று வெளியிடுகின்றன. இதை மாணவர்கள் தங்களின் மொபைல் அல்லது கணினியின் மூலமே தெரிந்துகொள்ள முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பிறகு அந்த தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகள் (Exam Results) வெளியிடப்படும். இந்த ஆண்டு 8.5 லட்சம் மாணவ மாணவிகள் +2 தேர்வை எழுதியுள்ளனர். அவர்களின் தேர்வு முடிவுகள் இன்று (08-05-2023) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை காண எங்கும் அலைய தேவையில்லை.
மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் 12th Exam Results யை பார்க்க முடியும். அதற்கான இணையதள லிங்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைய தளங்களின் மூலம் மாணவர்களின் தேர்வு முடிவுகளை காணலாம்.
http://www.tnresults.nic.in
https://www.dge.tn.gov.in
https://www.dge1.tn.gov.in
https://www.dge2.tn.gov.in
12th Exam Result Time:
12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. எனவே 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தங்களின் Exam Result யை 9.30 மணியில் இருந்து தெரிந்துகொள்ளலாம்.
Exam Result Details | HSE (12th) Exam Result |
Name of State | Tamilnadu |
Exam Result Date | 08/05/2023 |
Result Time | 9.30 AM |
Website Link | |
Directorate of Government Examinations Website | https://www.dge.tn.nic.in |
+2 தேர்வு முடிவை எப்படி பார்ப்பது? | How to Check +2 Result Online
Step 1: www.tnresults.nic.in என்ற இணையதள லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: பிறகு HSE(+2) Examination Results March 2023 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
Step 3: பிறகு உங்களின் Registration Number மற்றும் Date of Birth யை Type செய்து Get Marks பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: இப்பொழுது உங்களின் 12th Exam Result வருவதை காண்பீர்கள்.
தேவைப்பட்டால் அந்த Exam Results யை Download மற்றும் Print எடுத்துக்கொள்ளலாம்.
Exam Results Through SMS
உங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி (SMS) வழியாக அனுப்பப்படும்.