How to Transfer SBI Account to Another Branch Online
நீங்கள் உங்களின் SBI Bank Account யை ஒரு Branch லிருந்து மற்றொரு Branch க்கு மாற்ற விரும்புகிறீர்களா? ஆம் என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான். உங்களின் கணக்கை Online மூலம் எளிதாக மற்றொரு வங்கிக்கிளைக்கு Transfer செய்யலாம். அதற்கான செயல்முறையை பற்றி தான் இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.
சில வங்கி வாடிக்கையாளர்கள் அவர்களின் வேலை மற்றும் பிற காரணங்களுக்காக ஒரு இடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு குடிபெயர வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அவ்வாறான சூழ்நிலையில் வங்கி சம்பந்தப்பட்ட சில சேவைகளை பெறுவதற்க்கு, அவர்களின் வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட பயணத்தால் அலைச்சலும் நேர விரயமும் ஏற்படும்.
இதனை தவிர்ப்பதற்கு வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிக்கணக்கை அருகில் உள்ள ஒரு Branch-க்கு Transfer செய்துகொள்ளலாம். இதன் மூலம் பயண தூரத்தையும் நேரவிரயத்தையும் தவிர்க்கலாம்.
Table of Contents
SBI Bank Account யை Online மூலம் Transfer செய்ய முடியுமா?
ஆம் நிச்சயம் முடியும். இப்பொழுது SBI வங்கியில் Savings Account-யை ஒரு Branch-ல் இருந்து மற்றொரு Branch-க்கு Transfer செய்வது மிகவும் எளிதாகிவிட்டது.
இதற்கு முன்னர், நேரடியாக வங்கிக்கிளைக்கு சென்று அங்கு Account Transfer படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. இவை அனைத்தும் மிகவும் சிக்கலானதாக இருந்தது. ஆனால், இப்பொழுது Online மூலமாகவே SBI Account-யை மற்றொரு Branch-க்கு Transfer செய்யும் வசதி வந்துவிட்டது.
நீங்கள் Saving Account-யை ஆன்லைன் மூலமாக மாற்ற வேண்டுமென்றால் கீழ்கண்டவற்றை கொண்டிருக்க வேண்டும்.
- உங்களின் வங்கிக்கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.
- Internet Banking சேவையை Open செய்திருக்க வேண்டும்.
How to Transfer SBI Bank Account to Another Branch Online
ஒரு SBI கணக்கை இணையம் வழியாக பரிமாற்றம் செய்வதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Step 1: முதலில் www.onlinesbi.com என்ற Officiel Website-யை அணுக வேண்டும்.
Step 2: உங்களின் Username மற்றும் Password-யை உள்ளிட்டு Login செய்ய வேண்டும்.
Step 3: இப்பொழுது Menu Bar-ல் e-services என்ற Option-யை கிளிக் செய்க.
Step 4: பிறகு, Transfer of Savings Account என்பதை கிளிக் செய்க.
Step 5: இப்போது நீங்கள் Transfer செய்ய விரும்பும் வங்கிக்கணக்கினை தேர்வு செய்ய வேண்டும்.
Step 6: தற்போது உங்களின் Savings Account-யை எந்த Branch-க்கு Transfer செய்ய வேண்டுமோ அதன் Branch Code-யை Enter செய்து Get Branch Name என்பதை அழுத்த வேண்டும்.
Step 7: பிறகு, Terms and Condition என்ற இடத்தில் உள்ள Check Box-யை டிக் செய்து Submit என்பதை அழுத்த வேண்டும்.
Step 8: இப்பொழுது தற்போதைய Branch Code மற்றும் நீங்கள் Transfer செய்யும் புதிய கிளையின் Branch Code போன்ற தகவல்கள் இருக்கும். அனைத்தையும் சரிபார்த்த பின்பு Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 9: வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Confirm என்பதை கிளிக் செய்க.
Step 10: இப்பொழுது Your branch transfer request has been successfully registered என்ற செய்தி தோன்றும்.
உங்களின் வங்கிக்கணக்கு புதிய கிளைக்கு Transfer ஆக ஒரு வாரம் ஆகலாம். ஒரு வாரத்திற்கு பிறகு Internet Banking-யை Login செய்து பார்த்தால் புதிய வங்கிக்கிளையின் பெயர் தோன்றுவதை காணலாம். இது வங்கிக்கணக்கை புதிய கிளைக்கு மாற்றியதை உறுதிப்படுத்துகிறது.
இந்த கட்டுரையில் நீங்கள் SBI வங்கியை பற்றிய ஒரு பயனுள்ள தகவலை தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.