How to Change/Update Email ID in SBI Savings Account Online

SBI Bank Account இல் Email ID யை Update செய்வது மிகவும் எளிதாகும். நீங்கள் வங்கிக்கிளைக்கு போகாமலேயே SBI Internet Banking அல்லது YONO SBI App மூலம் மின்னஞ்சலை புதுப்பிக்கலாம். இந்த இரண்டு வழிகளின் மூலம் மின்னஞ்சலை எப்படி புதுப்பிப்பது என்பதை பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள போகிறேன். 

இவற்றில் எது உங்களுக்கு எளிதாக உள்ளதோ அந்த செயல்முறையின் மூலம் உங்களின் மின்னஞ்சலை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.

SBI Bank Account இல் மின்னஞ்சலை புதுப்பிப்பது அவசியமா?

உங்களின் SBI வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை Update செய்வது மிகவும் அவசியமாகும். ஏனெனில் ஒரு மொபைல் எண்ணை போன்று மின்னஞ்சலும் முக்கிய காரணியாக உள்ளது.

நீங்கள் மின்னஞ்சலை அப்டேட் செய்வதால் Email Statement, Transaction Alerts மற்றும் வங்கி அறிவிப்புகள் போன்றவற்றை மின்னஞ்சலின் மூலம் பெற முடியும்.

வங்கிசேவைகளில் ஏதாவது மாற்றம் செய்தாலோ அல்லது புதிய சேவைகளை வெளியிட்டாலோ அது குறித்த தகவல்களை வங்கிக்கணக்கில் பதிவு செய்த Email ID க்கு அனுப்புவார்கள். எனவே உங்களின் வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை Update செய்வது அவசியமான ஒன்றாகும்.

Read  SBI Bank has Introduced OTP to Login to Internet Banking

நீங்கள் இதுவரை மின்னஞ்சலை பதிவு செய்யவில்லை அல்லது ஏற்கனவே பதிவு செய்த மின்னஞ்சல் தற்போது உங்களிடம் இல்லையென்றால் கவலை வேண்டும். நீங்கள் வங்கிக்கு போகாமல் Online மூலமாகவே இவற்றை செய்ய முடியும். 

How to Update Email ID in SBI Bank Account Through Net Banking

பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி இணைய வங்கிச்சேவை மூலம் மின்னஞ்சலை புதுப்பிக்கலாம்.

Step 1: முதலில் SBI வங்கியின் இணையதளமான https://retail.onlinesbi.com/retail/login.htm என்ற தளத்திற்கு செல்லவும்.

Step 2: உங்களின் SBI Net Banking இன் Username மற்றும் Password யை உள்ளிட்டு Login செய்யவும்.

SBI Net Banking Login

Step 3: உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP Number யை உள்ளிட்டு Submit என்பதை கிளிக் செய்க.

SBI Second factor Authentication

Step 4: இடது புறத்தில் உள்ள Profile > My Profile என்பதை தேர்வு செய்யவும்.

SBI My Profile

Step 5: இப்பொழுது உங்களின் Profile Password யை உள்ளிட்டு Submit செய்க.

SBI Profile Password

Step 6: Email ID க்கு நேராக உள்ள Change என்பதை கிளிக் செய்யவும்.

SBI Email ID Change

Step 7: தற்போது தோன்றும் Update Email Details என்ற பக்கத்தில் New Email ID யை Type செய்யவும். பிறகு Submit என்ற பட்டனை அழுத்தவும்.

Read  SBI M-Passbook

Update New Email ID for SBI

How to Open for Email OTP 

Step 8: இப்பொழுது நீங்கள் Enter செய்த புதிய மின்னஞ்சலிற்கு OTP Number அனுப்பப்பட்டிருக்கும். எனவே அந்த புதிய மின்னஞ்சலின் கணக்கை திறக்கவும்.

Step 9: அதில் ஒரு PDF வடிவ ஆவணம் இருக்கும். அதை கிளிக் செய்து திறக்கவும்.

Email OTP For Update

Step 10: அதை Open செய்த பிறகு Password கேட்கும். அதில் உங்களின் வங்கியில் பதிவு செய்த 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.

Enter Password For Email OTP - SBI

Step 11: தற்போது இதில் OTP எண் இருப்பதை காண்பீர்கள்.

Email OTP Number

Step 12: OTP எண்ணை Enter செய்து Approve என்பதை அழுத்தவும்.

Enter OTP

Step 13: தற்போது மூன்று விதமான தேர்வுகள் இருக்கும். அதில் OTP Through SMS என்பதை தேர்வு செய்து Submit செய்யவும்.

OTP Through SMS

Step 14: மொபைல் எண்ணிற்கும் வரும் One Time Password யை உள்ளிட்டு Confirm என்ற பட்டனை கிளிக் செய்க.

Enter High Security Password

Step 15: இப்பொழுது Email Address Updated Successfully என்ற செய்தி வருவதை காண்பீர்கள். தற்போது நீங்கள் வெற்றிகரமாக மின்னஞ்சலை புதுப்பித்துவிட்டீர்கள்.

Email Address Updated Successfully in SBI

How to Update Email ID Through YONO SBI App

SBI வங்கியின் Mobile Banking செயலியான YONO SBI மூலமும் மின்னஞ்சலை அப்டேட் செய்யலாம். இது Net Banking மூலம் செய்ததை விட சற்று எளிதாகும்.

Read  How to Register SBI Mobile Banking Service in Online: Tamil

Step 1: உங்களின் மொபைல் போனில் இருக்கும் YONO SBI என்ற செயலியை திறக்கவும்.

Step 2: Username மற்றும் Password அல்லது 5 இலக்க PIN Number யை உள்ளிட்டு Login செய்யவும்.

YONO SBI PIN

Step 3: Service Request என்பதை கிளிக் செய்க.

Services Request for Email Update

Step 4: Profile என்பதை தேர்வு செய்யவும்.

Select Profile

Step 5: Email ID யை மாற்றுவதற்கான தேர்வை கிளிக் செய்க.

Email ID Change

Step 6: Internet Banking Profile Password யை Type செய்து Submit செய்யவும்.

SBI Internet Banking Profile Password

Step 7: Add / Update Email ID என்ற இடத்தில் புதிய மின்னஞ்சலை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்க.

Add Update New Email ID

Step 8: OTP எண்ணை உள்ளிட்டு Submit செய்க. இப்பொழுது உங்களின் மின்னஞ்சல் புதுப்பிக்கப்பட்டிருக்கும்.

OTP Verification for Email Update

முடிவுரை 

இன்று SBI வங்கிக்கணக்கில் மின்னஞ்சலை புதுப்பிப்பதற்கான இரண்டு வகையான செயல்முறையை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி உங்களின் கணக்கில் மின்னஞ்சலை அப்டேட் செய்யலாம்.

இந்த கட்டுரையில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *