How to Upgrade Access Level in SBI Internet Banking
SBI Net Banking-ல் Upgrade Access Level-யை Enable செய்வதன் மூலம் Full Transation உரிமையை பெற முடியும். இவ்வாறு Enable செய்வதால் வாடிக்கையாளர்களால் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
வங்கிகளில் இருந்து NEFT, RTGS மற்றும் IMPS போன்ற வழிமுறைகளில் பணத்தை Transfer செய்ய முடியும். இவற்றை பயன்படுத்தி ஒரே வங்கி அல்லது பிற வங்கிகளில் உள்ள மூன்றாம் தரப்பு கணக்குகளுக்கு பண பரிவர்த்தனைகளை செய்யலாம்.
இவ்வாறு ஆன்லைன் Transaction செய்யவதற்கு SBI Internet Banking-ல் Full Transaction உரிமை தேவை. இந்த உரிமையை Upgrade Access Level-யை செயல்படுத்துவதன் மூலம் பெறலாம்.
SBI Transaction Rights
SBI வங்கி ஆன்லைனில் மூன்று விதமான பரிவர்த்தனை உரிமைகளை வழங்குகிறது.
- View Only
- Limited Transaction Rights
- Full Transaction Rights
View Only: SBI இணையவங்கி மூலமாக எந்த பரிவர்த்தனைகளையும் செய்ய முடியாது. இணைய வங்கியில் பார்க்க மட்டும் தான் முடியும்.
Limited Transaction Rights: வரையறுக்கப்பட்ட பரிவர்த்தனைகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.
Full Transaction Rights: முழு பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கான உரிமைகள் வழங்கப்படும்.
நீங்கள் முதல் முறையாக இணைய வங்கியை Login செய்து, பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முயற்சிக்கும் போது ” You are on viewing rights. If you want transaction rights, please go to Request & Enquiries -> Upgrade Access Level ” என்ற செய்தி வரலாம்.
அதாவது, பண பரிமாற்றம் செய்வதற்கு, அணுகல் நிலையை முழு பரிவர்த்தனையாக மேம்படுத்த வேண்டும்.
Steps to Upgrade Access Level in SBI
கீழ்கண்ட செயல்முறைகளின் மூலம் பண பரிவர்த்தனைகளின் Acesss Level-யை Upgrade செய்யலாம்.
Step 1: www.onlinesbi.com என்ற SBI இணைய வங்கி Portal-யை அணுக வேண்டும்.
Step 2: Net Banking-ன் Username மற்றும் Password-யை கொண்டு Login செய்ய வேண்டும்.
Step 3: Menu Bar-ல் உள்ள Request & Enquiries என்பதை தேர்வு செய்க.
Step 4: இப்பொழுது SBI வங்கியின் பல சேவைகள் தெரியும். அதில் Upgrade Access Level என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: இப்போது உங்களின் Bank Account Number மற்றும் தற்போதைய அணுகல் நிலை (Access Level) போன்ற தகவல்கள் இருக்கும்.
Step 6: Upgrade Access Level to என்ற இடத்தில் Full Transaction Rights என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்க.
Step 7: தற்போது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP (One Time Password) வரும்.
Step 8: அந்த OTP எண்ணை Enter செய்து Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 9: இப்பொழுது திரையில் உங்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற செய்தி தோன்றும். மேலும் உங்களின் கோரிக்கையை செயல்படுத்த ஒரு மணி நேரம் ஆகும்.
சிறிது நேரத்தில் உங்களின் கணக்கு முழு அணுகல் உரிமைகளுக்கு மேம்படுத்தப்படும். அப்பொழுது முழு பண பரிமாற்ற கட்டுப்பாடும் உங்களுக்கு வந்துவிடும்.
அவ்வாறு வந்தவுடன் நீங்கள் எந்த தடையும் இன்றி ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
இதைப்பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment பிரிவில் பதிவிடவும்.