ATM Card ServiceSBI Online

How to Withdraw Money From ATM Without Card SBI

Withdraw Money From ATM Without ATM Card:  SBI வங்கி தங்களின் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான வசதிகளை வழங்குகிறது. இந்த சேவைகளை  பயன்படுத்தும்போது நீங்கள் வங்கிக்கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வாடிக்கையாளர் வீட்டிலிருந்தே வங்கி சேவைகளை பெரும் பொருட்டு பலதரப்பட்ட சேவைகளை வாழங்குவதில் State Bank of India முன்னோடியாக உள்ளது. இந்த கட்டுரையில் YONO Cash முறையை பயன்படுத்தி Debit Card இல்லாமல் (Without Card) SBI ATM Center இல் இருந்து எவ்வாறு Money Withdrawal செய்வது என்பதை பற்றி சொல்லப்போகிறேன்.

நீங்கள் SBI YONO Cash யை பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? மேலும் அதை பயன்படுத்தி ATM Card இல்லாமல் பணத்தை எடுப்பதற்கு விரும்புகிறீர்களா? 

நீங்கள் இதுவரைக்கும் அதை பற்றி கேள்விப்படாமல் இருந்தால் கூட பரவாயில்லை. அனைத்து தகவல்களையும் நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

What is SBI YONO Cash?

YONO Cash என்பது ஒரு வாடிக்கையாளர் தன்னுடைய வங்கிக்கணக்கில் இருந்து ATM Card இல்லாமல் (Cardless) பணம் எடுக்கும் வசதியாகும். 

Read  How to Register Complaint in SBI Online for Bank Issues

உங்களின் ஸ்மார்ட் போனில் YONO SBI அல்லது Yono Lite SBI App யை பதிவிறக்கம் செய்து இந்த வசதியை பயன்படுத்தலாம்.

இந்த வசதியின் மூலம் பணத்தை திரும்பப்பெறும்போது உங்களின் மொபைல் எண்ணை ஒரு அங்கீகாரியாக பயன்படுத்துகிறது. மேலும் இது உங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த வசதியை பயன்படுத்தி Withdrawal செய்வதற்கு SBI ATM Card தேவையில்லை.

Benefits of the YONO Cash Withdrawal (Cardless)

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் இந்த வசதியின் மூலம் பின்வரும் பயன்களை பெறலாம்.

  1. நீங்கள் ATM இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுப்பதற்கு ஏடிம் கார்டு தேவையில்லை.
  2. உங்களின் மொபைல் போனில் பணத்தை எடுப்பதற்க்கான கோரிக்கையை விடுக்கபோது ரகசிய குறியீடு கிடைக்கும். சில நேரங்களில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் தொலைதூரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு பணம் தேவைப்படலாம். அவர்களுக்கு இந்த ரகசிய குறீயீட்டை பகிர்வதன் மூலம் இந்த வசதியை பயன்படுத்தி அவர்கள் பணம் எடுக்கலாம்.
  3. இந்த வசதியின் மூலம் பணத்தை ATM இயந்திரத்திலிருந்து எடுப்பதற்கு ஸ்மார்ட் போன் தேவை இல்லை.
  4. SBI Internet Banking மூலம் பணம் எடுப்பதற்கான ரகசிய குறியீட்டை உருவாக்கலாம். உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் கூட யோனா செயலி மூலம் ரகசிய குறியீட்டை உருவாக்கலாம்.
  5. நீங்கள் இந்த சேவையை பயன்படுத்துவதால் இதற்கென்று கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. இது முற்றிலும் இலவச சேவையாகும்.
  6. ரகசிய குறியீட்டை உருவாக்கியவுடன் அது உங்களின் வங்கியில் கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும். இந்த ரகசிய குறியீட்டின் செல்லுபடி காலம் 4 மணி நேரம் மட்டுமே ஆகும். எனவே இது உங்களின் கணக்கிற்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது.
  7. ரகசிய குறியீட்டை பயன்படுத்தி திரும்பப்பெறும்போது, நீங்கள் ஏற்கனவே உள்ளிட்ட தொகையை Enter செய்தால் மட்டுமே Withdrawal செய்ய முடியும். எனவே இது பரிவர்த்தனையை பாதுகாப்பானதாக மாற்றுகிறது.
Read  How to Deposit Cash in SBI Cash Deposit Machine (CDM)

Disadvantages of cardless withdrawal

இந்த முறையில் பணத்தை திரும்ப பெறும்போது உள்ள குறைபாடுகளை பற்றி பார்ப்போம்.

  1. இந்த வசதியை அனைத்து ATM களிலும் பயன்படுத்த முடியாது. இதை YONO SBI ATM இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
  2. தற்போது குறைந்தபட்ச தொகையாக Rs.500 மட்டுமே எடுக்க முடியும். அதற்க்கு குறைவாக எடுக்க முடியாது.
  3. இந்த வசதியின் மூலம் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக Rs.20,000 வரைக்கும் எடுக்க முடியும்.

நினைவில் கொள்ள வேண்டியவை:

நீங்கள் டெபிட் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை பயன்படுத்த விரும்பினால் பின்வருவனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.

  1. உங்களின் வங்கிக்கணக்கில் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும். நீங்கள் பதிவு செய்யவில்லை என்றால் அருகிலுள்ள கிளைக்கு சென்று பதிவு செய்யலாம்.
  2. உங்களின் வங்கிக்கணக்கிற்கு நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் சேவையை Open இருந்தால் ரகசிய குறியீட்டு எண்ணை உருவாக்கலாம்.
  3. ரகசிய குறியீட்டு எண் உருவாக்கப்பட்ட 4 மணி நேரத்தில் அதை பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் அது பயனற்றதாகிவிடும்.
Read  How to Add Nominee in SBI Account Online: Step by Step Guide

How to Withdraw Money From ATM Without ATM Card

பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி ATM அட்டை இல்லாமல் பணத்தை எடுக்கலாம்.

ரகசிய குறியீட்டிற்கு கோரிக்கை விடுத்தல்:

Step 1: உங்களின் ஸ்மார்ட் போனில் YONO Lite SBI செயலியை Open செய்யவும்.

Step 2: SBI செயலியின் மேல் பகுதியில் உள்ள YONO Cash Withdrawal என்பதை கிளிக் செய்யவும்.

Click YONO Cash Withdrawal

Step 3: Request YONO Cash என்பதை தேர்வு செயக.

Click Request YONO cash

Step 4: நீங்கள் Withdrawal செய்ய நினைக்கும் பணத்தை Enter செய்யவும். பிறகு Submit என்பதை அழுத்தவும்.

Enter Withdrawal Amount and Click Submit

Step 5: நீங்கள் ஏதாவது 6 இலக்க PIN Number யை Enter செய்து Submit செய்யவும். இது பணத்தை எடுப்பதற்கான YONO Cash PIN ஆகும்.

Create 6 digit yono cash pin - SBI

Step 6: Check Box யை டிக் செய்து Confirm செய்யவும்.

Click Confirm - SBI Yono Cash Withdrawal

Step 7: இப்பொழுது உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு Transaction Number யை பெறுவீர்கள்.

SBI YONO

 
ரகசிய குறியீட்டை கொண்டு பணத்தை திரும்பப்பெறுதல்: 

Step 1: இப்பொழுது உங்களுக்கு அருகில் உள்ள SBI YONO ATM Center க்கு செல்லவும்.

Step 2: YONO Cash என்ற Logo வை அழுத்தவும்.

Select YONO Cash on SBI SBI ATM Center

Step 3:  YONO Cash Transaction Number உள்ளிட்டு Confirm என்பதை கிளிக் செய்யவும்.

Enter Transaction Number and Click Confirm

Step 4: திரும்பப்பெறும் பணத்தை Enter செய்து Yes என்பதை அழுத்தவும்.

Enter Withdrawal Amount

Step 5: 6 இலக்க Cash Code எண்ணை Type செய்து Confirm செய்யவும்.

Enter 6 digit yono cash code

Step 6: இப்பொழுது இயந்திரத்திலிருந்து உங்களின் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

Take Cash

நீங்கள் SBI வங்கிக்கணக்கில் இருந்து டெபிட் கார்டு இல்லாமல் பணத்தை எப்படி திரும்பப்பெறுவது என்பதை பற்றி தெரிந்துகொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இதை பற்றிய சந்தேகங்களுக்கு கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest