How to Withdraw Money From SBI ATM
Withdraw Money From SBI ATM: SBI வங்கியானது இந்தியாவில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாகும். தங்களின் வங்கிக்கணக்கில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை வழங்குகிறது.
நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கை திறக்கும்போது, அந்த வங்கி வழங்கும் ஆன்லைன் வசதிகளான Internet Banking, SBI Secure OTP, Mobile Banking, Debit Card போன்ற வசதிகளை பயன்படுத்த முடியும்.
மேலும் சமீபத்தில் ஒரு கூடுதல் பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி Rs.10,000 க்கும் அதிகமான தொகையை ATM இல் இருந்து பெறும்போது OTP எண்ணை உள்ளிட வேண்டும். இது உங்களின் பணத்திற்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.
நீங்கள் வங்கிக்கிளைக்கு போகாமலேயே உங்களின் கணக்கில் இருக்கும் பணத்தை எளிதாக எடுக்க ATM Card உதவுகிறது. மேலும் Mobile Recharge, Bill Pay மற்றும் Online Shopping போன்ற பரிவர்தனைகளையும்இந்த டெபிட் அட்டையின் மூலம் செய்யலாம்.
உங்களுக்கு SBI ATM Card யை கொண்டு இயந்திரத்தில் பணத்தை எடுக்க தெரியவில்லையா? அல்லது அவ்வாறு எடுப்பதில் சந்தேகங்கள் உள்ளதா?
இந்த கட்டுரையானது அதற்கான முழு விளக்கத்தையும் புகைப்படங்களுடன் விளக்குகிறது. அதாவது, ATM Card யை பயன்படுத்தி SBI ATM Machine இல் எவ்வாறு Money Withdraw செய்வது என்பதை பற்றி காணப்போகிறோம்.
How to Withdraw Money From SBI ATM
பின்வரும் செயல்முறையை பின்பற்றி ATM Card யை கொண்டு SBI ATM Machine இல் Money Withdraw செய்யலாம்.
Step 1: உங்களுக்கு அருகில் உள்ள ஒரு SBI ATM Center க்கு செல்லவும்.
Step 2: ATM இயந்திரத்தில் உங்களின் கார்டை Insert செய்யவும். உங்களின் பரிவர்த்தனை நிறைவடையும் வரை நீங்கள் ATM அட்டையை எடுக்க கூடாது.
Step 3: உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்யவும்.
Step 4: 10 லிருந்து 99 க்குள் இருக்கக்கூடிய ஏதாவது இரண்டு எண்களை Enter செய்து Yes என்பதை கிளிக் செய்க. எடுத்துக்காட்டாக, 25 என்று Type செய்யலாம்.
Step 5: உங்களின் 4 இலக்க ATM PIN நம்பரை Enter செய்யவும்.
Step 6: Banking என்ற Option யை தேர்வு செய்க.
Step 7: Withdrawal என்பதை கிளிக் செய்யவும்.
Step 8: இதில் உங்களின் Account Type தேர்வு செய்க. சாதாரண மக்கள் பெரும்பாலும் சேமிப்பு கணக்கை தான் வைத்திருப்பார்கள். எனவே Savings என்பதை Select செய்யவும்.
Step 9: நீங்கள் Withdraw செய்ய நினைக்கும் பணத்தை Enter செய்து Yes என்பதை கிளிக் செய்யவும்.
Step 10: இப்பொழுது நீங்கள் Enter செய்த பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
Step 11: நீங்கள் பணத்தை பெற்ற பின்பு உங்களின் ATM Card இயந்திரத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.
ஒரு SBI ATM Card யை கொண்டு ATM Machine இல் எவ்வாறு Money Withdrawal செய்வது என்பதை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த கட்டுரையின் மூலம் பணம் எடுப்பது தொடர்பான சந்தேகங்கள் தீர்ந்திருக்கும் என்று நம்புகிறோம். இதில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.