TN Electricity

How to Apply for TNEB New Connection Online in Tamil

How to Apply for TNEB New Connection Online in Tamil:  ஒரு வீட்டை கட்டியவுடன் நாம் முதலில் விண்ணப்பிப்பது மின் இணைப்பிற்கு தான் ஆகும். ஏனெனில் ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு என்பது மிக மிக அத்தியாவசியமான ஒன்றாகும். மின் விளக்குகள், மின் விசிறிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற வீட்டு உபயோகச் சாதனங்கள் அனைத்தையும் இயக்க மின் இணைப்பு என்பது கட்டாயமாகும்.

இந்த மின் இணைப்பை பெறுவதற்கு நாம் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (Tamilnadu Electricity Board – TNEB) புதிய மின் இணைப்பு (New EB Connection) வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். இதற்காக நீங்கள் அலுவலகங்களுக்கு சென்று அலைய தேவையில்லை. நீங்கள் வீட்டில் இருந்தவாறே ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பிற்கு Apply செய்ய முடியும்.

ஒரு வீட்டிற்கு புதிய மின் இணைப்பை பெற என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், எந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும், எப்படி விண்ணப்பிப்பது போன்ற பல்வேறு தகவல்களை படிப்படியாக இந்த பதிவில் காணலாம். 

Needed Documents for TNEB New Connection

நீங்கள் உங்களின் வீட்டிற்கு புதிய மின் இணைப்பை பெற விண்ணப்பம் செய்கிறீர்கள் என்றால், அதற்க்கு பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரரின் புகைப்படம் (Applicant Photo)
  • விற்பனை பத்திரம் அல்லது கணினி பட்டா அல்லது VAO சான்று அல்லது சமீபத்திய சொத்து வரி ரசீது போன்ற சான்றுகளின் சான்றளிக்கப்பட்ட நகல்.
  • ஆதார் கார்டு (Aadhaar Card)
  • சோதனை சான்றிதழ் படிவம் (Test Certificate Form

இதில் சோதனை சான்றிதழ் படிவத்தை Test Report என்றும் அழைப்பர். இந்த படிவத்தை TNEB இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதை உரிமம் பெற்ற மின் ஒப்பந்தக்காரரால் பூர்த்தி செய்ய வேண்டும். 

மேலும் விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் மற்றும் ஒரு மின்னஞ்சலை (Email ID) கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் விண்ணப்பிக்கும் முதல் படியிலேயே இவை இரண்டும் தேவைப்படும்.

How Much to Pay for New Electricity Connection

நீங்கள் புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பிப்பவராக இருந்தால், அதற்கான தொகை எவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கேள்வி எழலாம். இது நீங்கள் பயன்படுத்தப்போகும் மின் தேவையை பொறுத்து மாறுபடும்.

Read  How to Pay EB Bill Online in Tamil | கரண்ட் பில் செலுத்துதல்

அதாவது உங்களின் மின்பளு (Electrical Load) 4 KW க்கு குறைவாக இருந்தால், குறைவான தொகை செலுத்த வேண்டியதிருக்கும். ஒருவேளை நீங்கள் AC, Water Heater, Electric Stove போன்ற அதிக மின்சாரம் தேவைப்படும் சாதனைகளை பயன்படுத்தினால், மின்பளு அதிகமாக தேவைப்படும். இதனால் நீங்கள் செலுத்த வேண்டிய தொகையும் அதிகரிக்கும்.

உங்களின் வீட்டிற்கு எவ்வளவு மின்பளு தேவைப்படும் என்பதை உங்கள் வீட்டில் வயரிங் செய்யும் நபரிடம் இருந்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்போது அதற்க்கான தொகையை காண்பிக்கும்.

இருப்பினும் நான் விண்ணப்பிக்கும் போது செலுத்திய தொகையை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். என்னுடைய மின்தேவை 2 KW ஆகும். எனவே மின்பளுவை 2 KW என்று என்டர் கொடுத்து நான் செலுத்திய தொகையை கூறுகிறேன்.

வ.எண்விளக்கம் தொகை 
1CC வைப்பு305
2வளர்ச்சி கட்டணம்2860
3மீட்டர் எச்சரிக்கை வைப்பு765
4பதிவு மற்றும் செயலாக்க கட்டணங்கள்205
5ரவுண்டிங் ஆஃப்0.1
6சேவை இணைப்பு கட்டணம்1020
7CGST18.45
8SGST18.45
செலுத்த வேண்டிய மொத்த தொகை Rs.5192 /-

ஒரு வீட்டிற்க்கான புதிய மின் இணைப்பிற்கு நான் செலுத்திய தொகை Rs.5192 ஆகும்.

How to Apply for TNEB New Connection Online

நீங்கள் TNEB இல் New Connection க்கு Apply செய்வதற்கு முன்பு மேற்கூறிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய தயாராக வைத்திருக்க வேண்டும்.

இப்பொழுது ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்பிற்கு எப்படி Apply செய்வது என்று Step by Step ஆக பார்க்கலாம். 

OTP Verification 

Step 1: முதலில் TANGEDCO இணையதளமான https://nsc.tnebltd.gov.in/nsconline/ என்ற தளத்திற்கு செல்லவும்.

Step 2: இந்த பக்கத்தில் நுகர்வோருக்கான தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதை படித்து பார்த்து பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

இப்பொழுது மெனு பாரில் உள்ள Apply > New Service Connection என்பதை தேர்வு செய்யவும்.

Apply for New Service Connection Online in Tamil

 Step 3: விண்ணப்பதாரரின் மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Generate OTP என்பதை கிளிக் செய்யவும்.

TANGEDCO-OTP Verification

Step 4: நீங்கள் உள்ளிட்ட மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு OTP Number வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு Validate OTP என்பதை கிளிக் செய்யவும்.

Read  TNEB Online Payment New User Registration & Bill Payment

TNEB Validate OTP

Application for New Service Connection

இப்பொழுது உங்களுக்கு புதிய மின் இணைப்பு படிவம் திறக்கும். இந்த படிவத்தை தான் நீங்கள் நிரப்ப வேண்டும். அதை எப்படி நிரப்புவது என்று பார்ப்போம்.

Step 5: பொது விபரங்கள் / General Details: இந்த பிரிவில் விண்ணப்பதாரரின் மாவட்டம், தாலுக்கா, கிராமம், பிரிவு போன்றவற்றை தேர்வு செய்ய வேண்டும். 

மின் கோருபவர் வகையில் General Public என்பதை தேர்வு செய்யவும். மேலும் உரிமையாளரின் விபரம், கட்டிடத்தின் விபரம் மற்றும் தொடர்பு முகவரியும் விண்ணப்ப முகவரியும் ஒன்றா என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

Enter General Details for new service connection - TNEB

Step 6: விண்ணப்பதாரரின் விபரங்கள் / Applicant Details: இதில் விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் தந்தை / தாய் / கணவர் பெயரை உள்ளிட வேண்டும்.

Applicant details for TNEB Connection in Tamil

Step 7: மின் இணைப்பு வழங்கப்படவேண்டிய முகவரி / Supply Address: நீங்கள் மின் இணைப்பு வேண்டும் வீட்டின் கதவு எண், தெரு மற்றும் அஞ்சல் குறியீட்டை நிரப்பவும்.

Enter Supply Address - TNEB New Service Connection

Step 8: மின் விதித்தொகுப்பு விபரங்கள் / Tarrif Details: இதில் மின் விதித்தொகுப்பு என்பதில் Domestic Residential என்பதை தேர்வு செய்யவும். அடுத்து உங்களின் மின் விகிதாசார வகையை தேர்வு செய்யவும். பிறகு அதற்க்கு கீழே உள்ளவற்றை படித்து பார்த்து தேர்வு செய்யவும்.

மின் கம்பியமைத்தல் முடிக்கப்பட்ட தேதி என்ற இடத்தில், உங்களுக்கு சரியான தேதி தெரியவில்லை என்றால், ஏதாவது ஒரு தேதியை தேர்வு செய்யலாம். 

Aadhaar Details என்ற இடத்தில் விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும்.

Enter Tariff Details in TNEB

Step 9: மின்பளு தகவல்கள் / Load Details: இதில் உள்ளவற்றை நிரப்புவதன் மூலம் உங்களின் வீட்டிற்க்கான மின்பளுவை தெரிந்துகொள்ளலாம். இவை அனைத்தையும் சரியாக நிரப்ப வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் இது உங்களின் மின்பளுவை தெரிந்துகொள்வதற்காக மட்டும் தான் ஆகும்.

நீங்கள் கவனிக்க வேண்டியது கடைசியில் உள்ள Demand applied for in (KW) என்பதை தான். இதில் குறைந்தபட்சம் 2 KW ஆக இருக்குமாறு மேலே உள்ள அட்டவணையில் என்டர் செய்யுங்கள் என்பது என்னுடைய கருத்து ஆகும். இல்லையென்றால் உங்கள் வீட்டில் வயரிங் செய்த நபரை கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

TANGEDCO-Application-Portal

அனைத்தையும் உள்ளிட்ட பிறகு கடைசியில் உள்ள Next என்ற பட்டனை அழுத்தவும்.

Step 10: இப்பொழுது விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP யை உள்ளிட்டு Validate OTP என்பதை அழுத்தவும்.

Read  How to Link Aadhaar with Electricity Bill Number Online

Aadhaar Authentication for TNEB New Service

Step 11: Upload Documents என்பதை கிளிக் செய்யவும்.

TNEB New Service Apply Online in Tamil

Step 12: இதில் உங்களின் தகவல்களை உறுதி செய்து Buiding Details யை தேர்வு செய்யவும்.

பிறகு விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் வீட்டு வரி ரசீதை Upload செய்ய வேண்டும். ஒருவேளை உங்களிடம் வீடு வரி ரசீது இல்லையென்றால், Any one of the documents listed below என்பதை தேர்வு செய்து அதில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்யவும்.

நீங்கள் பதிவேற்றம் செய்யும் வீட்டு வரி ரசீது அல்லது VAO சான்றிதழ் ஆவணத்துடன் ஆதார் மற்றும் Test Report படிவத்தையும் சேர்த்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது அனைத்து ஆவணங்களையும் ஒரே PDF ஆவணத்தில் சேர்த்து அப்லோட் செய்யலாம்.

Upload Documents for TNEB New Service

அப்லோட் செய்த பிறகு கடைசியில் உள்ள Next என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

Step 13: இந்த பக்கத்தில் நீங்கள் Test Certificate Form யை Download செய்துகொள்ளலாம். Check Box யை டிக் செய்து Proceed என்பதை கிளிக் செய்யவும்.

Test Report Download for TNEB

Step 14: நீங்கள் Proceed என்பதை கிளிக் செய்தவுடன் உங்களுக்கான Application Number உருவாகிவிடும். அந்த எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மேலும் அதற்க்கு கீழே நீங்கள் எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

கட்டணத்தை உடனே செலுத்தலாம் அல்லது சில நாட்கள் கழித்து கூட செலுத்திக்கொள்ளலாம். அதற்க்கு கீழே உள்ள Print என்பதை கிளிக் செய்து அந்த பக்கத்தை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.

நீங்கள் புதிய மின் இணைப்பிற்கான கட்டணத்தை உடனடியாக செலுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், செலுத்திய பணத்தை திரும்பப்பெற அதற்க்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும். எனவே இதை தவிர்க்க மின்சார அலுவலகத்தில் இருந்து வந்து ஆய்வு செய்த பிறகு கட்டணத்தை செலுத்துவதே சிறந்ததாகும். இதை மின்சார அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒருவர் என்னிடம் கூறியதாகும்.

How to Print TNEB New Service Application 

நீங்கள் ஏற்கனவே குறித்து வைத்துள்ள Application Number யை கொண்டு புதிய மின் இணைப்பு படிவத்தை Print எடுத்துக்கொள்ளலாம். அதை எப்படி எடுப்பது என்று பார்ப்போம். 

Step 1: மெனு பாரில் உள்ள Status > Print Application என்பதை கிளிக் செய்யவும்.

Step 2: இப்பொழுது உங்களின் Application Number யை Type செய்து Submit செய்யவும். 

தற்போது உங்களின் உங்களின் புதிய மின் இணைப்பிற்கான விண்ணப்பம் திறக்கும். அந்த விண்ணப்பத்தை Print எடுத்து வைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த Application Number யை கொண்டு Application Status யையும் சரிபார்க்கலாம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole