How to Link Aadhaar with Electricity Bill Number Online
Link Aadhaar with Electricity Bill Number: தமிழ்நாடு மின்இணைப்பு எண்ணை ஆதாருடன் எவ்வாறு இணைப்பது என்பது பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் உங்களின் மின்இணைப்பு எண்ணை நீங்களே ஆதாருடன் இணைத்துக்கொள்ளலாம்.
சமீபத்தில் நுகர்வோரின் மின்இணைப்பு எண்ணுடன் அவர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஏற்கனவே பெற்று வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து பெற வேண்டும் என்றால், மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும்.
ஆனால் அதற்கான வழிகாட்டுதல் எதுவும் வழங்கப்படவில்லை. தற்போது தமிழ்நாடு மின்வாரியத்தின் TANGEDCO இணையதளத்தில் அதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த Online வசதியை பயன்படுத்தி மின் நுகர்வோர் அவர்களின் மின்இணைப்பு எண்ணை அவர்களே லிங்க் செய்துகொள்ளலாம். அல்லது அருகில் உள்ள நெட்சென்டரில் மின் அட்டை (Electricity Card) மற்றும் ஆதார் அட்டையை (Aadhaar Card) எடுத்துச்சென்று இணைத்துக்கொள்ளலாம்.
இப்பொழுது ஆன்லைன் மூலம் எவ்வாறு இணைப்பது மற்றும் அதற்க்கு என்ன தேவை போன்ற தகவல்களை காணலாம்.
Table of Contents
மின்இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க தேவையான ஆவணங்கள்
நீங்கள் உங்களின் Electricity Number யை Aadhaar Number உடன் இணைக்க பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
- மின்இணைப்பு அட்டை (TN Electricity Card)
- ஆதார் அட்டை (Aadhaar Card)
- மின்இணைப்பில் பதிவு செய்த மொபைல் நம்பர்
இணைப்பதற்கு முன் நினைவில் கொள்ள வேண்டியவை:
- நுகர்வோரின் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்து Upload செய்வதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும். அல்லது ஆதார் இணையதளத்தில் இருந்தும் ஆதார் கார்டை Download செய்து வைத்துக்கொள்ளலாம்.
- நீங்கள் Upload செய்யும் ஆதார் அட்டையானது JPG அல்லது JPEG வடிவத்தில் இருக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் PDF அல்லது வேறு வடிவில் இருந்தால், அதை JPG அல்லது JPEG வடிவில் மாற்றிக்கொள்ளவும். இதற்கான ஆன்லைன் டூல்கள் நிறைய உள்ளன.
- ஆதார் கார்டு படத்தின் அளவு (Image Size) 300KB க்கு குறைவாக இருக்க வேண்டும்.
How to Link Aadhar with Electricity Bill Number
பின்வரும் படிகளை பின்பற்றி உங்களின் மின்இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கலாம்.
Step 1: https://www.tangedco.gov.in என்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: அதில் உள்ள ஆதார் படத்தின் மீது கிளிக் செய்யவும்.
Step 3: Service Connection Number என்ற இடத்தில் உங்களின் முழு மின்இணைப்பு எண்ணை Enter செய்யவும். இது உங்களின் மின் அட்டை மற்றும் முந்தைய மின் கட்டண ரசீதுகளில் இருக்கும்.
Step 4: இப்பொழுது உங்களின் மின்இணைப்பு எண்ணில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Type செய்து Enter என்ற பட்டனை அழுத்தவும்.
Step 5: இதில் Occupant details என்ற இடத்தில் Owner என்பதை தேர்வு செய்யவும். ஒருவேளை வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால் Tenant என்பதை தேர்வு செய்யலாம்.
பிறகு உங்களின் 12 இலக்க ஆதார் நம்பர், ஆதார் அட்டையில் இருப்பதை போன்ற பெயர் Type செய்ய வேண்டும்.
Browse என்பதை கிளிக் செய்து நீங்கள் தயாராக வைத்திருக்கும் JPG அல்லது JPEG வடிவில் உள்ள ஆதார் படத்தை பதிவேற்ற வேண்டும். பிறகு Upload என்பதை கிளிக் செய்தால் Upload ஆகிவிடும்.
கடைசியில் உள்ள Check Box யை டிக் செய்து Submit என்பதை அழுத்த வேண்டும்.
Step 6: இப்பொழுது திரையில் The details have been uploaded successfully என்ற செய்தி வருவதை காண்பீர்கள். அவ்வளவு தான் நீங்கள் வெற்றிகரமாக ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்கள்.
மேற்கூறிய செயல்முறைகளை உங்களின் மொபைல் அல்லது கணினி மூலமாக செய்யலாம். இதற்க்கு நீங்கள் சில நிமிடங்கள் நேரத்தை ஒதுக்கினாலே போதுமானது ஆகும். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.