TN Electricity

How to Pay EB Bill Online in Tamil | கரண்ட் பில் செலுத்துதல்

How to Pay EB Bill Online in Tamil: உங்களின் EB Bill யை ஆன்லைன் மூலம் செலுத்த விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம். அது ஒன்றும் அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. யார் வேண்டுமானாலும் மின்சார கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். அதற்க்கு எந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்? அதற்க்கு என்ன தேவைப்படும் போன்ற தகவல்களை விரிவாக ஆராயலாம்.

முன்பெல்லாம் மின்சார கட்டணம் செலுத்த வேண்டும் என்றால், போதும் போதும் என்றாகிவிடும். கட்டணம் செலுத்த மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்று  அங்கு வரிசையில் நின்று கட்ட வேண்டும். இதற்காக இருக்கும் வேலைகளை விட்டு வரவேண்டும். மின்சார கட்டணம் செலுத்த கடைசி தேதி நெருங்க நெருங்க கூட்டம் அலைமோதும். இவ்வாறெல்லாம் பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியதிருந்தது. 

ஆனால் இப்பொழுது அந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. அதாவது அனைத்து இடங்களும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் அதை வீட்டில் இருந்தே ஆர்டர் செய்யலாம். அது ஆடையாக இருந்தாலும் சரி அல்லது உணவாக இருந்தாலும் சரி அனைத்தையுமே ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் வசதி வந்துவிட்டது. அப்படி இருக்கும்போது EB Bill யை ஆன்லைனில் செலுத்த முடியாத என்ன? நிச்சயம் எளிதாக செலுத்தலாம். வாருங்கள் அதற்கான செயல்முறையை பார்க்கலாம்.

ஆன்லைனில் EB Bill யை செலுத்த என்ன தேவை?

நீங்கள் ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்துவதாக இருந்தால், பின்வருவனவற்றை தயாராக வைத்திருக்கவும்.

  • மின் நுகர்வோர் எண் (EB Number)
  • ATM கார்டு அல்லது UPI செயலி 
Read  How to Apply for TNEB New Connection Online in Tamil

How to Pay EB Bill Online in Tamil

மேலே சொன்ன இரண்டையும் தயாராக வைத்துக்கொண்டு பின்வரும் படிகளை பின்பற்றி ஆன்லைன் மூலம் EB Bill யை செலுத்தலாம்.

Step 1: முதலில் உங்களின் மொபைல் அல்லது கணினியின் Browser இல் TNEB Online Payment என்று Type செய்து தேடவும். இப்பொழுது முதலாவதாக வரும் TANGEDCO Online Payment என்ற இணைப்பை கிளிக் செய்யவும்.

TN EB Online Payment

Step 2: இப்பொழுது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இணையப்பக்கம் திறக்கும்.

Step 3: அந்த பக்கத்தில் உள்ள Quick Pay என்பதை அழுத்தவும்.

TANGEDCO-Online-Payment Quick Bill in Tamil

Step 4: தற்போது  TANGEDCO Quickpay பக்கம் திறக்கும். அதில் Enter Consumer Number என்ற இடத்தில் உங்களின் முழு EB Bill Number யை Type செய்யவும். இந்த முழு EB Number உங்களின் EB Bill அட்டை அல்லது ஏற்கனவே மின்சார கட்டணம் செலுத்திய ரசீதில் இருக்கும்.

Read  TNEB Online Payment New User Registration & Bill Payment

உதாரணமாக, முழு நுகர்வோர் எண் 0846700121621 என்றவாறு இருக்கும். சிலருக்கு ஒன்றிரண்டு எண்கள் குறைவாக இருக்கலாம்.

பிறகு அதற்க்கு கீழே உள்ள Captcha யை Enter செய்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

TN EB Consumer Number

Step 5: தற்போது Consumer Number, Consumer Name, Address, Bill Amount மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதி போன்ற தகவல்கள் இருக்கும். அவற்றை சரிபார்த்துவிட்டு Pay Bill என்பதை அழுத்தவும்.

TN EB Bill Pay

Step 6: இப்போது உங்களின் மின்சார கட்டணத்திற்கான பணத்தை எதன் மூலம் செலுத்துகிறீர்களோ அதை தேர்வு செய்யவும். Credit Card, Debit Card, UPI மற்றும் Net Banking ஆகியவற்றில் ஏதாவது ஒரு முறையை பயன்படுத்தி பணத்தை செலுத்தலாம்.

இங்கு நான் Rupay ATM Card மூலம் செலுத்தப்போகிறேன். எனவே Rupay என்பதை தேர்வு செய்கிறேன். உங்களுக்கு வேண்டிய விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

Debit Card - TN EB Bill Payment

Step 7: Terms and Condition Box யை டிக் செய்து Confirm Pay என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

TANGEDCO-Online-Payment

Step 8: Terms and Condition பெட்டியை டிக் செய்து Debit Card என்பதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு Rupay என்பதை கிளிக் செய்யவும்.

Payment Method for TN EB Bill

Step 9: இப்பொழுது உங்களின் ATM கார்டின் 16 இலக்க எண்கள், காலாவதி தேதி, CVV / CVC Number மற்றும் ATM Card இல் உள்ள உங்களின் பெயர் போன்றவற்றை உள்ளிடவும். இந்த அனைத்து தகவல்களும் ATM அட்டையில் இருக்கும். இதில் CVV Number என்பது ATM  கார்டின் பின்பக்கத்தில் மூன்று இலக்கங்களாக இருக்கும்.

Read  TNEB Online Payment New User Registration & Bill Payment

கடைசியில் உள்ள Make Payment என்பதை அழுத்தவும்.

BillDesk-All-Your-Payments

Step 10: இப்போது உங்களின் வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும். அந்த OTP Number யை Enter செய்து Submit செய்தால், உங்களின் EB Bill க்கான பணம் செலுத்தப்படும்.

Submit TN EB Bill Payment

பணம் செலுத்திய பிறகு அதற்கான ஒரு மின்னணு ஒப்புகை சீட்டு (e-Receipt) வரும். தேவைப்பட்டால் அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

1. எனது EB Bill யை ஆன்லைன் மூலம் செலுத்த முடியுமா?

முடியும். 8உங்களின் மொபைல் அல்லது கணினியை பயன்படுத்தி கட்டணத்தை செலுத்தலாம்.

2. மின்சார கட்டணத்தை எந்த இணையதளத்தில் செலுத்த வேண்டும்?

https://www.tnebnet.org/awp/login?locale=ta என்ற இணையதளத்தில் செலுத்தலாம்.

3. மின்சார கட்டணத்தை எந்த நேரத்தில் செலுத்த வேண்டும்?

நீங்கள் காலை, மாலை மற்றும் இரவு போன்ற எந்த நேரத்திலும் ஆன்லைன் மூலம் மின் கட்டணத்தை செலுத்தலாம். ஞாயிற்றுகிழமை மட்டும் காலை 11.30 மேல் செலுத்த வேண்டும்.

4. மின்சார கட்டணத்திற்கு முன்தொகையை (Advance Amount) செலுத்த முடியுமா?

முடியும். முன்கூட்டியே அட்வான்ஸ் தொகையை செலுத்தலாம். முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை செலுத்தப்பட்டால், EB Bill வரும்போது அட்வான்ஸ் பணத்தில் இருந்து கழித்துக்கொள்ளப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole