TN Electricity

TNEB Online Payment New User Registration & Bill Payment

TNEB Online Payment New User Registration: நீங்கள் உங்களின் Electricity Bill யை மின்சார அலுவலகத்திற்கு நேரடியாக சென்று செலுத்துபவரா? ஆம் என்றால் இந்த கட்டுரை உங்களுக்காக தான். உங்களின் மின்சார கட்டணத்தை நீங்களே மிக எளிதாக Online மூலம் செலுத்த முடியும். இதற்கான முழு விளக்கத்தையும் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

இன்றைய கால கட்டத்தில் மின்சாரத்தின் தேவை மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் மின்சாரத்தால் இயங்கும் மின்சாதனங்கள், நம்முடைய வாழ்க்கையை எளிமையாக்குகிறது. இதனால் மின்சாரம் நமது வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு தேவையான மின்சாரத்தை கொடுக்கிறது. அதாவது வீடு, கடை மற்றும் தொழிற்சாலை போன்ற அனைத்திற்கும் மின் இணைப்பை வழங்குகிறது. நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஏற்ப Electricity Bill-யை செலுத்த வேண்டும்.

மின்சார வாரியம் யூனிட் (Unit) என்ற வணிக அலகை கொண்டு நுகர்வோர் பயன்படுத்தும் மின்சாரத்தை அளவிடுகிறது. ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மின்பயனீட்டு அளவை கணக்கிடுகிறது. மின்பயனீட்டு அளவை கணக்கிட்ட பிறகு, குறிப்பிட்ட காலத்திற்குள் அதற்கான கட்டணத்தை, மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.

How to Calculate TN Electricity Bill

மின்சார பயனீட்டு அளவிற்கான கட்டணத்தை Tariff-யை பொறுத்து வெவ்வேறு கட்டங்களில் கணக்கிடுகின்றனர். 

வீட்டிற்குரிய மின் கட்டணங்களை பின்வருமாறு கணக்கிடுகின்றனர்.

Table of  Slab Rate For TN Electricity:

From UnitTo UnitRate (Rs)Maximum Unit
11000100
11000200
1012001.5200
11000500
1012002500
2015003500
110009999999
1012003.59999999
2015004.69999999
501Above6.69999999

 

மேற்கண்ட அட்டவணையை எளிதாக புரிந்துகொள்ள கீழே சில எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன

எடுத்துக்காட்டு -1

முருகன் என்பவரின் வீட்டின் மின்சார பயனீட்டு அளவு 80 யூனிட் என்று கொள்வோம்.

இதில் 80 யூனிட் என்பது அட்டவணையில் உள்ள Maximum Unit 100-ல் வருகிறது.

முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் கிடையாது என்பதால், முருகன் என்பவர் மின்சார கட்டணத்தை செலுத்த தேவை இல்லை.

எடுத்துக்காட்டு -2

குமரேசன் என்பவரின் வீட்டின் மின்சார பயனீட்டு அளவு 160 யூனிட் என்று கொள்வோம்.

இங்கு 160 என்ற யூனிட் Maximum Unit 200 -ல் வருகிறது. 

இதில் முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. ஆனால் 101 -லிருந்து 160 யூனிட் வரை அட்டவணையில் உள்ளபடி ஒரு யூனிட்டிற்கு ரூ.1.5 என்ற வீதத்தில் கணக்கீடு செய்ய வேண்டும்.

Read  How to Pay EB Bill Online in Tamil | கரண்ட் பில் செலுத்துதல்

மொத்த யூனிட் = 160

முதல் 100 யூனிட் இலவசம் என்பதால் = 160 – 100 = 60 யூனிட்

செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் = 60 * 1.5 =  ரூ.60

எடுத்துக்காட்டு -3

வேலு என்பவரது வீட்டின் மின்பயனீட்டு அளவு 260 யூனிட் என்று கொள்வோம்.

260 என்ற என்ற யூனிட் Maximum Unit 500 -ல் வருவதால் அதில் உள்ள கட்டணத்தைபடி கணக்கீடு செய்ய வேண்டும் 

மொத்த யூனிட் = 260

அட்டவணையில் உள்ளபடி 101-200 -க்கு ரூ.2 மற்றும் 201-500 -க்கு ரூ.3 என்று கணக்கிட வேண்டும். 

முதல் 100 யூனிட் இலவசம் என்பதால் = 260 – 100 = 160 யூனிட்

160 யூனிட்டில்  100 -யூனிட்டை ரூ.2 உடனும், 60 யூனிட்டை ரூ. 3 உடனும் பெருக்க வேண்டும்.

100 * 2 = 200  மற்றும் 60 * 3 = 180

செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் = ரூ.380

குறிப்பு :

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் Fixed Cast பற்றி குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட கட்டணத்துடன் Fixed Cost -ம் சேர்த்து கட்ட வேண்டும்.

From Unit To Unit Fixed Cost (FC) Rs 
11000
10120020
20150030

Steps to TNEB Online Payment New User Registration

TNEB இணையதளத்தில் ஏன் Account -யை Register செய்ய வேண்டும்?

நீங்கள் முதல் முறையாக தமிழ்நாடு மின்சார கட்டணத்தை Online வழியாக செலுத்தும் போது, அதில் கணக்கை Register செய்ய வேண்டும். தற்போது கணக்கை பதிவு செய்யாமல் Quick Pay வசதியை பயன்படுத்தியும் கட்டணத்தை செலுத்த முடியும்.

TNEB இணையதளத்தில் Account -யை Register செய்தால் மின்சார கட்டணத்தை Online -ல் செலுத்துதல், கடந்த கால கட்டணங்களை பார்வையிடுதல், தேவைப்படும் நேரத்தில் E Receipt -யை Print எடுத்தல், Online புகார் அளித்தல் இதுபோன்ற மேலும் பல வசதிகளை பெறலாம்.

பின்வரும் செயல்முறையின் மூலம் TNEB -ல் Account -யை Register செய்யலாம்.

Step 1: https://www.tnebnet.org/awp/login என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: New User என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Click New User - TNEB Online Payment

Step 3: இப்பொழுது New User Registration என்ற பக்கம் திறக்கும். அதில் New Application No / Service no என்ற இடத்தில் Existing Service Connection Number என்பதை Select செய்து Enter என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 4: Region என்ற இடத்தில் Select என்பதை கிளிக் செய்க.

Step 5: இப்போது உங்களின் பகுதியை (Region) தேர்வு செய்ய வேண்டும். 

Step 6: Consumer No என்ற இடத்தில் Region Code இல்லாமல், மீதமுள்ள 9 அல்லது 10 இலக்க எண்ணை உள்ளிட்டு Check Details என்பதை அழுத்தவும்.

Read  How to Apply for TNEB New Connection Online in Tamil

Click Check Details - TNEB Online Payment

Step 7: தற்போது நீங்கள் கொடுத்த Consumer Number, யாருடைய பெயரில் உள்ளதோ அவரின் பெயர், முகவரி போன்றவை தோன்றும். இப்போது Confirm என்பதை கிளிக் செய்க.

Confirm

Step 8: இந்த பக்கத்தில் Name, Email id, Password, Date of Birth, Gender, Marital Status, Occupation, Address போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.

Step 9: பிறகு Submit என்பதை கிளிக் செய்க.

Enter All Details and Submit - TNEB Online Payment

Step 10: இப்பொழுது நீங்கள் பதிவு செய்த Email ID -க்கு Activation Link அனுப்பப்படும்.

Step 11: நீங்கள் பதிவு செய்த Email id -யை திறந்து, அதில் உள்ள Activate Link -யை கிளிக் செய்தால், உங்களின் Tamilnadu Electricity Board (TNEB) கணக்கு Activate ஆகிவிடும்.

தற்போது நீங்கள் TNEB Online Payment செய்வதற்கான New User Registration யை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள்.

குறிப்பு :

TNEB கணக்கிற்கான Username உங்களின் முழு Consumer Number ஆகும். Password ஆனது நீங்கள் கணக்கை Register செய்யும்போது கொடுத்த Password ஆகும்.

Steps to Pay TN Electricity Bill Online 

Tamilnadu Electricity Bill -யை சில நிமிடங்களில் Online மூலம் எளிமையாக செலுத்தலாம். அதற்கான படிகள் இங்கே.

Step 1: தமிழ்நாடு மின்சார வாரிய இணையதளத்தின் Login பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: உங்களின் Username மற்றும் Password -யை உள்ளிட்டு கணக்கை Login செய்ய வேண்டும்.

Login - TNEB Online Payment

Step 3: இப்போது Payment Details என்ற பக்கம் திறக்கும். அதில் Consumer Number, Name, Address, Bill Amount மற்றும் கட்டணத்தை செலுத்த வேண்டிய கடைசி தேதி போன்ற தகவல்களை இருக்கும்.

Step 4: கடைசியாக உள்ள Pay Bill என்பதை கிளிக் செய்க அல்லது முன்பணத்தை செலுத்த Pay Advance என்பதை கிளிக் செய்க.

Click Pay Bill - TNEB Online Payment

Step 5: Payment Option -ல் UPI/QR/Rupay என்பதை தேர்வு செய்யவும்.

TANGEDCO-Online-Payment

Step 6: Terms & Condition பக்கத்தில் Check Box -யை டிக் செய்து, Confirm Pay என்பதை கிளிக் செய்க.

Click Confirm Now - TNEB Online Payment

Step 7: Terms and Conditions Box யை டிக் செய்து நீங்கள் கட்டணத்தை UPI மூலம் (Google Pay, PhonePe) செலுத்துகிறீர்களா அல்லது ATM Card மூலம் செலுத்த விரும்புகிறீர்களா என்பதை தேர்வு செய்யவும். நான் இங்கு UPI என்று தேர்வு செய்துள்ளேன்.

பிறகு Virtual Payment Address (VPA) என்டர் செய்ய வேண்டும். அதாவது உங்களின் UPI ID யை Enter செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக VPA என்பது 8969859865@ybl, kumarangtr@ybl போன்ற வடிவத்தில் இருக்கும். இந்த VPA ஆனது உங்களின் UPI செயலியின் Settings இல் இருக்கும்.

TN EB Bill Payment online tamil

UPI ID யை உள்ளிட்டவுடன் Complete Payment on Phone என்ற பட்டனை அழுத்தவும்.

Read  How to Link Aadhaar with Electricity Bill Number Online

Step 8: இப்பொழுது உங்களின் மொபைல் போனில் உள்ள UPI செயலிக்கு ஒரு Notification வரும். அதில் Pay என்பதை கிளிக் செய்து மின்சார கட்டணத்தை செலுத்தவும்.

Tn EB Bill Pay Via UPI App

Step 9: தற்போது மின்சார கட்டணத்தை நீங்கள் வெற்றிகரமாக செலுத்திவிட்டீர்கள். கட்டணத்தை செலுத்தியவுடன் அதற்கான ஓப்புகைச் சீட்டு (Receipt) வரும்.

Get TNEB Bill Receipt

குறிப்பு :

நீங்கள் EB Bill -யை Debit Card -ன் மூலம் செலுத்தும்போது 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை வங்கி கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஆனால் UPI வழியே செலுத்தினால் வங்கி கட்டணம் கிடையாது. எனவே முடிந்தவரை UPI App மூலமாக செலுத்துங்கள்.

How to Pay the Electricity Bills of Others

உங்களின் TNEB கணக்கை கொண்டு மற்றவர்களின் Electricity Bill -யையும் Pay செய்ய முடியும்.  இவ்வாறு ஒரு கணக்கை பயன்படுத்தி எத்தனை பேரின் கரண்ட் பில்லையும் கட்ட முடியும்.

TNEB கணக்கை பயன்படுத்தி கீழ்காணும் செயல்முறையில் மற்றவர்களின் Electricity Payment-யை Online -ல் செலுத்தலாம்.

Step 1: TNEB கணக்கை Login செய்யவும்.

Step 2: Add Number என்பதை தேர்வு செய்யவும்.

Click Add Number - TNEB Online Payment

Step 3: Region என்ற இடத்தில் Select என்பதை கிளிக் செய்யவும்.

Step 4: இப்பொழுது Region Code தேர்ந்தெடுக்கவும். 

Step 5: Region Code -யை தவிர்த்து மீதமுள்ள 9 அல்லது 10 இலக்க எண்ணை உள்ளிட்டு Check Details என்பதை கிளிக் செய்யவும்.

Step 6: இப்பொழுது நீங்கள் Add செய்த Consumer No குறித்த தகவல்கள் வரும். அதற்க்கு கீழே உள்ள Confirm என்பதை கிளிக் செய்யவும்.

Confirm Click

Step 7: தற்போது நீங்கள் Add செய்த மற்றவரின் Consumer No உங்களின் கணக்கில் Add ஆகிவிடும்.

Step 8: Payment Details என்பதை கிளிக் செய்தால், EB -க்கு செலுத்த வேண்டிய தொகை பற்றிய தகவல்கள் வரும். அதை கிளிக் செய்து மேற்சொன்னபடி கட்டணத்தை கட்டலாம்.

See Payment Details

If you forgot your Username and Password

Tamilnadu Electricity Board இணையத்தளத்தில்  Login செய்வதற்கான Username மற்றும் Password -யை மறந்துவிட்டால் அதை எவ்வாறு மீட்டெடுப்பது என்பதை பற்றி காணலாம்.

Step 1: TNEB Login பக்கத்தில் உள்ள Forgot Username / Password என்பதை கிளிக் செய்யவும்.

Forgot Username and Password

Step 2: Existing Service Connection Number என்பதை தேர்வு செய்து Submit என்பதை கிளிக் செய்க.

Step 3: Region Code மற்றும் Consumer Number -யை கொடுத்து Submit என்பதை கிளிக் செய்யவும்.

Send Mail

Step 4: இப்போது உங்களின் Email Id தோன்றும். அதில் Send Mail என்பதை கிளிக் செய்க.

Step 5: தற்போது உங்களின் Email Id -க்கு ஒரு Mail வரும். அதை திறந்து பார்த்தால் Username மற்றும் ஏற்கனவே பயன்படுத்திய Password போன்ற தகவல்கள் இருக்கும்.

முடிவுரை 

இன்று நீங்கள் மின்சார கட்டணத்தை செலுத்துவது பற்றிய பல்வேறு தகவல்களை தெரிந்து கொண்டீர்கள். இந்த தகவல்களை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole