How to Apply Community Certificate Online in Tamilnadu | TNeGA
Community Certificate என்று சொல்லப்படும் சாதிச் சான்றிதழை பெறுவது தற்போது மிகவும் எளிதாகும். நீங்கள் எங்கும் செல்லாமல் Online மூலமாகவே சாதிச் சான்றிதழை Apply செய்து பெற்றுக்கொள்ள முடியும். இதை எப்படி விண்ணப்பிப்பது, இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன, எவ்வளவு கட்டணம் போன்ற அனைத்து தகவல்களையும் விரிவாக இந்த கட்டுரையில் காணலாம்.
சாதிச் சான்றிதழ் பல்வேறு காரணங்களுக்காக நமக்கு தேவைப்படுகிறது. ஒரு பள்ளியில் சேர்வதற்கும், சலுகைகளை பெறுவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பெறுவதற்கும் சாதிச் சான்றிதழ் தேவைப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு Community Certificate யை பெறுவதற்கு தாலுக்கா அலுவலகத்தில் சென்று Apply செய்ய வேண்டும். பிறகு அந்த சான்றிதழை பெறுவதற்கு பலமுறை அலைய வேண்டியதிருக்கும்.
ஆனால், இன்று அந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. தற்போது நீங்கள் சாதிச் சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை Online மூலமாகவே விண்ணப்பித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக TNeGA என்ற TamilNadu e – Governance Agency என்ற சேவை தொடங்கப்பட்டது.
இந்த இணையதளம் மூலம் TN e-Sevai, நெட் சென்டர் அல்லது வீட்டில் இருந்தபடியே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். இந்த கட்டுரையில் நீங்கள் வீட்டில் இருந்தவாறே எப்படி சாதிச் சான்றிதழை விண்ணப்பிப்பது என்று காணலாம்.
Table of Contents
சாதிச் சான்றிதழை அப்ளை செய்வதற்கு தேவையான ஆவணங்கள்
நீங்கள் சாதிசான்றிதழை அப்ளை செய்வதற்கு முன்பு கீழே காணும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- புகைப்படம் (Photo)
- ஏதாவது முகவரிச் சான்று (Any Address Proof)
- தந்தை, தாய் அல்லது உடன் பிறந்தவர்கள் இவர்களில் ஒருவரது சாதிச் சான்றிதழ் (Community Certificate of Father or Community Certificate of Mother or Community Certificate of Siblings)
- சுய உறுதிமொழி (Self-Declaration of Applicant)
மேற்கண்ட ஆவணங்களை Scan செய்து சரியான வடிவம் (Format) மற்றும் அளவுகளில் (Size) வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆவணங்களை எந்த வடிவம் மற்றும் அளவுகளில் வைத்திருக்க வேண்டும்?
நீங்கள் Scanner அல்லது மொபைல் மூலம் ஸ்கேன் செய்த பிறகு அந்த ஆவணங்கள் pdf, jpeg, jpg, gif, png ஆகியவற்றில் ஏதாவது ஒரு வடிவத்தில் இருக்க வேண்டும். ஆவணங்களின் அளவு அதிகபட்சமாக 200KB க்குள் இருக்குமாறும் புகைப்படத்தின் அளவு 50KB க்குள் இருக்குமாறும் பார்த்துக்கொள்ள வேண்டும்.
இதற்காக ஆன்லைனில் பல இலவச Tools கள் உள்ளன. இதை பயன்படுத்தி அவற்றின் வடிவம் மற்றும் அளவுகளை மாற்றலாம்.
கட்டணம் – Charges For Community Certificate
நீங்கள் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது அதற்கான கட்டணமாக 60 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த பணத்தை Net Banking, ATM Card, Credit Card போன்ற வழிகளில் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
நீங்கள் நெட் சென்டர்களில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணத்துடன், அவர்கள் அப்ளை செய்ததற்கான சேவை கட்டணத்தையும் சேர்த்து வசூலிப்பார்கள். ஒருவேளை நீங்களே விண்ணப்பித்தால் Rs.60 யை செலுத்தினால் போதுமாகும்.
Steps For Apply Community Certificate Online
Community Certificate யை Apply செய்வதற்கான செயல்முறைகளை படிப்படியாக கீழே குறிப்பிட்டுள்ளேன். அதை பின்பற்றி நீங்கள் விண்ணப்பிக்க தொடங்கலாம்.
TNeGA Account Registration For New User
Step 1: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற e-Sevai இணைய தளத்திற்கு செல்லவும்.
Step 2: அதில் Sign In என்பதற்கு கீழே உள்ள Citizen Login என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் நேரடியாக Login செய்யலாம். ஒருவேளை நீங்கள் புதியவர் என்றால் கணக்கை உருவாக்க New User? SignUp Here என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது Registration பக்கம் திறக்கும். அதில் உங்களின் Name, District, Taluk, Mobile Number, Email Id, Aadhaar Number, Login ID மற்றும் Password போன்றவற்றை நிரப்புக.
இதில் Login ID என்பதில் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளும்படி ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறையும் Login செய்யும்போது இந்த Login ID யை Type செய்ய வேண்டியதிருக்கும்.
எடுத்துக்காட்டாக, saravanan, saravanan6856, saravan859 போன்ற வடிவில் User ID யை உருவாக்கலாம். நீங்கள் Type செய்யும் User ID யை ஏற்கனவே யாராவது பயன்படுத்திக்கொண்டிருந்தால், அதை நீங்கள் பயன்படுத்த முடியாது. எனவே வேறு ஒன்றை முயற்சிக்கலாம்.
கடைசியாக Signup என்ற பட்டனை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது நீங்கள் Enter செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP யை உள்ளிட்டு Verify OTP என்ற பட்டனை கிளிக் செய்க.
தற்போது உங்களின் TNeGA கணக்கு வெற்றிகரமாக Registration செய்யப்பட்டுவிடும்.
Login TNeGA Account
Step 1: நீங்கள் புதிய கணக்கை வெற்றிகரமாக பதிவு செய்தவுடன் அதை Login செய்யலாம். Sign In பக்கத்திற்கு சென்று உங்களின் Username மற்றும் Password யை உள்ளிட்டு Login என்பதை கிளிக் செய்யவும்.
Step 2: கணக்கு திறக்கப்பவுடன் முதலாவதாக உள்ள Revenue Department என்பதை தேர்வு செய்யவும். ஏனெனில் சாதிச் சான்றிதழ் வருவாய் துறையின் கீழே வருகிறது.
Step 3: தற்போது Revenue Department இன் கீழ் வரும் அனைத்து சேவைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் Community Certificate என்பதை தேர்வு செய்க.
Step 4: கிளிக் செய்தவுடன் ஒரு Pop Up திரை திறக்கும். அதில் Proceed என்ற பட்டனை அழுத்தவும்.
CAN Registration
நீங்கள் e Sevai இணையதளத்தில் எந்தவொரு சான்றிதழ் பெற வேண்டும் என்றாலும் CAN Number க்கு Register செய்ய வேண்டும். CAN Number என்பது Citizen Access Number ஆகும். இதை தமிழில் குடிமக்கள் கணக்கு எண் என்று சொல்லலாம். இந்த CAN எண்ணை ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது ஆகும்.
பிறகு நீங்கள் எத்தனை வகையான சான்றிதழ்கள் வேண்டுமென்றாலும் இந்த ஒரு CAN எண்ணை கொண்டு Apply செய்யலாம்.
நீங்கள் ஏற்கனவே CAN நம்பரை பதிவு செய்திருந்தால், நேரடியாக விண்ணப்பிக்கும் பக்கத்திற்கு செல்லலாம். ஒருவேளை நீங்கள் புதியவராக இருந்தால் குடிமக்கள் கணக்கை எவ்வாறு பதிவு செய்வது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
சரி குடிமக்கள் கணக்கு எண்ணை எவ்வாறு பதிவு செய்வது என்று காண்போம்.
Step 5: New CAN Number யை Registration செய்ய Register CAN என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: CAN பதிவு செய்யும் பக்கத்தில் என்னென்ன தகவல்கள் நிரப்ப வேண்டும் என்பதை கீழ்காணுமாறு கொடுத்துள்ளேன்.
Applicant Details:
விண்ணப்பதாரரின் Aadhaar Number, Name, Gender, Marital Status, Date of Birth, Father Name, Religion, Community, Occupation மற்றும் Education Qualification போன்ற அனைத்து விவரங்களையும் சரியாக Type செய்ய வேண்டும்.
இவற்றில் * என்ற குறியீடு உள்ள இடங்கள் கட்டாயமாக நிரப்ப வேண்டும். மற்ற இடங்களில் உங்களுக்கு விருப்பம் இருந்தால் நிரப்பலாம்.
Current Address:
உங்களின் கதவு எண், தெரு பெயர், கிராமத்தின் பெயர், வட்டம், மாவட்டம் மற்றும் பின் கோடு போன்ற முழு முகவரியையும் Enter செய்யவும்.
உங்களின் தற்போதைய முகவரியும், நிரந்தர முகவரியும் ஒன்றாக இருந்தால், If Permanant Address Same as Current Address என்ற இடத்தில் டிக் செய்யவும். ஒருவேளை இரண்டும் வெவ்வேறாக இருந்தால் அதை டிக் செய்யாமல் முழுவதுமாக Type செய்யவும்.
Contact Details & Bank Details:
Mobile Number, Email ID ஆகிய இரண்டையும் Enter செய்க. இதில் மொபைல் நம்பர் கட்டாயமாகும்.
Generate OTP என்ற பட்டனை அழுத்தி OTP Verification செய்யவும்.
Bank Account Details யை விருப்பத்தின் பேரில் நிரப்பலாம். ஆனால் அது கட்டாயம் இல்லை.
பிறகு கடைசியாக உள்ள Register என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: இப்பொழுது உங்களுக்கான CAN Number Generate ஆகிவிடும். அந்த எண்ணை குறித்து வைத்துக்கொள்ளவும்.
தற்போது நீங்கள் குடிமக்கள் கணக்கு எண்ணை உருவாக்கிவிட்டீர்கள். அடுத்து சாதிச் சான்றிதழுக்கு Apply செய்ய Proceed என்ற பட்டனை அழுத்தவும்.
Community Certificate Apply Online
Step 8: Community Certificate யை Apply செய்யும் Form இல், CAN Number இல் பதிவு செய்த Applicant Details, Current Address, Permanat Address மற்றும் Contact Details அனைத்தும் தானாகவே நிரப்பிக்கொள்ளும்.
Step 9: Form Details என்ற பிரிவில் உள்ளவற்றை நிரப்பவும். தந்தையின் Community மற்றும் Caste, தாயின் Community மற்றும் Caste ஆகியவற்றை தேர்வு செய்யவும்.
Requested Community மற்றும் Requested Caste என்பதில் உங்களுக்கானதை தேர்வு செய்யவும்.
உங்களின் குடும்ப உறுப்பினர்களில் யாராவது இந்த tnesevai இணையதளம் மூலம் வருவாய் துறையின் கீழ் ஏதேனும் சான்றிதழை பெற்றிருந்தால், Yes என்பதை தேர்வு செய்து அதன் நம்பரை Enter செய்யவும். இல்லையென்றால் No என்பதை தேர்வு செய்யவும்.
Step 10: Submit என்ற பொத்தானை கிளிக் செய்யவும்.
Upload Documents
Step 11: இந்த பக்கத்தில் முதலில் Download Self Declaration Form யை Download செய்து அதை Print எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அதில் நீங்கள் கையொப்பம் இட்டு ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
Step 12: Select Document என்ற இடத்தில் ஒவ்வொன்றாக தேர்வு செய்து அதற்கான ஆவணத்தை Add செய்தவுடன் Upload செய்யவும். அனைத்து ஆவணங்களையும் Upload செய்த பிறகு Make Payment என்ற பட்டன் தோன்றும். அந்த பட்டனை கிளிக் செய்யவும்.
Make Payment
Step 13: சாதிச் சான்றிதழை பெறுவதற்கு நீங்கள் 60 ரூபாயை செலுத்த வேண்டும். கீழே உள்ள Check Box யை டிக் செய்து Make Payment என்பதை கிளிக் செய்க.
Step 14: இதில் இருக்கும் தேர்வுகளில் ஏதாவது ஒன்றின் மூலம் பணத்தை செலுத்தலாம். நான் இங்கு Debit Card (ATM Card) என்பதை தேர்வு செய்துள்ளேன். ATM Card தகவல்களை உள்ளிட்டு Make Payment என்பதை அழுத்தவும்.
Step 15: இப்பொழுது உங்கள் வங்கியில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த நம்பரை Enter செய்து Submit செய்தால் பணம் செலுத்தப்பட்டுவிடும். நீங்கள் பணம் செலுத்திய பின்பு ஒப்புகைசீட்டை பெறுவீர்கள். அதை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது நீங்கள் வெற்றிகரமாக Community Certificate க்கு Online மூலம் Apply செய்துவிட்டீர்கள். உங்களின் விண்ணப்பத்தை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் Approve செய்த பிறகு உங்களின் சாதிச் சான்றிதழை Download செய்துகொள்ளலாம்.
How to Check Community Certificate Application Status
நீங்கள் விண்ணப்பித்த பிறகு Application இன் Status யை தெரிந்துகொள்ள முடியும்.
Step 1: உங்களின் TNeGA Account யை Login செய்யவும்.
Step 2: Revenue Department > Community Certificate என்றவாறு தேர்வு செய்யவும்.
Step 3: Check Status என்ற Option யை தேர்வு செய்யவும்.
Step 4: அதில் உங்களின் Application Number யை Type செய்து Search என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது விண்ணப்பத்தின் நிலையை தெரிந்துகொள்ளலாம்.
How to Download Community Certificate Online
உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட பிறகு சாதிச் சான்றிதழை Download செய்து கொள்ளலாம்.
ஏற்கனவே Application Status யை Check செய்த அதே முறையை பின்பற்றி செல்லவும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் Download Certificate என்ற Option தோன்றும். அந்த லிங்கை கிளிக் செய்து Community Certificate யை Download செய்யலாம்.
இந்த சான்றிதழை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். எனவே சான்றிதழ் தொலைந்துவிட்டால் வருத்தப்பட தேவையில்லை. சான்றிதழின் எண்ணை கொண்டு மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முடிவுரை
இந்த கட்டுரையில் தமிழ்நாடு இ சேவை இணையதளத்தின் மூலம் சாதிச் சான்றிதழை எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றிய விரிவான தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். இதே போன்று நீங்கள் Income Certificate, Nativity Certificate போன்ற பல்வேறு சான்றிதழ்களையும் இந்த இணையதளத்தின் மூலம் பெற முடியும். இந்த பதிவில் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.