How to Apply For Income Certificate Online in Tamil Nadu
இன்று பல்வேறு தேவைகளுக்காக வருமானச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அரசாங்க நலத்திட்ட உதவிகள் பெற, பள்ளிகளில் சேர, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு பெற என பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் (Income Certificate) கட்டாயமாக தேவைப்படுகிறது.
முன்பெல்லாம் வருமான சான்றிதழை பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் அலுவலகம் என்று பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டி இருந்தது. அந்த சான்றிதழ் கைக்கு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
ஆனால் இன்றைய காலத்தில் அவ்வளவு கஷ்டப்பட வேண்டிய தேவையில்லை. உங்களுக்கு அருகில் இருக்கும் இ சேவை மையத்திற்க்கோ அல்லது நீங்களே ஆன்லைன் மூலம் Income Certificate க்கு Apply செய்யலாம்.
உங்களுக்கு வருமானச்ச் சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். அதை முழு விவரங்களையும் தகுந்த படங்களுடன் உங்களுக்கு விளக்குகிறேன். இந்த பதிவை முழுமையாக படித்த பிறகு நீங்களே ஆன்லைன் மூலம் Apply செய்வீர்கள்.
சரி வாருங்கள் தொடங்கலாம்.
Table of Contents
வருமானச் சான்று என்றால் என்ன?
வருமானச் சான்று என்பது ஒரு தனிநபரின் அல்லது குடும்பத்தின் ஆண்டு வருமானச்த்தை குறிப்பிடக்கூடிய வருவாய்த் துறையால் வழங்கப்படும் சான்றிதழ் ஆகும். இவ்வாறு பெறப்படும் வருமானச்ச் சான்றிதழ் ஆனது ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.
இந்த வருமானச் சான்றிதழ் ஆனது குடிமக்களுக்கு பல்வேறு காரணங்களுக்காக தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டாக, மாணவர்களின் சேர்க்கை, உதவித்தொகை, வீடு கட்டும் திட்டம் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு வருமானச் சான்றிதழ் கட்டாயமாகும்.
மேலும், கிரீமி லேயர் (Creamy Layer) OBC Certificate யை பெறுவதற்கு வருமானச்ச் சான்றிதழ் தேவையாகும்.
வருமானச் சான்றிதழில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?
தற்போது ஆன்லைன் மூலம் வழங்கப்படும் வருமானச் சான்றிதழில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
- பயனாளரின் புகைப்படம்
- Income Certificate Number
- சான்றிதழ் வழங்கப்பட்ட தேதி
- பயனாளரின் முகவரி
- குடும்ப ஆண்டு வருமானம்
- குடும்ப உறுப்பினர்களின் பெயர் மற்றும் அவர்களின் வருமானம்
- சான்றிதழ் செல்லுபடியாகும் காலம்
வருமானச் சான்றிதழுக்கு தேவையான ஆவணங்கள்
நீங்கள் வருமானச் சான்றிதழை Online மூலம் Apply செய்வதற்கு முன்பு பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
- Applicant Photo
- Any Address Proof
- Family Smart Card
- Self Declaration of Applicant
நீங்கள் Salary என்பதை தேர்வு செய்யும் போது, Salary Certificate தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மேற்கண்ட ஆவணங்களை Scan செய்து Upload செய்வதற்கு தயாராக வைத்துக்கொள்ளவும்.
இவற்றில் புகைப்படத்தின் அளவானது 50 KB க்கு மிகாமல் இருக்க வேண்டும். மற்ற ஆவணங்கள் 200 KB க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் நீங்கள் பதிவேற்றம் செய்யும் ஆவணங்கள் PDF, JPEG, JPG, GIF மற்றும் PNG போன்ற வடிவங்களில் இருக்கலாம்.
ஆவணங்களின் அளவை குறைக்க பல்வேறு ஆன்லைன் Tool கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி உங்களுக்கு தேவையான அளவுகளில் குறைக்கலாம்.
Name of State | Government of Tamilnadu |
Department | Tamil Nadu e-Governance Agency |
Service Type | Income Certificate |
Apply Mode | Online |
Official Website | www.tnesevai.tn.gov.in |
Email id | tnesevaihelpdesk@tn.gov.in |
Toll Free Number | 1100 |
Steps For Apply Income Certificate Online in Tamilnadu
பின்வரும் செயல்முறையை பின்பற்றி Online மூலம் வருமானச் சான்றிதழை விண்ணப்பிக்கலாம்.
Step 1: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: Citizen Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: உங்களின் Username மற்றும் Password யை உள்ளிட்டு Login செய்யவும்.
நீங்கள் இப்பொழுது தான் முதல்முறையாக TNeGA இணையதளத்தில் நுழைபவர் என்றால், New User ? SignUp here என்பதை கிளிக் செய்து Register செய்யவும்.
Step 4: இதில் பல்வேறு துறைகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். அதில் Revenue Department என்ற துறையை தேர்வு செய்யவும்.
Step 5: தற்போது வருவாய்துறையால் வழங்கப்படும் பல்வேறு சான்றிதழ்களின் வரிசை தோன்றும். அதில் Income Certificate என்பதை தேர்வு செய்க.
Step 6: வருமானச் சான்றிதழ் விண்ணப்பிப்பதற்கான சில தகவல்கள் வழங்கப்பட்டிருக்கும். அதற்க்கு கீழே உள்ள Proceed என்ற பட்டனை அழுத்தவும்.
Step 7: இந்த பக்கத்தில் உங்களின் CAN Number, Name, Mobile Number, Aadhaar Number போன்றவற்றில் ஏதாவது ஒன்றை Enter செய்து Search என்பதை கிளிக் செய்க.
ஒருவேளை நீங்கள் குடிமக்கள் கணக்கு எண் என்று சொல்லப்படும் CAN Number க்கு பதிவு செய்யவில்லை என்றால், Register CAN என்பதை கிளிக் செய்து பதிவு செய்ய வேண்டும்.
Step 8: நீங்கள் Search பட்டனை அழுத்தியவுடன் உங்களின் CAN Number மற்றும் பிற தகவல்கள் காட்டும். அதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 9: பிறகு அதற்க்கு கீழே உங்களின் Aadhaar Number மற்றும் Date of Birth யை Type செய்து Generate OTP என்பதை கிளிக் செய்க.
Step 10: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை Enter செய்து Confirm OTP யை அழுத்தவும்.
Step 11: Proceed என்ற பட்டனை கிளிக் செய்க.
Step 12: இதில் Applicant Details, Current Address, Permanent Address, Applicant Contact Details போன்றவை தானாகவே நிரப்பப்பட்டிருக்கும். அதாவது CAN Number இல் உள்ள தகவல்கள் இதில் நிரப்பப்பட்டிருக்கும்.
Step 13: Details of Family Members என்பதில் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விவரங்களை Enter செய்ய வேண்டும்.
முதலில் உங்களின் விவரங்களை கொடுக்கும்போது உங்களின் பெயர் (ஆங்கிலம் மற்றும் தமிழில்), வயது, பாலினம், உறவுமுறை மற்றும் தொழில் போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
வருமானச் சான்றிதழ் உங்களுக்காக தான் Apply செய்கிறீர்கள் என்பதால், உறவுமுறையில் Self என்பதை தேர்வு செய்யவும்.
அனைத்து தகவல்களையும் Enter செய்த பிறகு Add என்பதை கிளிக் செய்க. கிளிக் செய்தவுடன் உங்களின் தகவல்கள் வரிசையில் சேர்க்கப்படும். இவ்வாறு உங்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் தகவல்களையும் Add செய்ய வேண்டும்.
பிறகு கடைசியாக உள்ள Submit என்பதை அழுத்தவும்.
Step 14: கொடுக்கப்பட்டுள்ள ஆவணங்களை ஒவ்வொன்றாக தேர்வு செய்து அதை Upload செய்யவும்.
இதில் Self Declaration என்பதை கிளிக் செய்து Download செய்யவும். அதை Print எடுத்து உங்களின் கையொப்பத்தை இட வேண்டும். பிறகு அதை Scan செய்து Upload செய்யவும்.
Step 15: அனைத்தையும் Upload செய்த பிறகு Make Payment என்பதை அழுத்தவும்.
Step 16: இப்பொழுது Income Certificate க்கு கட்டணமாக Rs.60 ரூபாயை ATM Card, Net Banking அல்லது UPI போன்றவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் செலுத்தவும்.
பணம் செலுத்தப்பட்ட பிறகு உங்களின் Income Certificate வெற்றிகரமாக Online இல் Apply செய்யப்பட்டுவிடும்.
How to Track Income Certificate Application Status
நீங்கள் வருமானச் சான்றிதழுக்கு விண்ணப்பித்த பிறகு, Application Status யை தெரிந்துகொள்ள முடியும்.
Step 1: உங்களின் TNeGA Account யை Login செய்து Revenue Department > Income Certificate என்றவாறு தேர்வு செய்யவும்.
Step 2: Check Status என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: Application Number என்ற இடத்தில் உங்களின் Income Certificate Application Number யை Type செய்து Search செய்யவும்.
Step 4: இப்பொழுது உங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
How to Download Income Certificate Online
உங்களின் வருமானச் சான்று விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன், அதற்கான சான்றிதழை நீங்களே Online மூலம் Download செய்துகொள்ளலாம்.
Step 1: Status யை சரிபார்ப்பதற்காக மேலே கூறிய அதே செயல்முறையை பின்பற்றவும்.
Step 2: விண்ணப்பம் ஏற்றுக்கொண்டவுடன் Download Certificate என்பதை கிளிக் செய்து உங்களின் Income Certificate யை Download செய்யலாம்.
பிறகு அதை ஒரு ஜெராஸ் கடையில் Print எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
முடிவுரை
இன்று Income Certificate யை Online மூலம் எவ்வாறு Apply செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த சான்றிதழ் மட்டுமில்லாமல் Community Certificate, Nativity Certificate போன்ற பல சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாகவே பெரும் வசதி உள்ளது. இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தே அனைத்து விதமான சான்றிதல்களையும் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
Frequently Asked Questions (FAQ)
வருமான சான்றிதழுக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?
அருகில் உள்ள இ சேவை மையம் அல்லது நீங்களே சுயமாக விண்ணப்பிக்கலாம்.
வருமான சான்றிதழுக்கு எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?
விண்ணப்பிக்கும் போது விண்ணப்ப கட்டணமாக Rs.60 ரூபாயை செலுத்த வேண்டும்.
சுயமாக விண்ணப்பிக்கும்போது கட்டணத்தை எப்படி செலுத்துவது?
ATM Card, Net Banking அல்லது UPI ஆகியவற்றின் மூலமாக செலுத்தலாம்.
விண்ணப்பித்த பிறகு ஏதாவது அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டுமா?
இல்லை.
விண்ணப்பித்த பிறகு வருமான சான்றிதழை எப்படி பெறுவது?
உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு உங்களின் TNeGA கணக்கை திறந்து Download செய்து கொள்ளலாம்.