How to Apply for OBC Certificate in Online Tamil | OBC சான்றிதழ்

OBC Certificate Apply in Tamil: உங்களுக்கு OBC சான்றிதழ் வேண்டுமா? கவலையை விடுங்கள். இதற்காக நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்கள் வீட்டில் இருந்தவாறே சில நிமிடங்களில் OBC சான்றிதழ்க்கு விண்ணப்பிக்கலாம். உங்களுக்கு விண்ணப்பிக்க தெரியவில்லை என்றால், இந்த கட்டுரை உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்.

OBC சான்றிதழுக்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்க்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, அதற்க்கு எவ்வளவு செலவாகும் போன்ற முழு தகவல்களையும் இந்த பதிவில் விரிவாக காணலாம். நான் ஏற்கனவே OBC Certificate க்கு ஆன்லைன் மூலம் Apply செய்து வாங்கியிருக்கிறேன். அதில் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

OBC சான்றிதழ் என்றால் என்ன? | OBC Certificate Meaning in Tamil

OBC சான்றிதழ் என்பது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினை (Other Backward Classes) சார்ந்தவர்களுக்கு மத்திய அரசாங்கம் வழங்கும் சாதிச் சான்றிதழ் ஆகும். பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவைச் சேர்ந்த அனைத்து தனிநபர்களும் இந்த OBC Certificate யை பெற முடியும். OBC பிரிவில் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்களாகக் கருதப்படும் சாதிகள் மற்றும் சமூகங்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சில இடஒதுக்கீடுகள் மற்றும் சலுகைகளுக்குத் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

தமிழ்நாட்டில் பொறுத்தவரை BC (Backward Class) மற்றும் MBC (Most Backward Class) என இரண்டு வகையான வகுப்பினர் உள்ளனர். ஆனால் மத்திய அரசாங்கத்தை பொறுத்தவரை BC மற்றும் MBC ஆகிய இரண்டு வகுப்பினரையும் ஒன்றிணைத்து OBC வகுப்பினராக கருதப்படும். BC மற்றும் MBC க்கு கீழ் வரும் அனைவரும் இந்த OBC சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.

OBC சான்றிதழ் ஒரு நபரின் OBC நிலைக்கான சான்றாக செயல்படுகிறது. இந்த OBC சான்றிதழ் பல்வேறு அரசு வேலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற அரசு திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் போது தேவைப்படுகிறது. 

Read  Chief Minister Health Insurance Card Download

Required Documents for OBC Certificate in Tamil 

நீங்கள் ஓபிசி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் முன்பு பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். 

1. Passport Size Photo 

2. Any Address Proof 

3. Community Certificate 

4. Self Declaration

5. Income Certificate

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும். உங்களிடம் ஸ்கேனர் இல்லையென்றால், அதற்கென மொபைல் செயலிகள் ஏராளமாக உள்ளன. அதை பயன்படுத்தி ஆவணங்களை ஸ்கேன் செய்து கொள்ளவும். நான் Adobe Scan என்ற செயலியை பரிந்துரை செய்கிறேன். 

ஸ்கேன் செய்த பிறகு ஒவ்வொரு ஆவணத்தின் அளவும் 200KB க்கு கீழே இருக்குமாறு Compress செய்ய வேண்டும். Photo வின் அளவு மட்டும் 50KB க்கு கீழே இருக்க வேண்டும். ஆவணங்களை Compress செய்ய ஏராளமான இணைய தளங்கள் உள்ளன. 

இதில் Self Declaration என்பது, நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்த பிறகு ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் பக்கத்தில் இருக்கும். அதை Download செய்து உங்களின் கையெழுத்து இட வேண்டும். இதை விண்ணப்பிக்கும் போது எப்படி என்று சொல்கிறேன்.

இதில் Income Certificate என்பது கட்டாயம் இல்லை. இருப்பினும் சில நேரங்களில் வருமான சான்றிதழ் இல்லை என்று கூறி விண்ணப்பத்தை திருப்பி அனுப்பிவிடுகிறார். எனக்கும் இவ்வாறு தான் நடந்தது. பிறகு எனக்கு திருப்பி அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் Income Certificate யை பதிவேற்றம் செய்து அனுப்பினேன். கவலை வேண்டாம் மீண்டும் அனுப்பும்போது பணத்தை செலுத்த தேவையில்லை.

உங்களிடம் வருமான சான்றிதழ் இருந்தால் அதை பதிவேற்றம் செய்யுங்கள். ஒருவேளை இல்லையென்றால், உங்களின் குடும்பத்தில் வேறு யாராவது வாங்கி இருந்தால், அதை பயன்படுத்துங்கள். ஏனெனில் தற்போது வரும் வருமான சான்றிதழில் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் வருமானம் போன்றவை இடம் பெற்றிருக்கும். எனவே உங்களின் குடும்பத்தில் வேறொருவர் வாங்கி இருந்தாலும் அதில் உங்களின் பெயரும் இடம் பெற்றிருக்கும். நான் என் குடும்ப உறுப்பினர் வாங்கிய வருமான சான்றிதழை தான் பயன்படுத்தினேன். எனக்கு ஒப்புதலும் கிடைத்தது. 

How to Apply for OBC Certificate in Online Tamil

நீங்கள் Other Backward Classes Certificate யை இ சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. பின்வரும் படிகளை பின்பற்றி Online மூலம் OBC Certificate யை Apply செய்யலாம்.

Read  FMB என்றால் என்ன? FMB Meaning in Tamil 

Step 1: உங்களின் பிரவுசரில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் Citizen Account யை Login செய்யவும். அல்லது நீங்கள் இந்த இணையதளத்திற்கு புதியவராக இருந்தால், New User என்பதை கிளிக் செய்து கணக்கை பதிவு செய்யவும்.

Login TNeGA Account

Step 2: துறைகள் பிரிவில் Revenue Department என்பதை கிளிக் செய்யவும்.

Revenue Department - OBC Certificate

Step 3: இப்பொழுது வருவாய் துறையின் கீழுள்ள அனைத்து சேவைகளும் தோன்றும். அதில் 2 ம் பக்கத்தில் உள்ள Other Backward Classes (OBC) Certificate என்பதை தேர்வு செய்க.

Apply OBC Certificate Online in Tamil

Step 4: ஒரு Pop up திரை திறக்கும். அதில் Proceed என்பதை அழுத்தவும்.

Apply OBC Certificate Online

Step 5: நீங்கள் ஏற்கனவே இ சேவை மையத்திலோ அல்லது நெட் சென்டர்களிலோ ஆன்லைன் மூலம் ஏதாவது ஒரு சான்றிதழ் வாங்கி இருந்தால், உங்களுக்கு CAN Number இருக்கும். எனவே Aadhaar Number என்ற இடத்தில் உங்களின் ஆதார் எண்ணை Type செய்து Search என்பதை கிளிக் செய்யவும்.

CAN Number for OBC Certificate Online

இப்பொழுது உங்களின் CAN Number, Name, Father Name மற்றும் Mobile Number போன்ற தகவல்கள் தோன்றும். அந்த CAN Number யை தேர்வு செய்யவும். ஒருவேளை உங்களுக்கு எதுவும் வரவில்லை என்றால், Register CAN என்பதை கிளிக் செய்து பதிவு செய்யவும்.

Step 6: உங்களின் ஆதார் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு Generate OTP என்பதை அழுத்தவும். 

Generate OTP for OBC Certificate

Step 7: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அதை உள்ளிட்டு Confirm OTP என்பதை அழுத்தவும்.

Confirm OTP TNEGA

Step 8: OTP சரிபார்க்கப்பட்ட பின்பு Proceed என்பதை கிளிக் செய்யவும்.

Proceed for OBC Certificate Online Tamil

Step 9: தற்போது உங்களின் தகவல்கள் அனைத்தும் ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். கீழே Personal Details என்ற பிரிவில் உங்களின் சாதி மற்றும் தொழில் குறித்த தகவல்களை கொடுக்கவும்.

Select Cast for OBC Certificate

பிறகு உங்களின் தந்தை / கணவர் உயிருடன் இருந்தால், Yes என்பதை தேர்வு செய்து அவரின்  தொழில், வருமானம் போன்றவற்றை குறிப்பிடவும். அதே போன்று Mother என்ற இடத்திலும் நிரப்ப வேண்டும்.

Read  CM Cell Petition Model in Tamil | Muthalvar Mugavari Complaint

Step 10: கடைசியாக உள்ள Declaration Check Box யை டிக் செய்து Application யை Submit செய்யவும். 

Submit OBC Certificate Application Online

Step 11: இந்த பக்கத்தில் ஏற்கனவே நீங்கள் ஸ்கேன் செய்து வைத்துள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். முதலில்
Download Self Declaration Form என்ற படிவத்தை கிளிக் செய்து Download செய்யவும். அதை பிரிண்ட் எடுத்து அதில் உங்களின் கையெழுத்தை இடவும். பிறகு Self Declaration Form யை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ளவும்.

Upload Documents for OBC Certificate Online Tamil

இப்போது Select Document என்பதில் Photo வை தேர்வு செய்து Document Number 1 என்று இடவும். பிறகு அந்த போட்டோவை Add செய்து Upload செய்யவும்.

Step 12: இவ்வாறு அனைத்து ஆவணங்களையும் அப்லோட் செய்த பின் Make Payment யை கிளிக் செய்யவும்.

Make Payment for OBC Certificate

Step 13: I Agree என்ற Check Box யை டிக் செய்து Make Payment யை தொடரவும்.

TNeGA Online Payment for OBC Caste

Step 14: இந்த பக்கத்தில் உங்களின் ATM Card, Net Banking, QR Code மற்றும் UPI போன்ற ஏதாவது ஒன்றின் மூலம் Rs.60 யை செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு உங்களின் OBC Certificate க்கான Application வெற்றிகரமாக Submit செய்யப்படும். இப்பொழுது உங்களின் விண்ணப்ப எண் / Application Number யை குறித்து வைத்துக்கொள்ளவும்.

BillDesk-All-Your-Payments-Other Backware Certificate

How to Check OBC Certificate Status in Tamil

OBC Certificate இன் Status யை தெரிந்துகொள்ள உங்களின் கணக்கை Login செய்து Check Status என்பதை கிளிக் செய்யவும். பிறகு உங்களின் Application Number யை Type செய்து Fetch என்பதை கிளிக் செய்தால், விண்ணப்பத்தின் நிலையை காணலாம்.

How to Check OBC Certificate Status in Tamil

FAQ 

1. OBC சான்றிதழ் என்றால் என்ன?

OBC சான்றிதழ் என்பது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சலுகைகள் மற்றும் இட ஒதுக்கீடு பயன்களை பெறுவதற்கு மத்திய அல்லது மாநில அரசு  வழங்கும் ஆவணமாகும்.

2. OBC சான்றிதழுக்கான கட்டணம் எவ்வளவு?

OBC சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் போது Rs.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

3. OBC சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் என்ன?

நீங்கள் சான்றிதழை பெற்ற தேதியில் இருந்து ஒரு வரும் செல்லுபடியாகும்.

4. ஓபிசி சான்றிதழை பெற தனிநபர் விண்ணப்பிக்கலாமா?

ஆம். https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்தில் சென்று தனிநபர் விண்ணப்பிக்கலாம்.

5. ஓபிசி சான்றிதழை பெற தேவையான ஆவணங்கள் என்ன?

புகைப்படம், முகவரிச்சான்று, சாதிச்சான்று, சுய உறுதிமொழி படிவம் மற்றும் வருமான சான்றிதழ். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest