TN Government

How to Check Magalir Urimai Thogai Status Online in Tamil

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பித்து இன்று வரை உங்களுக்கு SMS வரவில்லையா? உங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கவலையை விடுங்கள். அதை பற்றிய முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.

Kalainar Magalir Urimai Thogai Scheme – KMUT Scheme

மு.க ஸ்டாலின் அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கடந்த சட்டசபையில் அதற்கான அரசாணையையும் வெளியிட்டார். 

அந்த அரசாணையில் தகுதியுள்ள அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் மாதம் Rs.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும் அந்த தொகை பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

பிறகு அதன் தொடர் நடவடிக்கையாக அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதில் விண்ணப்பதாரரின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித்தகவல்கள் கேட்கப்பட்டிருந்தன. இதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள நியாய விலை கடையின் அருகில் சிறப்பு முகாம்கள் நடைபெற்று அதன் மூலம் நிரப்பிய விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டன.

Read  How to Apply For Income Certificate Online in Tamil Nadu

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்க்கான அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு, ஒரு நாள் முன்னதாகவே 14-09-2023 முதல் பயனாளர்களின் வங்கிக்கணக்கில் Rs.1000 ரூபாய் வரவு வைக்க தொடங்கினர். அண்ணாவின் பிறந்த நாளான 15-09-2023 அன்று முதலமைச்சர் முறைப்படி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்று முழுவதும் மீதமுள்ள பயனாளர்களுக்கு 1000 ரூபாய் செலுத்தப்பட்டது.

ஆனால் சில மகளிருக்கு இன்னமும் அவர்களின் செல்போன் எண்ணிற்கு SMS வரவில்லை. மேலும் அவர்களின் வங்கிக்கணக்கில் பணமும் செலுத்தப்படவில்லை. ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுருந்தால், அதற்கான குறுந்செய்தி (SMS) 18-09-2023 முதல் அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நாள் வரை அவர்களுக்கு குறுந்செய்தியும் வரவில்லை மற்றும் பணமும் செலுத்தப்படவில்லை.

How to Check Magalir Urimai Thogai Status Online

உங்களுக்கு குறுந்செய்தியும் வரவில்லை மற்றும் பணமும் வரவில்லையென்றால், உங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருக்கும் அல்லது பரிசீலனையில் இருக்கும். உங்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? அல்லது பரிசீலனையில் உள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டுள்ளதா?  ஒருவேளை நிராகரிக்கப்பட்டிருந்தால் அதன் காரணம் என்ன என்பதை சில நிமிடங்களில் ஆன்லைன் மூலமாக தெரிந்துகொள்ள முடியும்.

Read  How to Apply Community Certificate Online in Tamilnadu | TNeGA

பின்வரும் செயல்முறையை பின்பற்றி Kalainar Magalir Urimai Thogai Status யை Check செய்துகொள்ளலாம்.

Step 1: நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் https://kmut.tn.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும். 

Step 2: இப்பொழுது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இணையதளம் திறக்கும். அதில் உங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிய  என்பதை கிளிக் செய்யவும்.

kalaignar magalir urimai scheme Status

Step 3: இந்த பக்கத்தில் பொதுமக்கள் உள்நுழைவு என்பதை தேர்வு செய்து, விண்ணப்பதாரரின் ஆதார் எண்ணை உள்ளிடவும். பிறகு OTP அனுப்பவும் என்பதை கிளிக் செய்யவும்.

கலைஞர்-மகளிர்-உரிமைத்-திட்டம்

Step 4: தற்போது உங்களின் ஆதார் அட்டையில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP Number யை உள்ளிடவும்.  பிறகு கேட்பசாவையும் உள்ளிட்டு சரிபார்க்க என்பதை கிளிக் செய்யவும்.

kalaignar magalir urimai scheme Check Status

Step 5: தற்போது உங்களின் ஆதார் அட்டையில் உள்ளபடி மற்றும் விண்ணப்பத்தில் உள்ளபடி சுய விவரங்கள் தோன்றும். மேலும் அதற்க்கு கீழே Kalainar Magalir Urimai Thogai விண்ணப்பத்தின் Status தெரிவதை காண்பீர்கள். 

Read  How to Apply for OBC Certificate in Online Tamil | OBC சான்றிதழ்

KMUT Application Status இல் விண்ணப்பதாரரின் பெயர், விண்ணப்ப எண், விண்ணப்பம் ஏற்கப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா, நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணம், ஏற்கப்பட்டிருந்தால் பணம் செலுத்திய முறை போன்ற பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

kalaignar magalir urimai application Status

ஒருவேளை உங்களின் விண்ணப்பம் தவறான காரணத்தை கூறி நிராகரிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இ சேவை மையத்திற்கு சென்று மேல்முறையீடு செய்யலாம்.

இந்த பதிவின் மூலம் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலையை எப்படி அறிந்துகொள்வது என்பதை தெரிந்துகொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole