Chief Minister Health Insurance Card Download
Chief Minister Health Insurance Card Download: நீங்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான (cmchistn) அட்டையை இன்னும் Download செய்யவில்லையா? கவலையை விடுங்கள். மருத்துவ காப்பீட்டு அட்டையை எங்கு சென்று எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதற்கான முழு தகவல்களையும் இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
Chief Minister Comprehensive Health Insurance Scheme
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் (Chief Minister Comprehensive Health Insurance Scheme – CMCHISTN) ஏழை எளிய மக்கள் எந்த கட்டணமும் இல்லாமல் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை பெரும் பொருட்டு தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது.
அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வருமானம் குறைந்த குடும்பங்கள் உலக தரம் வாய்ந்த சிகிச்சைகளை கட்டணமில்லாமல் பெற முடியும்.
தமிழக அரசு இந்த சுகாதார திட்டத்தை யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தி வருகிறது.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுவர். இந்த திட்டத்தின் கீழ் ஒரு குடும்பம் அதிகபட்சமாக Rs. 5,00,000 வரையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திட்டத்தில் 1027 சிகிச்சை முறைகளும், 154 தொடர் சிகிச்சை முறைகளும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்புகளும் உள்ளன. இதில் பச்சிளங்குழந்தைளுக்கான சிகிச்சை முறைகளும் அடங்கும்.
அனைத்து வயதினரும் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
காப்பீட்டு திட்டத்தின் கீழ் வரும் நோய்கள் மற்றும் சிகிச்சைகள்
Chief Minister Comprehensive Health Insurance Scheme மூலம் கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும். அந்த நோய்களின் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
S.No | Name of Diseases | நோய்களின் பெயர்கள் | S.No | Name of Diseases | நோய்களின் பெயர்கள் |
1 | BARIATRIC SURGERY | எடை குறைப்பு அறுவை சிகிச்சை | 23 | NEPHROLOGY | சிறுநீரக சிகிச்சை |
2 | CARDIOLOGY | இருதய நோய் சிகிச்சை | 24 | NEUROLOGY | நரம்பியல் சிகிச்சை |
3 | CARDIOTHORACIC SURGERIES | இருதய நோய் அறுவை சிகிச்சை | 25 | NEUROSURGERY | நரம்பியல் அறுவை சிகிச்சை |
4 | DERMATOLOGY | தோல் நோய் சிகிச்சை | 26 | OFMS | வாய் வழி மற்றும் தாடை அறுவை சிகிச்சை |
5 | Diagnostic center | நோய் கண்டறிதல் மையம் | 27 | OPHTHALMOLOGY SURGERIES | கண் நோய் அறுவை சிகிச்சை |
6 | E N T | காது மூக்கு தொண்டை சிகிச்சை | 28 | ORTHOPEDIC TRAUMA | எலும்பியல் காயம் |
7 | Emergency Room Packages (Care requiring less than 12 hrs stay) | அவசர சிகிச்சைகள் | 29 | PAEDIATRIC INTENSIVE CARE | இளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை |
8 | ENDOCRINE SURGERY | நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை | 30 | PAEDIATRIC SURGERIES | குழந்தை அறுவை சிகிச்சை |
9 | ENDOCRINOLOGY | உட்சுரப்பி சிகிச்சை | 31 | PAEDIATRICS | குழந்தைகள் சிகிச்சை |
10 | FOLLOW UP PROCEDURE | பின் தொடர் செயல்முறை | 32 | PLASTIC SURGERY | ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை |
11 | GASTROENTEROLOGY | இரைப்பை குடல் சிகிச்சை | 33 | PMR | |
12 | GENERAL MEDICINE | பொது மருத்துவ சிகிச்சை | 34 | PSYCHIATRY | மனநல மருத்துவ சிகிச்சை |
13 | GENERAL SURGERY | பொது அறுவை சிகிச்சை | 35 | PULMONLOGY | நுரையீரல் சிகிச்சை |
14 | GENITOURINARY SURGERY | இருபாலார் சிறுநீரக நோய் சிகிச்சை | 36 | RADIATION ONCOLOGY | கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை |
15 | GYNAECOLOGY OBSTETRIC SURGERY | மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் சிகிச்சை | 37 | RHEUMATOLOGY | முடக்கு வாதம் சிகிச்சை |
16 | HEMATOLOGY | இரத்தவகை சிகிச்சை | 38 | SPINE | தண்டுவடம் சிகிச்சை |
17 | HEPATOLOGY | கல்லீரல் நோய் சிகிச்சை | 39 | STEMI | இருதய நோய் / மாரடைப்பு |
18 | INFECTIOUS DISEASES – GENERAL MEDICINE | தொற்று நோய் சிகிச்சை | 40 | SURGICAL GASTRO ENTEROLOGY | இரைப்பை குடல் அறுவை சிகிச்சை |
19 | INTERVENTIONAL CARDIOLOGY | இடையீடு இருதயவியல் | 41 | SURGICAL ONCOLOGY | புற்றுநோய் அறுவை சிகிச்சை |
20 | INTERVENTIONAL RADIOLOGY | இடையீடு இருதய சிகிச்சை | 42 | THORACIC MEDICINE | நெஞ்சக நோய் சிகிச்சை |
21 | MEDICAL ONCOLOGY | புற்றுநோய் மருத்துவ சிகிச்சை | 43 | VASCULAR SURGERIES | இரத்தநாள அறுவை சிகிச்சை |
22 | NEONATOLOGY | பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை | 44 |
மேற்கண்ட அட்டவணையில் உள்ள தகவல்கள் www.cmchistn.com/prate.php என்ற Official இணையதளத்திலிருந்து எடுக்கப்பட்டது.
Information Table
Scheme Name | Chief Minister’s Comprehensive Health Insurance Scheme |
Government | State Government of Tamilnadu |
Official Website | https://www.cmchistn.com |
Toll-Free Number | 1800 425 3993 |
Email ID | tnhealthinsurance@gmail.com |
CMCHISTN Beneficiary Android App | https://play.google.com/store/apps/details?id=com.remedinet.tnbeneficiary |
Chief Minister Health Insurance Smart Card
CMCHISTN Smart Card பின்வரும் விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
- URN Number
- Head of Family Member Name
- Address
- Family Group Photo
Steps to Download Chief Minister Health Insurance Card
பின்வரும் படிகளை பின்பற்றி Chief Minister Health Insurance Card யை Download செய்யலாம்.
Step 1: முதலில் www.cmchistn.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: Enrollment என்பதற்கு கீழே உள்ள Member Search / e-Card என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: உங்களின் Health Insurance Card இல் உள்ள URN Number அல்லது Ration Card Number இவை இரண்டில் ஏதாவது ஒன்றை Enter செய்யவும்.
Ration Card Number என்பது 20G1234567 என்ற வடிவில் இருக்கும்.
பிறகு Search என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது Policy Number இன் மீது கிளிக் செய்யவும்.
Step 5: தற்போது Beneficiary Details தெரிவதை காண்பீர்கள். இப்பொழுது Generate e-card என்பதை அழுத்தவும்.
Step 6: இப்பொழுது Chief Minister Comprehensive Health Insurance Card தெரியும். அதை Download செய்து பிறகு கலர் பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் படியுங்கள் |
முடிவுரை
இன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை பற்றியும் மற்றும் அதற்கான கார்டை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றியும் தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் மதிப்பு மிக்க கருத்துகளை கீழே பதிவிடவும்.