FMB என்றால் என்ன? FMB Meaning in Tamil
நிலம் சம்மந்தப்பட்ட விஷயங்களில் FMB Map என்ற வார்த்தையை கேள்விப்பட்டு இருப்பீர்கள். அந்த FMB என்றால் என்ன மற்றும் உங்களின் வீடு, நிலம் ஆகியவற்றின் FMB படங்களை எவ்வாறு Download செய்வது போன்றவை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
ஒரு நிலம் அல்லது மனையை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ பட்டா, பத்திரம் மற்றும் FMB என்று சொல்லப்படும் நில வரைப்படம் போன்றவற்றை கேட்பார்கள். ஏனெனில் இவற்றை வைத்து தான் ஒரு நிலத்தின் உண்மை தன்மையை அறிந்துகொள்ள முடியும்.
இதில் சில சேவைகளை ஆன்லைன் மூலமாகவே பெற முடியும். அதாவது பட்டா, FMB போன்றவற்றை இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடியும். எனவே இதற்கான செயல்முறைகளை தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும்.
Table of Contents
FMB Meaning in Tamil
FMB என்பதன் விரிவாக்கம் Field Measurement Book ஆகும்.
வேறு பெயர்கள்:
FMB, நில வரைபடம், நிலப்படம், புலப்படம், நில உரிமை படம்
FMB என்றால் என்ன?
FMB என்பது ஒரு நிலத்தின் பல்வேறு தகவல்களை வரைப்படம் மற்றும் அளவுகள் மூலம் விளக்கும் ஒரு விளக்க படமாகும். இவை நில அளவையாளர் மூலம் அளவீடு செய்யப்பட்டு வரையப்படும்.
இந்த FMB வரைபடத்தில் நிலத்தின் பரப்பளவு, சர்வே நம்பர், உட்பிரிவு நம்பர், கிணறு, நடைபாதை, நீர் செல்லும் பாதைகள் மற்றும் உயர் மின்னழுத்த லைன் போன்ற பல்வேறு விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த நில வரைபடம் வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது. அதாவது நகர நில அளவை வரைபடம், கிராம வரைபடம், சர்வே எண் வரைபடம் மற்றும் உட்பிரிவு எண் வரைபடம் போன்ற வகைகளில் கிடைக்கிறது.
State | Government of Tamil Nadu |
Department | Department of Survey and Settlement |
Service Type | FMB Map Download |
Download Mode | Online |
Official Website Link | www.eservices.tn.gov.in/eservicesnew/index.html |
Phone | 044-28591662 |
Email Id | dir-sur@nic.in |
இதையும் படியுங்கள்: How to Patta Chitta Download Online in Tamil |
How to Download FMB Map Online
தமிழக அரசு புல வரைபடங்களை ஆன்லைன் மூலமாகவே Download செய்யும் வசதியை வழங்கியுள்ளன. இதன் மூலம் யார் வேண்டுமானாலும் புலப்படத்தை பதிவிறக்கம் செய்து பார்க்க முடியும். இதனால் ஓரு நிலத்தின் வெளிப்படை தன்மையை அதிகரிக்கிறது.
சரி வாருங்கள் எப்படி பதிவிறக்கம் செய்வது என்று பார்ப்போம்.
Step 1: முதலில் www.eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: அதில் FMB Sketch – Rural என்பதை தேர்வு செய்யவும்.
Step 3: இந்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள District, Taluk, Village, Survey Number, Sub Division Number போன்ற அனைத்து விவரங்களையும் சரியாக உள்ளிடவும்.
Step 4: பிறகு கடைசியில் உள்ள Submit என்பதை அழுத்தவும்.
Step 5: View FMB என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: இப்பொழுது நீங்கள் உள்ளிட்ட சர்வே எண்ணிற்கான FMB வரைபடம் தெரிவதை காணலாம். மேலே உள்ள Download தேர்வை கிளிக் செய்து அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முடிவுரை
இந்த பதிவில் புல வரைப்படம் மற்றும் அதை எவ்வாறு ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இது போன்ற பல சேவைகளை இணையம் வழியே பெறலாம். மேலும் பல பயனுள்ள பதிவுகளுக்கு இணைந்திருங்கள். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை இங்கே பதிவிடவும்.