How to Patta Chitta Download Online in Tamil
தற்போது Patta Chitta விவரங்களை Online மூலமாகவே Download செய்ய முடியும். இதை நீங்களே உங்களின் கணினி அல்லது மொபைல் ஆப் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பட்டா சிட்டா விவரங்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது பற்றிய முழு விவரங்களையும் இந்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழ்நாடு அரசாங்கம் பல்வேறு சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்கி வருகிறது. அதாவது ரேஷன் கார்டு, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், TN Velaivaaippu போன்ற பலதரப்பட்ட சேவைகளை ஆன்லைன் மூலம் வழங்குகிறது. இதன் மூலம் மக்கள் அலைச்சலின்றி ஆன்லைன் விண்ணப்பித்து சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.
அந்த வரிசையில் பட்டா சிட்டா விவரங்களையும் Online மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு Patta Chitta என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
எனவே முதலில் அதை பற்றி தெரிந்து கொண்டு பிறகு எப்படி பதிவிறக்கம் செய்வது என்று காணலாம்.
Table of Contents
பட்டா சிட்டா என்றால் என்ன?
நாம் வீடு வாங்கும்போதோ அல்லது நிலம் வாங்கும்போதோ பட்டா மற்றும் சிட்டா என்ற வார்த்தைகளை கேட்டிருப்போம். நிறைய பேருக்கு அது குறித்த சந்தேகம் இருக்கும். எனவே முதலில் பட்டா சிட்டா என்ற வார்த்தைகளுக்கான அர்த்தத்தை தெரிந்துகொள்வோம்.
பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமையாளர் யார் என்பதற்கு வருவாய் துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணம் ஆகும். இவற்றில் தனிப் பட்டா மற்றும் கூட்டுப் பட்டா என்ற இரண்டு வகைகள் இருக்கும்.
ஒரு நிலம் ஒருவரின் பேரில் மட்டும் இருந்தால் அது தனிப் பட்டா ஆகும். ஒரு நிலம் பல நபர்களின் பேரில் இருந்தால் அது கூட்டுப் பட்டா ஆகும். கூட்டுப் பட்டாவில் இருக்கும் நிலத்தை உட்பிரிவு செய்து அனைத்து நபர்களும் தனிப் பட்டா பெற முடியும்.
சிட்டா என்பது ஒரு பட்டாவில் இருக்கும் தகவல்களுடன் சேர்த்து கூடுதல் விவரங்களை கொண்டிருக்கும். ஒரு சிட்டாவில் நிலம் இருக்கும் மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் வகை (நஞ்சை அல்லது புஞ்சை), பட்டா வகை, நிலத்தின் உரிமையாளர், நிலம் பயன்பாட்டில் உள்ளதா மற்றும் தீர்வை விவரங்களை போன்ற அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி இருக்கும்.
Name of Government | Government of Tamil Nadu |
Department | Department of Survey and Settlement |
Service Type | Patta Chitta Download |
Website | www.eservices.tn.gov.in/eservicesnew/index.html |
Phone Number | 044-28591662 |
dir-sur@nic.in |
How to Patta Chitta Download Online in Tamil
Patta Chitta வை Download செய்வது மிகவும் எளிதாகும். உங்களிடம் இணைய இணைப்புடன் உள்ள கணினி அல்லது மொபைல் இருந்தாலே பதிவிறக்கம் செய்யலாம்.
பின்வரும் படிகளை பின்பற்றி பட்டா சிட்டா வை பதிவிறக்கம் செய்யலாம்.
Step 1: முதலில் தமிழ்நாடு அரசின் நில அளவை இணையதளமான https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: உங்களுக்கு வேண்டிய மொழியை (Tamil அல்லது English) தேர்வு செய்யவும்.
Step 3: இந்த இணையதளத்தில் முதலாவதாக உள்ள View Patta / Chitta என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: இதில் உங்களின் மாவட்டம் (District), வட்டம் (Taluk), கிராமம் (Village) போன்றவற்றை தேர்வு செய்யவும்.
View Patta / Chitta Using என்ற இடத்தில் Patta Number அல்லது Survey Number இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்க.
நீங்கள் பட்டா எண்ணை தேர்வு செய்தால் பட்டா எண்ணையும், Survey எண்ணை தேர்வு செய்தால் புல எண்ணையும் (Survey Number) உள்ளிடுக.
பிறகு Captcha வை Type செய்து Submit என்ற பட்டனை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது பட்டா சிட்டா தகவல்கள் தோன்றுவதை காண்பீர்கள். இதை Download செய்ய கீழே உள்ள Print என்பதை அழுத்தவும்.
Step 6: Save என்பதை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பிறகு ஒரு ஜெராஸ் கடைக்கு சென்று இந்த PDF ஆவணத்தை Print எடுத்துக்கொள்ளலாம்.
How to Download Patta Chitta in Mobile App
உங்களின் Mobile App மூலமாகவும் பட்டா சிட்டா வை பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான செயல்முறைகள் பின்வருமாறு:
Step 1: உங்களின் மொபைலில் Playstore இல் Tamil Nilam என்ற Mobile App யை பதிவிறக்கம் செய்யவும்.
Step 2: அந்த செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, அதை ஓபன் செய்து Tamil Nilam Rural (கிராம புறங்களுக்கு) என்பதை கிளிக் செய்க.
Step 3: தற்போது தோன்றும் வரிசையில் Chitta என்பதை தேர்வு செய்யவும்.
Step 4: இந்த பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள District, Taluk, Village, Patta Number அல்லது Survey Number ஆகியவற்றை உள்ளிட்டு Get Details என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது View Patta / Chitta Extract என்ற பக்கம் திறக்கும். அதில் நில உரிமையாளர் விவரங்கள் இடம் பெற்றிருக்கும். அதற்க்கு கீழே உள்ள Touch here for pdf என்பதை கிளிக் செய்யவும்.
Step 6: இப்பொழுது நில உரிமை தகவல்கள் தெரிவதை காண்பீர்கள்.
ஆனால் இதை பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்படவில்லை. எனவே விவரங்களை பார்ப்பதற்கு மட்டும் இந்த மொபைல் செயலியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
நீங்கள் மொபைல் மூலம் பதிவிறக்கம் செய்ய விரும்பினால், உங்களின் மொபைலில் Browser யை Open செய்து முதலாவதாக கூறிய வழிமுறையை பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
முடிவுரை
மேற்கூறிய செயல்முறைகளை பின்பற்றி நில ஆவணங்களை பதிவிறக்கம் செய்யலாம். ஒருவேளை உங்களிடம் கணினி மற்றும் மொபைல் இல்லையென்றால், ஒரு நெட் சென்டர்க்கு சென்று கேட்டால் அவர்களே பதிவிறக்கம் செய்து கொடுப்பார்கள். இந்த கட்டுரையில் கூறிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இதை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.
Frequently Asked Questions (FAQ)
பட்டா சிட்டாவை எப்படி பதிவிறக்கம் செய்வது?
www.eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
பட்டா சிட்டாவை பதிவிறக்கம் செய்ய கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை. இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மொபைல் செயலி ஏதேனும் உள்ளதா?
ஆம். Tamil Nilam என்ற செயலி உள்ளது.
பட்டா சிட்டா Download செய்ய என்ன தேவை?
சர்வே நம்பர் அல்லது பட்டா எண்.