CM Cell Petition Model in Tamil | Muthalvar Mugavari Complaint
CM Cell Petition Model in Tamil: முதலமைச்சர் முகவரிக்கு புகார் அளிக்க விரும்புகிறீர்களா? எப்படி ஆன்லைன் மூலம் புகார் அளிப்பது என்று தெரியவில்லையா? புகார் அளிப்பதற்கு Model Petition வேண்டுமா? இந்த அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதிலை இந்த கட்டுரையில் வழங்குகிறேன்.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருக்கும். அது நிலம், வேலைவாய்ப்பு, சேவைகள், அடிப்படை வசதிகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழலாம். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம்.
அவ்வாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், நீங்கள் CM Cell க்கு புகார் அளிக்கலாம். முதலமைச்சர் முகவரிக்கு புகார் அளித்தால் அதன் மீது 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதை தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதற்காக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையையும் உருவாக்கியது. இந்த CM Cell Petition Model ஆனது Tamil மொழியில் இருப்பதால், உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முக்கிய குறிப்பு:
இதற்க்கு முன்பு வரைக்கும் முதலமைச்சர் தனிப்பிரிவு என்ற இணையதளத்தின் மூலம் தான் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த இணையதளம் மாற்றப்பட்டு முதல்வர் முகவரி (Muthalvar Mugavari) என்ற CM Helpline இணையதளம் உருவாக்கப்பட்டது.
தற்போது நீங்கள் புதிய புகாரை அளிக்க விரும்பினால் புதிய இணையதளமான முதல்வர் முகவரி என்ற தளத்தில் தான் அளிக்க முடியும். ஒருவேளை நீங்கள் ஏற்கனவே முதலமைச்சர் தனிப்பிரிவு என்ற பழைய தளத்தில் புகார் அளித்திருந்தால், அதன் நிலையை அந்த இணையத்தளத்திலேயே தெரிந்துகொள்ள முடியும்.
இனி புதிய புகார்கள் அனைத்தும் முதல்வர் முகவரி தளத்தில் மட்டுமே அளிக்க முடியும்.
இப்பொழுது நீங்கள் ஆன்லைன் மூலம் முதலமைச்சரின் முகவரிக்கு புகார் அளிக்க விரும்பினால் அதை எப்படி அளிப்பது என்று விரிவாக காணலாம்.
Table of Contents
எந்தெந்த குறைகள் வகைகளில் (Grievance Category) புகார்களை பதிவு செய்யலாம்?
முதலமைச்சர் தனிப்பிரிவு இணையத்தளத்தில் பின்வரும் குறைகள் வகைகளில் புகாரை பதிவு செய்யலாம்.
- பட்டா உரிமம்
- விருதுகள்
- அடிப்படை வசதிகள்
- முதல்வர் பொது நிவாரண நிதி
- தீ விபத்துக்கு பின்பான புகார்
- புகார்கள்
- கோவிட் 19
- வேலைவாய்ப்பு
- நிதியுதவி
- வெள்ள நிவாரண உதவி
- பொதுவானவை
- குடியிருப்பு
- நிலம் சம்மந்தப்பட்டவை
- இதர வகை
- இதர ஓய்வூதியம்
- காவல் துறை
- விதி முறைப்படி
- புலம் பெயர்ந்தோர்
- பணி சம்மந்தப்பட்டவை
- அரசு ஓய்வூதியம்
- சமூக அநீதி
- சிறப்பு உதவித் திட்டங்கள்
முதலமைச்சர் முகவரி இணையதளத்தில் எவ்வாறு கணக்கை திறப்பது
நீங்கள் இப்போது தான் முதல் முறையாக முதலமைச்சர் முகவரி இணையதளத்தில் புகார் அளிக்கப்போகிறீர்கள் என்றால், முதலில் கணக்கை Register செய்ய வேண்டும். கணக்கை திறப்பது சிரமமானது அல்ல மிகவும் எளிதாகும்.
பின்வரும் படிகளை பின்பற்றி நீங்கள் கணக்கை Register செய்யலாம்.
Step 1: நீங்கள் முதலில் முதல்வர் முகவரி இணையதளமான https://cmhelpline.tnega.org/portal என்ற இணையதளத்தை அணுகவும்.
Step 2: இப்பொழுது இயல்பாகவே தமிழ் மொழியில் இருக்கும். ஒருவேளை ஆங்கிலமொழியில் மாற்றுவதற்கு English என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: பிறகு மனு செய்ய (File a Grievance) என்பதை கிளிக் செய்யவும்.
Step 4: நீங்கள் இப்போது தான் முதல் முறையாக பதிவு செய்கிறீர்கள் என்பதால் New User? Sign Up என்பதை தேர்வு செய்யவும்.
Step 5: இந்த பக்கத்தில் உங்களின் First Name, Last Name மற்றும் Mobile Number யை கொடுத்து Submit செய்யவும்.
* என்ற குறியீடு உள்ள இடங்களில் கட்டாயம் நிரப்ப வேண்டும் என்பதை நினைவில் கொள்க.
Step 6: இப்பொழுது உங்களின் Mobile Number க்கு OTP Number வரும். அந்த OTP யை உள்ளிட்டு Verify and Sign Up பட்டனை கிளிக் செய்யவும்.
Step 7: தற்போது உங்களின் முதல்வர் முகவரிக்கான கணக்கு வெற்றிகரமாக Open ஆகிவிடும். இதை உறுதிப்படுத்த இணையதளத்தின் வலது புறத்தில் உங்களின் Profile Details தெரிவதை காண்பீர்கள்.
CM Cell Petition Model in Tamil |How to Register Complaint in Muthalvar Mugavari
முதல்வர் முகவரியின் இணையதளத்தில் கணக்கை எப்படி பதிவு செய்வது என்று ஏற்கனவே பார்த்தோம். இப்பொழுது அதில் எவ்வாறு Complaint யை Register செய்வது அதாவது CM Cell Petition Model யை பற்றி பற்றி பார்ப்போம்.
Step 1: File a Grievance என்ற Option யை கிளிக் செய்து புதிய புகார் பக்கத்தை திறக்கவும்.
Petitioner/மனுதாரர்
Step 2: தற்போது Submit a Grievance என்ற பக்கம் திறக்கும். அதில் Petitioner/மனுதாரரின் தகவல்கள் மற்றும் புகார் தொடர்பான விவரங்களை கொடுக்க வேண்டும்.
Step 3: Public/Individual Grievance/பொது/தனிநபர் குறை என்ற இடத்தில் தனி நபரின் புகார் என்றால் Individual என்றும், பொது புகார் என்றால் Public என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு உங்களின் ஆதார் நம்பர் மற்றும் ரேஷன் கார்டு நம்பரை Enter செய்ய வேண்டும். ஆனால் இது கட்டாயம் இல்லை.
Grievance Details
Step 4: Description என்பதற்கு கீழே உள்ள பெட்டியில் உங்களின் புகார் தொடர்பான விவரங்களை முழுமையாக Type செய்ய வேண்டும். தேவைப்பட்டால் புகார் எழுதும்போது அதில் படங்களை சேர்ப்பதற்கான வசதியும் உள்ளது.
Step 5: Are You a Differently Abled Person என்ற இடத்தில் நீங்கள் மாற்றுத்திறனாளியாக இருந்தால் Yes என்றும் இல்லையென்றால் No என்பதை தேர்வு செய்யவும்.
Step 6: பிறகு குறை தொடர்புடைய அரசுத்துறை, குறையின் வகை, துணை குறை வகைப்பாடு, மாவட்டம், முகவரி மற்றும் கிராமம் போன்றவற்றை சரியாக தேர்வு செய்யவும்.
Step 7: உங்களின் புகார் (Complaint) தொடர்பாக ஏதேனும் ஆவணங்களை வழங்க விரும்பினால் அதை PDF வடிவில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த PDF ஆவணத்தை கடைசியாக உள்ள Attach a File என்ற இடத்தில் Upload செய்யலாம்.
இந்த PDF ஆவணத்தின் மொத்த அளவு 20MB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Step 8: பிறகு கடையாக உள்ள Submit என்ற பட்டனை கிளிக் செய்தால், உங்களின் புகார் மனு அனுப்பப்பட்டுவிடும். இப்பொழுது Grievance Id உருவாகும் அதை குறித்துக்கொள்ள வேண்டும்.
புகாரின் நிலை – CM Cell Petition Status
Muthalvar Mugavari Petition Status: நீங்கள் CM Cell இல் புகாரை அளித்த பிறகு அந்த புகாரின் நிலையை (Petition Status) அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். ஏற்கனவே நீங்கள் குறித்து வைத்துள்ள கோரிக்கை எண்ணை வைத்து Track செய்யலாம்.
Step 1: உங்களின் கணக்கை Login செய்து Track Grievance / மனு எண் தேடல் என்பதை கிளிக் செய்க.
Step 2: இப்பொழுது Grievance Id மற்றும் UTM Number என்று இரண்டு வகைகள் இருக்கும். அதில் Grievance Id என்பது இயல்பாகவே தேர்வாகி இருக்கும். அதற்க்கு கீழே உள்ள பெட்டியில் Grievance Id யை கொடுத்து Search என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது உங்களின் Grievance Status அறியலாம். உங்களின் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டால் Staus இல் Approved என்று தோன்றும்.
CM Cell Address
Department | Mudhalvarin Mugavari Department |
Name of State Government | Tamilnadu |
Email Id | tncmhelpline@gmail.com |
Complaint Number (Toll-Free) | 1100 |
For Appeal | appealcmhelpline@tn.gov.in |
Official Website | https://cmhelpline.tnega.org/portal/en/home |
CM Cell Address | Special Officer, Mudhalvarin Mugavari Department, Secretariat, Chennai -600009. |
மேலும் படிக்க – How to Apply Digital Health ID Card
முடிவுரை
இந்த கட்டுரையில் CM Cell Petition Model யை Tamil மொழியில் தெரிந்துகொண்டீர்கள். முதலமைச்சர் முகவரிக்கு புகார் அளிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகள் இருந்தாலும் ஆன்லைன் மூலம் புகார் அளிப்பதே சிறந்ததாகும். ஏனெனில் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்க முடியும். மேலும் அந்த புகாரின் நிலையையும் தெரிந்துகொள்ள முடியும். நீங்கள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து அதை CM தனிப்பிரிவிற்கு தெரிவிக்க வேண்டும். எனவே CM Cell க்கு புகார் அளித்து உங்களின் குறைகளை தீர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை குறித்த சந்தேகங்களுக்கு கீழே பதிவிடவும்.