Employment Renewal Online: புதுப்பிக்க மீண்டும் வாய்ப்பு
நீங்கள் Employment பதிவை Renewal செய்ய தவறவிட்டிருந்தால், உங்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. வேலைவாய்ப்பு இணையதளத்தில் Renewal செய்ய தவறியவர்களுக்கு மீண்டும் Online மூலம் புதுப்பிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதை பற்றிய தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக அனைத்து மாணவ மாணவிகளும் தங்களின் கல்வித்தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது வழக்கம். கல்வித்தகுதிகள் மட்டும் இல்லாமல் மற்ற திறன்களையும் வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்ய முடியும். இவ்வாறு பதிவு செய்வதால் எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் சில காரணங்களால் தங்களின் Registration Number யை புதுப்பிக்க தவறுகின்றனர். அவர்களுக்காக தற்போது ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
Table of Contents
Employment Renewal Online
Employment இணையதளத்தில் Registration செய்த பிறகு அதை ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒருமுறை Renewal செய்ய வேண்டும். அவ்வாறு புதுப்பிக்க தவறும் நபர்கள் தங்களின் மூப்பை (Seniority) இழக்கின்றனர்.
Employment இணையதளத்தில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பளிக்கும் வகையில் அரசாங்கம் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுப்பிக்க தவறிய நபர்கள் டிசம்பர் 2021 முதல் Online மூலம் Renewal செய்ய தொடங்கலாம்.
அரசாணையில் (G.O) குறிப்பிட்டுள்ளபடி, ஏற்கனவே பதிவு செய்து 2014, 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் Employement Card யை Renewal செய்ய தவறியவர்களுக்கு இப்பொழுது சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்படும். அவர்கள் தற்போது Online மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றோ புதுப்பித்துக்கொள்ளலாம்.
மேலும் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஏற்கனவே மூன்று மாதங்கள் சலுகை வழங்கப்பட்டது. அந்த சலுகை 27.08.2021 அன்று முடிவடைந்தது. அந்த கால அவகாசத்தை நீட்டிக்க பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டதால், அவர்களுக்கும் மீண்டும் சிறப்பு புதுப்பிப்பு சலுகை வழங்கப்படுகிறது.
அதாவது 2017, 2018 2019 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களும் இப்போது புதுப்பித்துக்கொள்ளலாம்.
இந்த சிறப்பு புதுப்பித்தல் ஆனது அரசாணை வெளியிட்ட நாளில் இருந்து மூன்று மாதங்கள் வரை புதுப்பித்துக்கொள்ளலாம். அதற்க்கு பிறகு வரும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Employment Renewal G.O
வேலைவாய்ப்பு புதுப்பித்தல் பற்றி அரசாங்கம் வெளியிட்ட அரசாணையை (G.O) நீங்கள் PDF வடிவத்தில் Download செய்து முழுமையாக படித்து தெரிந்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கவனத்தில் கொள்ளவேண்டியவை
- தற்போது வெளியிட்டுள்ள அரசாணையின் படி 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் மட்டுமே இப்பொழுது புதுப்பிக்க முடியும்.
- 01.01.2014 க்கு முன்பு புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- இந்த சலுகை மூன்று மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்
- நீங்கள் Employement Registration Number, User ID போன்றவற்றை மறந்திருந்தால், உங்களால் Online மூலம் Renewal செய்ய முடியாது. எனவே நீங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று புதுப்பித்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பு பதிவை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து படிக்கவும்.
TN Velaivaaipu Renewal, Forgot User ID & Password