TN Velaivaaippu Online New Registration 2023: Full Guide
TN Velaivaaippu என்பது தமிழ்நாட்டில் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வேலைவாய்ப்பு பதிவு துறையில் Register செய்வதாகும். இதற்க்கு முன்பு வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதற்கு, அந்த அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு 2013 ஆம் ஆண்டு முதல் TN Velaivaaippu என்ற Portal -லை தொடங்கியது. இதன் மூலம் Online வழியாகவே Employment -ல் Registration செய்யலாம்.
Table of Contents
TN Velaivaaippu என்றால் என்ன ?
Tamilnadu Employment Training and Development என்பது, அதில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் வேலைவாய்ப்பு உதவிகளை வழங்கும் அமைப்பாகும். இந்த வேலைவாய்ப்பு அமைப்பானது சந்தையில் இருக்கும் பல்வேறு வேலைகளை பற்றி பதிவு செய்த நபர்களுக்கு தகவல்களை வழங்க உதவுகிறது.
வேலை தேடுபவர்கள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான எல்லா தேவைகளுக்கும் இது ஒரே இடமாக செயல்படுகிறது.
வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் மற்றும் வேலையின்மை சந்தை தகவல்கள் போன்றவற்றை சேகரித்து, தொகுத்து அறிக்கையாக வழங்கும் ஒரே நிறுவனம் தேசிய வேலைவாய்ப்பு சேவை ஆகும்.
TN Velaivaaippu Registration Information
Category | TN Velaivaaippu Online Registration |
Department | Department of Employment and Training |
State Government | State Government of Tamilnadu |
Year | 2022 |
Mode of Registration | Online Registration |
TN Velaivaaippu Card Validity | 3 Years |
Official Website | https://tnvelaivaaippu.gov.in/Empower/ |
Contact Details | 044-22500900, 044-22500911 |
Eligibility For TN Velaivaaippu Online Registration
வேலைவாய்ப்பில் பதிவு செய்வதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- கல்வியறிவு அற்றவர்கள்
- இடைநிலை கல்விக்கும் (SSLC) குறைவாக கற்றவர்கள் ( 1 Std முதல் 9 Std வரை)
- SSLC தேர்ச்சி பெறாதவர்கள்
- SSLC, HSC, UG, PG போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள்
- Typewriting, Shorthand, Computer Courses, Sports /NCC /NSS, License போன்ற சான்றிதழ்களை வைத்திருப்பவர்கள் மற்றும் பிற தகுதி பெற்றவர்கள்
தேவையான ஆவணங்கள்
தமிழ்நாடு வேலைவாய்ப்பில் பதிவு செய்யும்போது பின்வரும் ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
- அனைத்து கல்வித்தகுதிகளின் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தொடர்புடைய ஆவணங்கள்
- பட்டதாரிகளுக்கான சான்றிதழ்
- சாதி சான்றிதழ்
- ஆதார் அட்டை
- விளையாட்டு, கணிப்பொறி கல்வி சான்றிதழ்,
தட்டச்சு, மொழி மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றுடன்
தொடர்புடைய பிற சான்றிதழ்கள் (கட்டாயம் இல்லை) - ரேஷன் கார்டு
TN Velaivaaippu Online New Registration
உங்களின் தகவல்களை TN Velaivaaippu துறையில் பதிவு செய்ய அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இணையதளத்தின் மூலமாகவே எளிமையாக பதிவு செய்யலாம்.
பயனர்கள் இணையதளத்தின் வழியாக Register செய்ய பின்வரும் செயல்முறைகளை பின்பற்ற வேண்டும்.
Step 1: முதலில் https://tnvelaivaaippu.gov.in/Empower/LoginAction.htm என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: தற்போது Home Page -ல் தோன்றும் For new User ID Registration என்பதை கிளிக் செய்க.
Step 3: Terms and Conditions என்ற செய்தி தோன்றும். அதை முழுமையாக படித்துவிட்டு I agree என்பதை கிளிக் செய்க.
Step 4: இப்பொழுது CANDIDATE REGISTRATION FORM திறக்கும்.
Step 5: உங்களின் Name, Father Name, Gender, Date of Birth, Email ID, Mobile Number, User ID, Password, Aadhar Card Number, Ration Card Number போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.
இதில் User ID மற்றும் Password என்பது நீங்கள் Login செய்வதற்கு பயன்படுகிறது. இந்த User ID மற்றும் Password யை கொண்டுதான் திருத்தங்களை செய்தல், புதிய தகுதிகளை சேர்த்தல் மற்றும் Renewal செய்தல் போன்ற செயல்களை செய்ய முடியும். எனவே நீங்கள் இவற்றை நினைவில் கொள்ள வேண்டும்.
Step 6: பிறகு Save என்பதை கிளிக் செய்க.
CANDIDATE REGISTRATION FORM -யை Save செய்த பிறகு
Personal Details
Step 7: Personal Details பகுதியில், நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த சில தகவல்கள் இருக்கும்.
அதில் பதிவு செய்யாத விவரங்களை நீங்கள் நிரப்ப வேண்டும். அதாவது Marital Status, Religion, Community ID, Cast, Community Certificate Number, Authority, Category போன்றவற்றை நிரப்ப வேண்டும்.
Step 8: பிறகு Next என்பதை கிளிக் செய்க.
Contact Details
Step 9: Contact Details பிரிவில் முகவரி மற்றும் அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை கொடுக்க வேண்டும்.
Name of the Employment Office என்ற இடத்தில் District Employment Office என்பதை தேர்வு செய்ய வேண்டும் (Degree மற்றும் அதற்கு குறைவான கல்வியை பதிவு செய்தல்).
அல்லது Professional and Executive Employment Office என்பதை தேர்வு செய்ய வேண்டும் (PG கல்வி தகுதியை பதிவு செய்தல்).
Step 10: Next என்பதை கிளிக் செய்க.
Qualification Details
Step 11: முதலில் நீங்கள் பதிவு செய்ய விரும்பும் கல்வித்தகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு, கல்வி தொடர்புடைய தகவல்களை நிரப்ப வேண்டும்.
அனைத்து தகவல்களையும் கொடுத்த பிறகு Add என்பதை கிளிக் செய்க.
Step 12: Next என்பதை கிளிக் செய்க.
Technical/Diploma/Certificate Courses
Step 13: Technical மற்றும் Diploma சான்றிதழ்கள் இருந்தால், அதற்கான தகவல்களை நிரப்ப வேண்டும்.
Add என்பதை கிளிக் செய்தால் நீங்கள் கொடுத்த தகவல்கள் சேர்க்கப்படும்.
Step 14: Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Skills Details
Step 15: இறுதியாக Skills Details பகுதியில் உங்களின் மற்ற திறன்களை பதிவு செய்ய வேண்டும்.
தட்டச்சு, கணிப்பொறி கல்வி, மொழி திறன், விளையாட்டு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை தேர்வு செய்து, அதற்கான விவரங்களை நிரப்ப வேண்டும்.
விவரங்களை நிரப்பிய பிறகு Add என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 16: இப்பொழுது Save என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
Step 7: தற்போது View Profile என்ற திரை திறக்கும். அதில் அனைத்து தகவல்களும் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்து Continue என்பதை அழுத்த வேண்டும்.
Step 17: தற்போது TN Velaivaaippu Registration Number Generate ஆகும். அதன் பக்கத்தில் உள்ள Print id Card என்பதை கிளிக் செய்து Print எடுத்துக்கொள்ளலாம்.
Employment Registration Identity Card-ன் Validity
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பதிவு துறையில் Register செய்த பிறகு, Registration செய்த நாளில் இருந்து 3 வருடங்களுக்கு மட்டுமே Validate இருக்கும்.
மூன்று ஆண்டுகள் நிறைவடைந்ததும், வேட்பாளர்கள் வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் சலுகைகளை தொடர்ந்து பெற விரும்பினால், 3 வருடங்களுக்கு ஒருமுறை பதிவு அட்டையை Renewal செய்ய வேண்டும்.
Renewal செய்யப்பட வேண்டிய மாதம் மற்றும் வருடம் போன்ற தகவல்கள், Print செய்யப்பட்ட ID Card -ல் இருக்கும்.
பதிவு செய்த தகவல்களை திருத்துதல் (TN Velaivaaippu Corrections)
- tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் உங்களின் Username மற்றும் Password -யை கொண்டு Login செய்ய வேண்டும்.
- Modify Contact என்பதை கிளிக் செய்து Contact தகவல்களை Edit செய்யலாம்.
- Add Qualification என்பதை கிளிக் செய்தால், புதிய தகுதிகளை Add செய்யலாம்.
நினைவில் கொள்ளவேண்டிய தகவல்கள்
- முதுகலை படிப்பு (PG) மற்றும் தொழில்முறை பட்டதாரி பட்டம் பெற்றவர்கள், தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவே விண்ணப்பிக்க முடியும்.
- நீங்கள் தகவல்களை பதிவு செய்யும்போது, சரியான தகவல்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
- பதிவு செய்யப்பட்ட விவரங்களில் ஏதாவது முரண்பாடுகள் இருந்தால், சம்மந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அதற்கு தொடர்புடைய சான்றிதழ்களை நேரில் கொண்டு சென்று திருத்திக்கொள்ளாம்.
- பதிவு செய்யப்பட்ட பிறகு, எந்த நேரத்திலும் தங்களின் சுய விவரங்களை புதுப்பித்தல், தகுதிகள் மற்றும் வேலை அனுபவங்களை சேர்த்தல் போன்றவற்றை செய்யலாம்.
- வேலைவாய்ப்பு பதிவு மூலம் வழங்கப்படும் சேவைகள் மற்றும் சலுகைகளை பெறுவதற்கு, 3 வருடத்திற்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்ட வேண்டும்.
மேலும் படிக்க – TN Velaivaaippu Renewal, Forgot User ID & Password
இன்று நீங்கள் தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளத்தில் எவ்வாறு பதிவு செய்வது என்பதை பற்றி தெரிந்துகொண்டீர்கள். இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தால் கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.
iam forget my user id and password then registration number
At present TN employment website does not provide the facility to retrieve the registration number.
So you can approach the district employment office.
if u find any solution sir. if u find solution tell me sir how to recover my id
Sure
Hi, I’m forgot my registration number, user I’d,password, please help me require the problem
Currently, there is no option to search for a registration number online. So you go to the district employment office with your original certificates.
They will search for your registration number in a few minutes.
You can create a User ID yourself if you know the registration number.