TNVelaivaaippu Lapsed Renewal – தாமதமான Renewal
TNVelaivaaippu Lapsed Renewal: TN வேலைவாய்ப்பு இணையதளத்தில் சில நேரங்களில் நீங்கள் Employement கார்டை புதுப்பிக்க மறந்துவிடலாம். அவ்வாறு புதுப்பிக்க தவறிவிட்டால் பின்பு அதை புதுப்பிக்க இயலாது.
இருப்பினும் சில நேரங்களில் புதுப்பதற்கு சலுகை வழங்கப்படும். அவ்வாறு சலுகை வழங்கும் நேரத்தில் கடந்த காலத்தில் புதுப்பிக்க தவறிய உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்ள முடியும். இப்பொழுது அதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளதால் அதை பற்றிய தகவல்களை இந்த இடுகையில் விரிவாக காணலாம்.
மாணவர்கள் தங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கல்வி தகவல்களை தமிழ்நாடு வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்கிறார்கள். அதில் கல்வி தகுதிகள் மட்டுமின்றி விளையாட்டு, ஓட்டுநர் உரிமம், தட்டச்சு போன்ற மற்ற திறன்களையும் பதிவு செய்கிறார்கள்.
இது வருங்காலத்தில் எப்போதாவது பயன்படலாம் என்று நினைத்து பதிவு செய்கிறார்கள். தற்போது வேலைவாய்ப்பு இணையதளத்தில் அந்தந்த பள்ளிகளே பதிவு செய்துவிடுகின்றன.
அப்படி பதிவு செய்த பிறகு அதை ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை Renewal செய்ய வேண்டும். அப்படி Renewal செய்யவில்லை என்றால் அந்த பதிவு நம்பர் செயலிழந்து விடும். பிறகு அதை கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எனவே TN Employement இல் பதிவு செய்த அனைவரும் 3 வருடங்களுக்கு ஒரு முறை கட்டாயம் புதுப்பிக்க வேண்டும்.
Table of Contents
TN Employement இல் Renewal செய்ய ஏன் மறக்கிறார்கள்?
பல்வேறு உறுப்பினர்கள் வேலைவாய்ப்பு கார்டை புதுப்பிக்க மறந்துவிடுகின்றனர். இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
சில நபர்கள் Registration Number யையும் மற்றும் அந்த நம்பர் உள்ள சீட்டையும் தொலைத்துவிடுகிறார்கள். அவ்வாறு தொலைக்கும்போது புதுப்பிக்க இயலாது.
இன்னும் சில நபர்கள் பதிவு எண்ணை வைத்திருந்தும் அதை புதுப்பிக்க வேண்டும் என்பதையே முற்றிலுமாக மறந்துவிடுகிறார்கள். பிறகு சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து தான் அதை பற்றிய நினைவு வரும்.
இவ்வாறு புதுப்பிக்க மறக்காமல் இருப்பதற்கு என்ன தான் தீர்வு ?
நீங்கள் சரியான நேரத்தில் புதுப்பிக்க நினைத்தால் சிலவற்றை பின்பற்றலாம்.
முதலாவதாக உங்களின் டைரி , குறிப்பு புத்தகங்கள் அல்லது நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஒன்றில் புதுப்பிக்கும் மாதம் மற்றும் ஆண்டை குறித்து வைக்கலாம்.
இரண்டாவதாக தற்போது அனைவரும் ஸ்மார்ட் போனை பயன்படுத்திக்கொண்டு இருப்பீர்கள். அதில் கூகிள் காலண்டரில் Renewal செய்ய வேண்டிய மாதம் மற்றும் ஆண்டை குறித்துவிட்டால் போதும். பிறகு அந்த தேதி நெருங்கும் போது உங்களுக்கு நினைவூட்டல்கள் வரும்.
மேற்கூறிய இரண்டு வழிகளில் உங்களுக்கு எது வசதியாக உள்ளதோ அந்த முறையை பயன்படுத்தலாம்.
TNVelaivaaippu Lapsed Renewal: தாமதமான புதுப்பிப்பு
பல மாணவர்கள் வேலைவாய்ப்பு இணையதளத்தில் Renewal செய்ய மறந்துவிடுவதால், அரசாங்கம் எப்போதாவது ஒரு முறை Renewal செய்வதற்கான சலுகை வழங்கும். இந்த சலுகையின் மூலம் சில ஆண்டுகள் வரை புதுப்பிக்காமல் இருக்கும் உறுப்பினர்கள் புதுப்பித்துக்கொள்ள முடியும்.
கடந்த 28.05.2021 அன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் புதுப்பிக்க தவறிய உறுப்பினர்கள் மீண்டும் புதுப்பித்துக்கொள்ள ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 25.10.2018 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் 2011, 2012, 2013, 2014, 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கப்பட்டது.
அதே போல் தற்போது மீண்டும் இந்தாண்டு அந்த சிறப்பு Renewal சலுகையை வழங்கியுள்ளது. இந்த சிறப்பு சலுகையின் மூலம் 2017,2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறிய உறுப்பினர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இப்பொழுது புதுப்பித்துக்கொள்ள முடியும்.
நிபந்தனைகள்:
- இச்சலுகையின் மூலம் புதுப்பிக்க விரும்பும் நபர்கள், அரசாணை வெளியிட்ட 3 மாதங்களுக்குள் புதுப்பிக்க வேண்டும்.
- இந்த சிறப்பு சலுகையானது ஒரு முறை மட்டுமே வழங்கப்படும்.
- ஒருவேளை நீங்கள் அரசாணை வெளியிட்ட மூன்று மாதங்களுக்கு பிறகு புதுப்பித்தால், உங்களின் கோரிக்கை ஏற்கப்படாது.
- 1.1.2017 முதல் 31.12.2019 க்குள் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும்.
- 1.1.2017 க்கு முன்னர் புதுப்பிக்க தவறியவர்கள் இப்பொழுது வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகையில் மூலம் Renewal செய்ய முடியாது.
இதற்கான அரசாணையை பதிவிறக்கம் செய்வதற்க்கு கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
TN வேலைவாய்ப்பு இணையதளத்தில் Renewal செய்வது எப்படி?
நீங்களே ஆன்லைன் மூலம் எளிதாக புதுப்பிக்க முடியும். அதற்கான செயல்முறையை பற்றி காணலாம்.
Step 1: முதலில் https://tnvelaivaaippu.gov.in/Empower/# என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: உங்களின் User ID மற்றும் Password யை உள்ளிட்டு Login செய்யவும்.
Step 3: Update Profile > Renewal > Candidate Renewal என்றவாறு தேர்வு செய்யவும்.
Step 4: இந்த பக்கத்தில் Registration Number, Candidate Name, Current Renewal Date மற்றும் Status இல் Lapsed என்று இருக்கும். இப்பொழுது Renew என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
Step 5: இப்பொழுது வெற்றிகரமாக Renewal ஆகிவிடும். மேலும் அடுத்து எப்பொழுது புதுப்பிக்க வேண்டும் என்பதற்கான தேதியும் தெரிவதை காண்பீர்கள்.
இப்பொழுது User ID மற்றும் Password மூலம் Login செய்து எப்படி புதுப்பிப்பது என்று பார்த்தோம். ஆனால் சில நபர்கள் தங்களின் User ID யை மறந்திருக்கலாம். அவர்கள் எப்படி User ID யை மீட்டெடுப்பது என்பதை பற்றி காணலாம்.
How to Recover TNVelaivaaippu User ID
பின்வரும் செயல்முறைகளை பின்பற்றி நீங்கள் மறந்துவிட்ட User ID யை Recover செய்யலாம்.
Step 1: Existing User என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 2: இப்பொழுது Candidate Login பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை வழங்கவும். இதில் நீங்கள் Registration Number யை Enter செய்தவுடன் User ID தெரியும்.
தற்போது உங்களின் User ID யை தெரிந்துகொண்டீர்கள். இப்பொழுது மீண்டும் Login பக்கத்திற்கு சென்று Login செய்யலாம்.
User ID யை மீட்டெடுக்க முடியவில்லையா?
ஒருசில நபர்கள் தங்களின் User ID யை கண்டறியும் Option இல் சென்று User ID யை கண்டறிய முயற்சி செய்தால், அவர்களுக்கு Registration number is not Valid என்ற பிழைச்செய்தி வரலாம்.
ஏனெனில் ஏற்கனவே Renewal செய்ய வேண்டிய தேதி கடந்துவிட்டதால், உங்களின் Registration Number செயலிழந்து இருக்கலாம். எனவே தான் உங்களுக்கு அந்த பிழைச்செய்தி வந்திருக்கும்.
இப்பொழுது அதற்கான தீர்வு என்னவென்றால், நீங்கள் நேரடியாக உங்களின் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று Renewal செய்வதே சிறந்தது ஆகும். அப்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று புதுப்பித்துவிட்டால், பிறகு உங்களின் Registration Number வேலை செய்யும்.
பிறகு நீங்களே உங்களின் User ID யை மீட்டெடுத்து Login செய்யலாம்.
முடிவுரை
Renewal செய்ய தவறிய நபர்கள் அரசாணை வெளியிட்ட மூன்று மாத்திற்குள் புதுப்பிக்க வேண்டும். அதற்க்கு பிறகு புதுப்பிக்க இயலாது. எனவே நீங்கள் விரைவாக ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்றோ புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
இந்த இடுகையில் கூறிய தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் பல பயனுள்ள தகவல்களை பெற கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள்.
இதை பற்றிய சந்தேகம் ஏதேனும் இருந்தால் கீழே பதிவிடவும்.