TN Velaivaaippu Renewal, Forgot User ID & Password 2022
TN Velaivaaippu துறையில் பதிவு செய்யப்பட்ட Employment Card -யை Online மூலமாகவே Renewal செய்து கொள்ளலாம். அவ்வாறு நீங்கள் Renewal செய்யும்போது, User ID மற்றும் Password-யை மறந்துவிட்டாலும் அதை நீங்களே Reset செய்து மீட்டெடுத்து கொள்ளலாம். இதற்கான செயல்முறைகளை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
TN Velaivaaippu Website
தமிழ்நாடு வேலைவாய்ப்பு என்பது வேட்பாளர்களின் (Candidate) கல்வி தகுதி மற்றும் பிற திறமைகளை பதிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட Online Portal ஆகும். இந்த Tamilnadu Employment Exchange இணையதளம், வேலைவாய்ப்பற்ற வேலை தேடுபவர்களுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டும். இது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குவிவதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் மாணவர்கள் தங்களின் கல்வித்தகுதிகளை பதிவு செய்வதற்கு பல மணி நேரங்கள் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.
கல்வித்தகுதிகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் நடைமுறை வந்தவுடன் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதன் மூலம் மாணவர்களே ஆன்லைன் மூலமாக அல்லது அருகில் உள்ள நெட் சென்டருக்கு சென்று எளிதாக தங்களின் அனைத்து கல்வித்தகுதிகளையும் பதிவு செய்துகொள்ளமுடிகிறது.
2013 ஆம் ஆண்டு https://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற Online Portal தொடங்கப்பட்டது. அனைத்து தரப்பினரும் தங்களின் கல்வி, டிப்ளமோ மற்றும் பிற தொகுதிகளின் தகவல்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
படிப்பறிவு அற்றவர்கள், 8-ம் வகுப்பிற்கும் குறைவாக படித்தவர்கள், 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு படித்தவர்கள் மற்றும் டிப்ளமோ, ITI, தொழில்முறை, இளங்கலை, முதுகலை பட்டங்களை முடித்த வேட்பாளர்கள் இந்த Portal -லில் Register செய்யலாம்.
Steps to Employment Exchange Card Renewal
ஏற்கனவே வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அதை Renewal செய்ய வேண்டும். பதிவு செய்த Employment Card -ல் Renewal செய்யப்பட வேண்டிய தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் குறிப்பிட்டுள்ள மாதம் வந்தவுடன் உங்களின் அட்டையை புதுப்பித்தல் செய்வது முக்கியமாகும். அந்த மாதத்தில் நீங்கள் எந்த தேதியில் வேண்டுமானாலும் புதுப்பித்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு TN Velaivaaippu இணையதளத்தில் Online மூலமாக எவ்வாறு Renewal செய்வது என்று தெரியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழுது நீங்களே Online மூலம் புதுப்பித்துக்கொள்வதற்கான முழு செயல்முறையையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இதற்காக நீண்ட நேரம் செலவிட வேண்டிய தேவையில்லை. ஒரு சில நிமிடங்களில் இதை செய்து முடிக்கலாம். வாருங்கள் தொடங்குவோம்.
கீழ்காணும் செயல்முறைகளின் மூலம், நீங்கள் வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்த அட்டையை புதுப்பிக்கலாம்.
Step 1: முதலில் https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை இணையதளத்தை அணுக வேண்டும்.
Step 2: முகப்பக்கத்தில் உள்ள Renewal என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இப்பொழுது Pop Up திரை தோன்றும். அதில் உங்களின் User ID மற்றும் Password -யை கொண்டு Login செய்யவும்.
Step 4: இப்போது உங்களின் Profile பக்கம் திறக்கும்.
Step 5: அதில் Update Profile என்பதை கிளிக் செய்து Renewal >Candidate Renewal என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 6: Renew என்பதை கிளிக் செய்தால் உங்களின் வேலைவாய்ப்பு பதிவுத்துறை அட்டை புதுப்பிக்கப்பட்டுவிடும்.
அவ்வளவு தான் இப்பொழுது உங்களின் Employement Card யை நீங்கள் வெற்றிகரமாக Renewal செய்துவிட்டிர்கள். அதை Print எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அதில் மீண்டும் எப்பொழுது புதுப்பிக்க வேண்டும் என்ற தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
How to Reset Forgot User ID & Password
தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில், முதல் முறையாக பதிவு செய்யும்போது User ID மற்றும் Password -யை அமைக்க வேண்டியதிருக்கும். பிறகு ஒவ்வொரு முறையும் User ID மற்றும் Password -யை கொண்டுதான் Login செய்ய முடியும்.
ஒருவேளை, நீங்கள் User ID மற்றும் Password -யை மறந்துவிட்டால், அவற்றை உங்களால் மீட்டெடுக்க முடியும்.
கீழ்காணும் செயல்முறைகளை பின்பற்றி TN Velaivaaippu User ID, Password -யை மீட்டெடுக்கலாம்.
Steps to Reset TN Velaivaippu User ID
Step 1: https://tnvelaivaaippu.gov.in/Empower என்ற இணையதளத்தை அணுக வேண்டும்.
Step 2: Candidate Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: தற்போது தோன்றும் திரையில் Exchange Code, Gender, Year of Registration, Registration Number போன்ற தகவல்களை கொடுக்க வேண்டும்.
Step 4: பிறகு Login என்பதை கிளிக் செய்தால் User ID தோன்றுவதை காணலாம்.
Steps to Reset TN Velaivaippu Password
Step 1: TN Velaivaaippu இணையதளத்தின் Login பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: Login பகுதிக்கு கீழே உள்ள Forgot Password என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: User ID, Date of Birth ஆகிய தகவல்களை Enter செய்ய வேண்டும். பிறகு New Password மற்றும் Confirm Password என்ற இடத்தில் புதிய Password -யை கொடுத்து Save என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: இப்பொழுது உங்களின் புதிய Password Change ஆகிவிடும். அடுத்த முறை Login செய்யும் போது, New Password யை கொண்டு Login செய்யலாம்.
Employment Registration Number is not Valid problem
சில நேரங்களில் நீங்கள் உங்களின் User ID Reset செய்யும் போது Registration number is not Valid என்ற பிழை செய்தி தோன்றுவதை காண்பீர்கள்.
உங்களின் பதிவு எண்ணை நீங்கள் சரியாக தான் உள்ளிட்டு இருப்பீர்கள். இருந்தாலும் சில நபர்களுக்கு மேற்கண்ட பிழைச்செய்தி தோன்றலாம்.
ஏன் இவ்வாறு தோன்றுகிறது?
வேலைவாய்ப்பு இணையதளத்தில் சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறிய நபர்களுக்கு மட்டுமே இந்த மாதிரியான பிழைச்செய்தி தோன்றும். ஏனெனில் அவர்கள் சரியான நேரத்தில் Renewal செய்ய தவறியதால், அவர்களின் TN Velaivaaippu Regsitration Number ஆனது Inactivate ஆகிவிடும். அப்படி செயலிழந்த Registration Number யை உள்ளிடும் போது மேற்கண்ட பிழைச்செய்தி தோன்றும்.
இதற்க்கு தீர்வு என்ன?
இதற்கான தீர்வு என்னவென்றால், நீங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று Renewal செய்யலாம். அப்படி Renewal செய்த பிறகு உங்களின் Registration Number Activate ஆகிவிடும். பிறகு அந்த எண்ணை கொண்டு User ID யை Reset செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க – TN Velaivaaippu Online New Registration
இந்த கட்டுரையில் TN வேலைவாய்ப்பு இணையதளத்தில் புதுப்பித்தல், User ID மற்றும் Password யை Reset செய்தல் போன்றவற்றை தெரிந்துகொண்டோம். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.
Frequently Asked Questions (FAQ)
TN Velaivaaippu இணையதளத்தில் விண்ணப்பதாரர்களே தங்களின் வேலைவாய்ப்பு அட்டையை Renewal செய்துகொள்ள முடியுமா?
ஆம் முடியும்.
புதுப்பிக்க என்னென்ன தேவைப்படும்?
உங்களின் TN வேலைவாய்ப்பு இணையதள User ID மற்றும் Password இருந்தால் போதுமானது.
ஒருவேளை என்னுடைய User ID மற்றும் Password யை மறந்துவிட்டால் என்ன செய்வது?
அதை நீங்கள் மீட்டெடுத்துக்கொள்ளலாம் அதற்கான வசதி TN Velaivaaippu இணையதளத்தில் உள்ளது.
Renewal செய்த பிறகு புதிய வேலைவாய்ப்பு அட்டையை Print எடுக்க முடியுமா?
நிச்சயம் எடுக்கலாம். நீங்கள் Renewal செய்த பிறகு Print எடுப்பதற்கான தேர்வு வரும். அதை கிளிக் செய்து Print எடுக்கலாம். அல்லது அதை Save செய்து ஜெராஸ் கடையில் Print எடுக்கலாம்.
என்னிடம் எந்த தகவல்களும் இல்லை நான் எப்படி Renewal செய்வது?
நீங்கள் ஆதார் அட்டை மற்றும் கல்வி தொடர்புடைய ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று Renewal செய்யலாம்.
நான் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு அட்டையில் உள்ள Renewal மாதத்தில் எந்த தேதியில் புதுப்பிக்க வேண்டும்?
அட்டையில் குறிப்பிட்டுள்ள வருடத்தின் மாதத்தில் எந்த தேதியில் வேண்டுமானாலும் புதுப்பித்துக்கொள்ளலாம்.