How to Reset UPI PIN in Phonepe in Tamil: முழு விளக்கம்
How to Reset UPI PIN in Phonepe in Tamil: நீங்கள் உங்களின் Phonepe யில் பயன்படுத்தும் UPI PIN நம்பரை மறந்துவிட்டிர்களா? அந்த UPI PIN நம்பரை Reset அல்லது Change செய்ய விரும்புகிறீர்களா? ஆம் என்றால், இந்த கட்டுரை உங்களுக்கு வழிகாட்டும். அதாவது UPI PIN யை Reset செய்வதற்கான முழு தகவல்களையும் தகுந்த படங்களுடன் இந்த கட்டுரை வழங்கும்.
இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த அதிகமாக பயன்படுத்தப்படும் மொபைல் செயலிகளில் Phonepe செயலியும் ஒன்றாகும். போன்பே செயலியின் மூலம் உங்களின் Bank Account இல் இருந்து மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பணத்தை Transfer செய்யலாம். மேலும் இந்த போன்பே செயலியானது மொபைல் ரீச்சார்ஜ், DTH Bill, QR Code மூலம் பணம் செலுத்துதல் போன்ற பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.
நீங்கள் போன்பே, Google Pay அல்லது மற்ற UPI செயலிகளின் மூலம் ஒரு பரிவர்த்தனையை செய்யும்போது UPI PIN Number தேவைப்படும். அந்த பின் நம்பர் இருந்தால் மட்டுமே உங்களால் அந்த பரிவர்த்தனையை செய்ய முடியும். ஒருவேளை நீங்கள் உங்களின் UPI PIN நம்பரை மறந்திருக்கலாம். அந்த நேரத்தில் உங்களின் UPI PIN Number யை Reset செய்வது அவசியமாகிறது. இந்த பதிவை முழுமையாக படிப்பதன் மூலம், அதற்கான தீர்வை பெறலாம்.
Table of Contents
UPI PIN என்றால் என்ன?
UPI PIN அல்லது Unified Payments Interface Personal Identification Number என்பது, ஒரு UPI செயலியில் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் உறுதிப்படுத்தும் தனித்துவ எண்ணாகும். இந்த பின் நம்பர் ஆனது 4 அல்லது 6 இலக்கங்களை கொண்டிருக்கும். இதை நீங்கள் யாருடனும் பகிர்ந்துகொள்ளக்கூடாது.
நீங்கள் ஒரு ATM நிலையத்தில் பணத்தை எடுக்கும்போது அதில் 4 இலக்க பின் நம்பரை என்டர் செய்வீர்கள். அதில் சரியான பின் நம்பரை உள்ளிட்டால் பணம் Withdraw ஆகிவிடும். அதே போல தான் இந்த UPI PIN நம்பரும் செயல்படுகிறது. நீங்கள் ஒரு பரிவர்த்தனையை செய்யும்போது, கடைசி படியாக சரியான UPI PIN Number யை உள்ளிட்டால், அந்த பரிவர்த்தனை உறுதிப்படுத்தப்பட்டு Transfer ஆகிவிடும்.
How to Reset UPI PIN in Phonepe in Tamil
இப்பொழுது Phonepe செயலியில் UPI PIN Number யை எவ்வாறு Reset செய்வது என்று பார்க்கலாம்.
Step 1: முதலில் போன்பே செயலியை ஓபன் செய்யவும்.
Step 2: மேலே இடது பக்க மூலையில் இருக்கும் Profile யை கிளிக் செய்யவும்.
Step 3: இப்பொழுது நீங்கள் UPI இல் இணைத்த வங்கிக்கணக்குகளின் பட்டியல் வரும். அதில் நீங்கள் எந்த வங்கிக்கணக்கிற்கு UPI PIN யை Reset செய்ய வேண்டுமோ அந்த வங்கிக்கணக்கை தேர்வு செய்யவும்.
Step 3: தற்போது UPI PIN என்ற இடத்தில் Reset மற்றும் Change என்ற இரண்டு தேர்வுகள் இருக்கும். அதில் உங்களுக்கு பழைய UPI PIN தெரிந்திருந்தால், Change என்ற Option யை பயன்படுத்தி மாற்றலாம்.
ஒருவேளை பழைய பின் நம்பரை மறந்திருந்தால், Reset என்பதை கிளிக் செய்ய வேண்டும். இங்கு நான் Reset என்பதை கிளிக் செய்கிறேன்.
Step 4: உங்களின் ATM Card இல் இருக்கும் 16 இலக்க எண்களில் கடைசி 6 எண்களை மட்டும் உள்ளிடவும். பிறகு Expiry Month மற்றும் Year யை உள்ளிடவும். இது உங்களின் ATM Card இன் மேலே இருக்கும். கடைசியாக Proceed என்பதை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அது தானாகவே OTP Number யை உள்ளிட வேண்டிய இடத்தில் நிரப்பிக்கொள்ளும். எனவே நீங்கள் உள்ளிட வேண்டிய தேவை இருக்காது. தற்போது கீழே கிளிக் செய்து அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.
Step 6: இந்த பக்கத்தில் New UPI PIN யை Type செய்து கிளிக் செய்யவும்.
Step 7: உங்களின் புதிய UPI PIN யை மீண்டும் உள்ளிட்டு உறுதிப்படுத்தவும். அவ்வளவு தான் உங்களின் வேலை முடிந்தது. இப்பொழுது யுபிஐ பின் நம்பர் வெற்றிகரமாக Reset செய்யப்படும்.
இதற்க்கு பிறகு இந்த புதிய யுபிஐ பின் நம்பரை பயன்படுத்தி நீங்கள் வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். நீங்கள் எப்பொழுது இந்த UPI பின்னை மறந்தாலும் இந்த வழிமுறையை பயன்படுத்தி அதை மீட்டமைக்கலாம்.