UPI

How to use Google Pay: Step by Step Complete Guide

Google Pay என்பது ஆன்லைன் பரிவர்த்தனைகளை எளிமையாக மேற்கொள்ள உதவும் Google இன் புதிய பண பரிமாற்ற செயலி ஆகும். இது உங்களின் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்குகிறது. Google வழங்கும் இந்த செயலியின் மூலம் பயனாளர்கள், மொபைல் எண்ணை பயன்படுத்தி பணம் செலுத்தவும் மற்றும் பணம் பெறவும் முடியும்.   

உங்களின் வங்கிக்கணக்கை Google Pay செயலியுடன் இணைத்து, மிக எளிமையாக பண பரிவர்த்தனைகளை செய்யலாம். நீங்கள் அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிட்டு பட்டனை தட்டினால் பணம் உடனடியாக பயனாளருக்கு சென்றுவிடும். இதை எங்கிருந்தும் எந்த நேரத்திலும் இயக்க முடியும்.

கூகுள் பே மூலம் Recharge, Bill Pay, Shopping மற்றும் இதுபோன்ற பல விஷயங்களை செய்ய முடியும். இது அனைவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ப எளிதான வசதிகளை கொண்டுள்ளது.

இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள், ஏற்கனவே Google Pay செயலியை பயன்படுத்துபவராக இருக்கலாம். அல்லது இதுவரை பயன்படுத்தாதவராகவும் இருக்கலாம்.

இந்த கட்டுரையானது, கூகிள் பே  செயலியை இதுவரை பயன்படுத்தாதவர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு மேலும் பல தகவல்களை வழங்கக்கூடியதாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Required to Open a Google Pay Account

நீங்கள் கூகிள் பே கணக்கை திறப்பதற்கு பின்வருவன தேவைப்படுகின்றன:

  • ஒரு வங்கிக்கணக்கு (Bank Account) 
  • வங்கிக்கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் (Registered Mobile Number)
  • ஏ.டி.எம் அட்டை (ATM Card)
  • இணைய இணைப்பு (Internet Connection)

நினைவில் கொள்ள வேண்டியவை

நீங்கள் கூகிள் பே திறப்பதற்கு முன்பு பின்வனவற்றை நினைவில் கொள்ள வேண்டும்:

  • நீங்கள் எந்த மொபைலில் கூகிள் பே கணக்கை திறக்க விரும்புகிறீர்களோ, அந்த மொபைலில் உங்களின் வங்கிக்கணக்கில்  பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர் இருக்க வேண்டும்.
  • அந்த மொபைல் நம்பரில் குறைந்தபட்சம் Rs.1.50 இருக்க வேண்டும். ஏனெனில் Automatic SMS Verification நடக்கும்போது, SMS க்கான கட்டணம் வசூலிக்கப்படும்.

மேற்கூறியவற்றை நினைவில் கொண்டு Google Pay Account யை திறக்க தயாராக உள்ளீர்களா?  நீங்கள் பின்பற்ற வேண்டிய படிகளை இங்கே காணலாம்.

Steps to Open Google Pay in Tamil 

Step 1: உங்களின் மொபைலில் உள்ள Google Play store யை Open செய்து Google Pay App யை Download செய்யவும்.

Download Google Pay App from play store

Step 2: இப்பொழுது App யை Open செய்து, உங்களின் மொபைல் நம்பரை Type செய்க.  பிறகு Next என்பதை கிளிக் செய்க.

Enter Mobile Number

Step 3: இப்போது உங்களின் மொபைல் போனில் ஏற்கனவே Login செய்துள்ள Gmail Account  மற்றும் ஏற்கனவே Type செய்த மொபைல் எண் தெரியும். இங்கே Next என்பதை கிளிக் செய்யவும்.

Read  SBI UPI Limit Exceeded Error: Why Showing this Error

Click Next

Step 4: உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP Number வரும். அந்த OTP நம்பர் தானாகவே Detect ஆகி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

Enter OTP Number

Step 5: இந்த பக்கத்தில், செயலியை Open செய்வதற்கு Screen Lock அல்லது Google PIN இந்த இரண்டில் எதை பயன்படுத்தப்போகிறீர்கள் என்பதை தேர்வு செய்து Continue என்பதை கிளிக் செய்க. 

Screen Lock என்பதை தேர்வு செய்தால், இந்த App யை Open செய்ய, நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் Phone Screen Lock யை பயன்படுத்தலாம்.

Google PIN என்பதை தேர்வு செய்தால், 4 இலக்க புதிய PIN நம்பரை Set செய்ய வேண்டும்.

என்னை பொறுத்தவரை Google PIN என்பதை தேர்வு செய்வது சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறேன்.

Select Screen lock or Google pin

Step 6: இப்பொழுது உங்களின் Google Pay Account யை Open செய்துவிட்டீர்கள்.

Now google pay open successfuly

How to Add Bank Account in Google Pay

நீங்கள் கூகிள் பே கணக்கை ஓபன் செய்தால் மட்டும் போதாது. அதில் வங்கிக்கணக்கை சேர்த்தால் மட்டுமே உங்களால் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

வங்கிக்கணக்கை சேர்ப்பதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Step 1: கூகிள் பே செயலியை ஓபன் செய்து வலது மேல்புறத்தில் உள்ள Icon யை அழுத்தவும்.

Now click Icon

Step 2: புதிய வங்கிக்கணக்கை சேர்க்க Add a Bank Account என்பதை கிளிக் செய்யவும்.

Click Add a Bank account

Step 3: இப்பொழுது அனைத்து வங்கிகளின் பெயர்களும் வரிசையாக தெரியும். அதில் உங்களின் வங்கியை தேர்வு செய்யவும்.

All Bank Name List

Step 4: வங்கியை தேர்வு செய்த பிறகு, ஒரு Pop Up திரை தோன்றும். அதில் Send SMS என்பதை அழுத்தவும்.

Click Send SMS

Step 5: தற்போது SMS Verification மற்றும் அந்த மொபைல் எண்ணில் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கை தேடும் Process நடைபெறும்.

SMS Verification

Step 6:  இப்பொழுது வங்கியின் பெயர் மற்றும் வங்கிக்கணக்கின் கடைசி நான்கு இலக்க எண் தெரிவதை காணலாம். இப்பொழுது கீழே உள்ள Start என்பதை அழுத்தவும்.

Now click start

Step 7: உங்களின் ATM Card இன் கடைசி 6 இலக்க நம்பர் மற்றும் Expire Date ஆகியவற்றை உள்ளிட்டு அடுத்த நிலைக்கு செல்லவும்.

Enter ATM Card Last 6 digit & Expire Date

Step 8: Create PIN என்பதை கிளிக் செய்யவும்.

Click Create pin- google pay account

Step 9: உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP நம்பரை Enter செய்யவும்.

Step 10: உங்களின் ATM Card இன் 4 இலக்க PIN நம்பரை உள்ளிடுக.

Step 11: இப்பொழுது புதிய UPI PIN நம்பரை Type செய்க.

Step 12: UPI PIN நம்பரை மீண்டும் உள்ளிட்டு உறுதி செய்யவும்.

UPI PIN Updated

தற்போது உங்களின் Bank Account  ஆனது Google Pay இல் Add செய்யப்பட்டு அதற்கான PIN நம்பரும் உருவாக்கப்பட்டது.

How to Check Balance in Google Pay

கூகிள் பே செயலியின் மூலம் உங்களின் Bank Account இல் உள்ள Balance யை Check செய்ய முடியும். அதற்கான செயல்முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Step 1: கூகிள் பே செயலியின் முகப்பு பக்கத்தில் உள்ள Check Account Balance என்பதை கிளிக் செய்யவும்.

Check account Balance in google pay account

Step 2: UPI PIN நம்பரை Enter செய்க.

Read  Top 5 Best Mobile Payment Apps in India 2021: UPI Payment

Step 3: இப்பொழுது உங்களின் வங்கிக்கணக்கின் Balance தெரிவதை காணலாம்.

Now show balance

Google Pay Money Transfer

இந்த செயலியானது உங்களின் பண பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்குகிறது. கூகிள் பே செயலியை கொண்டு Recharge, Bill Payment மற்றும் Money Transfer போன்ற பல்வேறு பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இதை எங்கிருந்தும் மற்றும் எந்த நேரத்திலும் மேற்கொள்ள முடியும்.

Google Pay App இல் உள்ள பரிவர்த்தனை வகைகள் மற்றும் அதை எவ்வாறு செய்வது என்பதை பற்றி விளக்கமாக காணலாம்.

Step 1: கூகிள் பே செயலியை ஓபன் செய்து New Payment என்பதை அழுத்தவும்.

New Payment

Step 2: தற்போது பல்வேறு Option கள் தோன்றுவதை காணலாம்.

Bill Pay and Money Transfer

1. Mobile Recharge Through Google Pay 

நீங்கள் மொபைல் Recharge செய்ய இனி எங்கும் செல்ல தேவை இல்லை. ஏனெனில் Google Pay App மூலமாக எந்த ஒரு மொபைல் எண்ணிற்கு Recharge செய்ய முடியும். அதை எவ்வாறு செய்வது என்பதை பற்றிய விளக்கத்தை காணலாம்.

Step 1: Mobile Recharge என்பதை கிளிக் செய்யவும்.

Step 2: நீங்கள் Recharge செய்ய விரும்பும் மொபைல் நம்பரை Type செய்து அடுத்த நிலைக்கு செல்லவும்.

Enter mobile number for recharge

Step 3: Name, Operator மற்றும் Circle ஆகியவற்றை உள்ளிட்டு Continue என்பதை அழுத்தவும்.

Enter name and operator

Step 4: Recharge Amount யை Type செய்தால், அந்த Topup பணத்திற்கான Talktime மற்றும் Validity போன்ற தகவல்கள் வரும். அதை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும். 

Choose recharge plan

Step 5: Proceed to pay என்ற பட்டனை அழுத்துக.

Step 6: UPI PIN நம்பரை Enter செய்து கிளிக் செய்யவும்.

Step 7: இப்பொழுது வெற்றிகரமாக மொபைல் எண்ணிற்கு Recharge ஆகிவிடும்.

2. Bill Payments Through Google Pay

நீங்கள் ஒவ்வொரு மாதமும் பல்வேறு Bill களை செலுத்த வேண்டியதிருக்கலாம். அவை அனைத்தையும் இந்த ஒரே செயலியின் மூலம் செலுத்த முடியும். எடுத்துக்காட்டாக, இங்கு Electricity பில்லை எவ்வாறு செலுத்துவது என்பதை பற்றி காணலாம். 

Step 1: Bill  Payments என்பதை கிளிக் செய்யவும்.

Step 2: நீங்கள் செலுத்த வேண்டிய பில்லை தேர்வு செய்யவும். இங்கு Electricity என்பதை தேர்வு செய்துள்ளேன்.

Select Electricity bill

Step 3: Tamilnadu Electricity (TNEB) என்ற மாநிலத்தின் மின்சார வாரியத்தை தேர்வு செய்க.

Select TNEB

Step 4: Get Started என்ற பட்டனை கிளிக் செய்க.

Click get started

Step 5: உங்களின் Consumer Number யை உள்ளிட்டு அடுத்த பக்கத்திற்கு செல்லவும்.

Enter EB Consumer number

Step 6: Link Account என்பதை கிளிக் செய்தவுடன், உங்களின் EB Number கூகிள் பே செயலியுடன் இணைக்கப்படும்.

Link Account

Step 7: இப்பொழுது நீங்கள் கட்டவேண்டிய தொகை ஏதேனும் நிலுவையில் இருந்தால், அந்த தொகை இதில் தெரியும். பிறகு அந்த பில்லின் மீது கிளிக் செய்து அந்த தொகையை செலுத்தலாம்.

Now Pay your TNEB Bill

3. Bank Transfer Using Account Number 

நீங்கள் மற்றவர்களின் வங்கிக்கணக்கிற்கு Account Number, IFSC Code போன்ற விவரங்களை கொண்டு பணத்தை Transfer செய்ய விரும்பினால், இந்த முறையை பயன்படுத்தலாம்.

Step 1:  Bank Transfer என்ற Option இன் மீது கிளிக் செய்க.

Step 2: நீங்கள் யாருக்கு பணத்தை அனுப்புகிறீர்களோ அவர்களின் Account Number, IFSC Code மற்றும் Name ஆகியவற்றை உள்ளிட்டு Continue என்பதை அழுத்தவும்.

Read  What is UPI? - Unified Payments Interface: How it Works

Enter Account number & IFSC

Step 3: அனுப்ப வேண்டிய தொகையை Enter செய்து Proceed to pay என்பதை கிளிக் செய்யவும்.

Enter Amount and click Proceed to pay

Step 4: UPI PIN நம்பரை Enter செய்து கிளிக் செய்தால், பணமானது பயனாளரின் வங்கிக்கணக்கிற்கு சென்றுவிடும்.

4. Money Transfer Through Phone Number 

இந்த முறையானது, Google Pay செயலியை பயன்படுத்தும் பெரும்பாலான நபர்கள், அதிகமாக விரும்பி பயன்படுத்தும் Money Transfer முறையாகும். நீங்கள் பணத்தை Transfer செய்யும் நபர், Google Pay App யை பயன்படுத்துபவராக இருந்தால், அவரின் மொபைல் எண் மூலம் பணத்தை அனுப்பலாம்.

Step 1: பயனாளரின் மொபைல் நம்பரை Enter செய்து OK என்பதை கிளிக் செய்யவும்.

Enter google pay number

Step 2: Pay என்ற பட்டனை கிளிக் செய்க.

Click Pay Button

Step 3: அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளிட்டு Proceed to pay என்பதை அழுத்தவும்.

Proceed to Pay

Step 4: UPI எண்ணை உள்ளிட்டு பரிவர்த்தனையை நிறைவு  செய்யலாம்.

5. UPI ID or QR 

இந்த முறையில் பணத்தை UPI ID யை Enter செய்தும் அல்லது QR Code யை Scan செய்தும் பணத்தை செலுத்தலாம். தற்போது பெரும்பாலான கடைகளில் இந்த QR Code மூலம் பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்துகின்றனர்.

Step 1: UPI ID என்ற Option யை அழுத்தவும்.

Step 2: இப்பொழுது இரண்டு வகையான Option கள் தோன்றும்.

Choose UPI ID or QR Code Scanner

Step 3: நீங்கள் UPI ID என்பதை தேர்வு செய்தால், பயனாளரின் UPI ID யை உள்ளிட்டு, அதன் மூலம் Transfer செய்யலாம்.

Step 4: Open Code Scanner என்பதை தேர்வு செய்தால், QR Code யை Scan செய்து பணத்தை செலுத்தலாம்.

6. Self Transfer 

உங்களின் கூகிள் பே கணக்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகளை லிங்க் செய்திருந்தால், ஒரு வங்கிக்கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு பணத்தை Transfer செய்ய இந்த Self Transfer தேர்வை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Step 1: Self Transfer என்ற தேர்வை கிளிக் செய்யவும்.

Step 2: Transfer From என்ற இடத்தில், நீங்கள் எந்த கணக்கிலிருந்து பணத்தை Transfer செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்க.

Transfer From Account

Step 3: Deposit into என்ற இடத்தில், Transfer செய்ய வேண்டிய வங்கிக்கணக்கை தேர்வு செய்து, Next என்பதை கிளிக் செய்யவும்.

Deposit into account

Step 4: பணத்தை Enter செய்து Transfer Now என்ற பட்டனை அழுத்தவும்.

Click Transfer Now

Step 5: இப்பொழுது UPI நம்பரை Type செய்து பணத்தை ஒரு வங்கிக்கணக்கிலிருந்து மற்றொரு கணக்கிற்கு Transfer செய்யலாம்.

Steps to Change UPI PIN in Google Pay

Step 1: Google Pay செயலியை Open செய்து ஐகானை கிளிக் செய்யவும்.

Click Icon in Google pay

Step 2: வங்கிக்கணக்கின் மீது கிளிக் செய்யவும்.

Click Account

Step 3: Bank Account யை தேர்வு செய்க.

Select Bank Account

Step 4: Forgot UPI PIN என்ற Option யை கிளிக் செய்யவும்.

Select Forgot UPI PIN

Step 5: உங்களின் ATM Card இன் கடைசி 6 இலக்க எண் மற்றும் Expire நம்பரை உள்ளிட்டு அடுத்த பக்கத்திற்கு செல்க.

Enter ATM Card Details

Step 6: இப்பொழுது உங்களின் மொபைல் எண்ணிற்கு வரும் OTP Number யை Enter செய்து கிளிக் செய்க.

Step 7: புதிய UPI PIN நம்பரை Type செய்க.

Step 8: மீண்டும் புதிய UPI PIN நம்பரை Type செய்து Confirm செய்யவும்.

Step 9: இப்பொழுது உங்களின் புதிய UPI PIN ஆனது வெற்றிகரமாக Change செய்யப்பட்டது.

முடிவுரை

இந்த பதிவின் மூலம் Google Pay Account யை எவ்வாறு Open செய்வது மற்றும் அதை பயன்படுத்தி எவ்வாறு பணத்தை Transfer செய்வது என்பது போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole