SBI OnlineUPI

SBI UPI Limit Exceeded Error: Why Showing this Error

நீங்கள் SBI Bank Account இல் UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது சில நேரங்களில் ” SBI UPI Limit Exceeded Error ” என்ற செய்தி தோன்றுவதை கண்டிருப்பீர்கள். இந்த பிழைச்செய்தி ஏன் வருகிறது என்று நீங்கள் யோசித்துக்கொண்டிருக்கலாம். இந்த பிழைசெய்திக்கான காரணத்தை நான் உங்களுக்கு விளக்குகிறேன்.

மேற்கண்ட பிழைச்செய்தியானது SBI வங்கிக்கணக்கிற்கு மட்டுமல்லாமல் மற்ற வங்கிகளின் UPI Transaction களிலும் ஏற்படலாம். NPCI மற்றும் வங்கிகளின் விதிகள் காரணமாக தான் இந்த சிக்கல் தோன்றுகிறது.

இதை பற்றி சற்று விரிவாக காணலாம்.

Maximum UPI Transaction Limit  

UPI (Unified Payment Interface) பரிவர்த்தனை முறையானது மற்ற பரிவர்த்தனை முறைகளை விட சிறந்தது. ஏனெனில் இது அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த வசதியின் மூலம் மோசடிகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த மோசடிகளை பற்றி அவ்வப்போது செய்தித்தாள்களில் வருவதை கண்டிருக்கலாம். எனவே ஒரு வாடிக்கையாளரின் இழப்பை கட்டுப்படுத்த NPCI ஆனது, ஒரு நாளைக்கு அதிகபட்ச நிதிபரிமாற்ற வரம்பை (Transaction Limit) நிர்ணயித்துள்ளது.

Read  SBI Internet Banking Password-யை Reset செய்வது எப்படி

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் வரைக்கும் பரிவர்த்தனைகளை செய்யலாம். அந்த 1 லட்சத்திற்கு மேல் பணத்தை Transfer செய்ய முடியாது. 

UPI சேவையை வழங்கும் NPCI இந்த வரம்பை நிர்ணயித்துள்ளது. எனவே இதை ஒவ்வொரு வங்கியும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

Transaction Limit of Applicable on Bank Account 

ஒரு வங்கிக்கணக்கில் அதிகபட்ச Transaction Limit 1 லட்சம் என்பதை நினைவில் கொள்ளவும்.

இந்த UPI Limit ஆனது UPI செயலிகளின் எண்ணிக்கையை பொருட்படுத்தாமல் பொருந்தும். 

இதை ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கினால் உங்களுக்கு நன்றாக புரியும்.

நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட UPI செயலிகளை பயன்படுத்துவதாக கொள்வோம்.

அதாவது உங்களின் மொபைல் போனில் Google Pay, Phone Pe மற்றும் Bhim SBI Pay என்ற UPI செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அந்த மூன்று செயலிகளிலும் உங்களின் SBI Bank Account Link செய்துள்ளீர்கள்.

அவற்றில் முதலாவதாக Google Pay செயலியில் இருந்து 50 ஆயிரம் ரூபாயை வேறு நபருக்கு Transfer செய்கிறீர்கள். அடுத்த நீங்கள் Phone Pe செயலியின் மூலம் 50 ரூபாயை பரிமாற்றம் செய்கிறீர்கள். பிறகு Bhime SBI Pay செயலியின் மூலம் பரிவர்த்தனை செய்ய முயற்சித்தால் ” SBI UPI Limit Exceeded Error ” என்ற செய்தியை காண்பீர்கள்.

Read  How to Register & Use SBI Secure OTP App

ஏனெனில் உங்களின் SBI கணக்கில் நிர்ணயித்த 1 லட்சம் ரூபாயை மீறிவிட்டீர்கள். 

SBI UPI Transaction limit - Tamil

நீங்கள் ஒரே UPI செயலியில் Transfer செய்யாமல், இரண்டு UPI செயலிகளின் மூலம் தான் 50 ஆயிரம் வீதம் பரிமாற்றம் செய்தீர்கள். இருப்பினும் அந்த இரண்டு UPI செயலிகளும் ஒரே SBI கணக்குடன் தான் இணைக்கப்பட்டுள்ளன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

எனவே அந்த நாளில் மேற்கொண்டு UPI பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.

எப்போது பரிவர்த்தனைகளை செய்ய முடியும் ?

ஒரு நாளில் 1 லட்சம் ரூபாய் பரிவர்த்தனை வரம்பை மீறிவிட்டால், 24 மணி நேரம் கழித்து தான் பரிவர்த்தனைகள் செய்ய முடியும்.

எனவே 24 மணி நேரம் கழித்து Transaction யை செய்தால் Error செய்தி வராது.

சில நபர்கள் நான் ஒரு லட்சத்திற்கும் குறைவாக தான் பரிவர்த்தனை செய்தேன். இருப்பினும் எனக்கும் வரம்பை மீறிவிட்டதாக பிழைச்செய்தி வருகிறது என்று கூறுவார்.

இதற்கான காரணம் என்னவென்று பாப்போம்.

உதாரணமாக, நீங்கள் ஜூன் 5  மாலை 4 மணிக்கு 1 லட்ச ரூபாயை பரிமாற்றம் செய்தீர்கள் என்று கொள்வோம். பிறகு  அடுத்த நாளான ஜூன் 6 பிற்பகல் 12 மணிக்கு மீண்டும் 50 ஆயிரம் ரூபாயை மாற்ற முயற்சி செய்தால் நடக்காது. 

Read  SBI Passbook Printing: How to Print Your Passbook in Machine

ஏனெனில் ஒரு நாளுக்கான வரம்பை மீறிய பிறகு 24 மணி நேரம் கழித்தே அடுத்த பரிவர்த்தனையை செய்ய முடியும். இங்கு ஜூன் 6 மாலை 4 மணிக்கு தான் 24 மணி நேரம் நிறைவடைகிறது. எனவே 4 மணிக்கு பிறகு தான் பணத்தை பரிமாற்றம் செய்ய முடியும்.

Can How many UPI Transactions Make Per Day

ஒரு நாளைக்கு எத்தனை முறை பரிவர்த்தனைகள் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா?

சில நேரங்களில் இந்த வரம்பின் காரணமாகவும் உங்களால் பரிவர்த்தனை செய்ய முடியாமல் போகலாம். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 Transaction வரை செய்ய முடியும்.

இந்த எண்ணிக்கையை நீங்கள் மீறிவிட்டால் 24 மணி நேரம் முடியும் வரை காத்திருக்க வேண்டும். உங்களுக்கு பரிவர்த்தனைகள் மறுக்கப்பட்டால், கடைசி 24 மணி நேரத்தில் எத்தனை முறை பரிவர்த்தனை செய்துள்ளீர்கள் என்பதை பரிசோதித்து பாருங்கள்.

இருப்பினும், வணிகர்களுக்கு செலுத்தப்படும் எந்த பரிமாற்றமும் இந்த 10 Transaction வரம்பிற்குள் கணக்கிடப்படாது.

முடிவுரை 

இன்று நீங்கள் ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டீர்கள். வங்கிகள் மற்றும் வருங்கால வைப்பு நிதி சம்மந்தப்பட்ட கட்டுரைகளை தமிழ் மொழியில் தெரிந்துகொள்ள மற்ற பக்கங்களை பார்வையிடவும்.

மேலும் புதிய பதிவுகளை வெளியிடும்போது அதற்கான அறிவிப்புகளை பெறுவதற்கு கீழே உள்ள Bell பட்டனை அழுத்தி Subscribe செய்துகொள்ளுங்கள். அல்லது எங்களின் சமூக வலைத்தள பக்கங்களை Follow செய்யவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest
Optimized by Optimole