Top 5 Best Mobile Payment Apps in India 2021: UPI Payment
நீங்கள் Mobile Payment Apps களை பயன்படுத்தி உடனடியாக Money Transfer, Mobile Recharge, Bill Payment போன்றவற்றை செய்ய முடியும். இவ்வாறு செய்யப்படும் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை ஆகும். தற்போது Unified Payment Interface (UPI) அடிப்படையிலான பல்வேறு பண பரிமாற்ற செயலிகள் உள்ளன. அவற்றில் மக்கள் அதிகமாக பயன்படுத்தும் Top 5 UPI Apps களை வரிசைப்படுத்துகிறேன்.
Table of Contents
What is UPI Payment Apps
UPI என்பது மொபைல் செயலிகள் மூலம் Money Transfer செய்வதற்கான ஒரு வங்கி அமைப்பாகும். எடுத்துக்காட்டாக, உங்களின் வங்கிக்கணக்கை Google Pay இல் சேர்க்க வேண்டுமென்றால், அதற்க்கு அந்த வங்கியானது UPI உடன் வேலை செய்ய வேண்டும்.
இந்த UPI அமைப்பு அடிப்படையில் செயல்படும் பண பரிமாற்ற செயலிகள் UPI Payment Apps ஆகும்.
UPI செயலிகள் சிறப்பம்சங்கள்:
- UPI Money Transfer ஆனது மிகவும் பாதுகாப்பானது ஆகும்.
- நீங்கள் பொருட்களை வாங்கும்போது அதற்கான கட்டணத்தை QR Code யை செய்து Pay செய்யலாம்.
- Flipkart, Amazon போன்ற ஆன்லைன் வணிக தளங்களில் பொருட்களை வாங்கும்போது, அதற்கான கட்டணத்தை UPI ID மூலம் செலுத்தலாம்.
- இது 24×7 நாட்களிலும் செயல்படும்.
- ஒரு வங்கிக்கணக்கில் இருக்கும் பணத்தை உடனடியாக மற்றொரு வங்கிக்கணக்கிற்கு பரிமாற்றம் செய்ய முடியும்.
Top 5 Best Mobile Payment Apps in India
இந்தியாவில் சிறந்த பண பரிமாற்ற செயலிகள் Play Store மற்றும் App Store ஆகிய இரண்டிலும் கிடைக்கின்றன.
1.Google Pay
இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் UPI செயலிகளில் Google Pay யும் ஒன்றாகும். இது மிகவும் எளிமையான இடைமுகத்தை (Interface) கொண்டுள்ளது. உங்களின் நண்பர்களுக்கு பணத்தை அனுப்புவதையும், கோருவதையும் மிகவும் எளிதாக்குகிறது. மேலும் Mobile Recharge, DTH Recharge, Bill Payment, QR Code Payment போன்ற பல வசதிகளை Google Pay App கொண்டுள்ளது.
இந்த செயலியை திறப்பதற்கு கைரேகை சென்சாரையும் பயன்படுத்தலாம். இந்த செயலியின் மூலம் பரிவர்த்தனைகளை செய்வது பாதுகாப்பானது ஆகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் Money Transfer செய்யும்போது Scratch Cards மற்றும் Rewards மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
2. Phonepe
Phonepe App ஆனது 2015 ஆம் ஆண்டு December மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்தியாவின் Digital Wallet ஆன Phonepe இன் தலைமையிடம் பெங்களூரில் உள்ளது. இது தொடங்கப்பட்டு சில வருடங்களே ஆனாலும் இதை 10 மில்லியன் நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலின் மூலமும் Money Transfer, Recharge மற்றும் Bill Pay போன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இது பாதுகாப்பான மற்றும் வேகமான பரிமாற்ற செயலியாகும்.
3. BHIM App
BHIM என்பதின் விரிவாக்கம் Bharat Interface for Money ஆகும். இது மத்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் UPI பண பரிமாற்ற செயலியாகும். டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வதற்கான பிரபலமான செயலிகளில் Bhim செயலியும் ஒன்றாகும். இதில் முதலில் உங்களின் மொபைல் எண்ணை Verification செய்ய வேண்டும். பிறகு உங்களின் வங்கிக்கணக்கு எண்ணை சேர்க்க வேண்டும்.
4. Dakpay App
Dakpay என்பது India Post Payment Bank ஆல் அறிமுகப்படுத்த UPI அடிப்படையிலான பண பரிமாற்ற செயலியாகும். இதுவும் அரசாங்கத்தால் இயக்கப்படும் பாதுகாப்பான செயலியாகும். இது எளிமையான பண பரிவர்தனைனை வடிவமைப்பை கொண்டுள்ளது. Dakpay App இல் தனித்துவமான UPI ID உருவாக்கப்படும். இதில் கைரேகையை வைத்து செயலியை அணுகும் வசதியும் உள்ளது.
5. Paytm App
Paytm App யை நீங்கள் நிச்சயமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் இது இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக தளங்களில் ஒன்றாகும். இது தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை சேமிக்கவும் மற்றும் பணம் செலுத்தவும் டிஜிட்டல் பணப்பையை வழங்குகின்றன.
Paytm செயலியின் மூலம் வணிகர்களுக்கு எளிதாக பணம் செலுத்தலாம். மேலும் இது பயண கட்டணம், பொழுதுபோக்கு மற்றும் பில் செலுத்துதல் போன்ற பல்வேறு சேவைகளை வழங்குகிறது. UPI அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக Paytm தான் இந்தியாவின் பெரிய டிஜிட்டல் பணப்பையாக இருந்தது. தற்போது UPI அடிப்படையிலான பரிவர்தனைகளையும் வழங்குகிறது.