UPI

What is UPI? – Unified Payments Interface: How it Works

What is UPI ? இன்றைய டிஜிட்டல் உலகில் நீங்கள் UPI என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஏனெனில் ஆன்லைன் மூலம் வங்கிப் பரிவர்த்தனை செய்வதில் UPI ஆனது ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம், நீங்கள் இப்பொழுது பயன்படுத்தும் Google Pay, Phone pe, Bhim App மற்றும் DakPay போன்ற பண பரிமாற்ற செயலிகள் UPI அடிப்படையில் தான் செயல்படுகிறது.

பணமில்லா பொருளாதாரத்தை அடைய இந்தியா எடுத்துள்ள மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். இதன் மூலம் பணத்தை விரைவாக அனுப்பவும் மற்றும் பெறவும் முடியும்.

பெரும்பாலும் அனைத்து மக்களும் மொபைல் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். எனவே இதை பற்றிய தகவல்களை அவர்கள் தெரிந்துகொள்வது அவசியமாகும். 

What is UPI?

UPI என்பது Unified Payments Interface என்பதின் சுருக்கம் ஆகும். இது பல்வேறு வங்கிசேவைகள் மற்றும் அம்சங்களை ஒரே குடையின் கீழ் இணைக்கிறது.

இதன் மூலம் ஒரு வங்கிக்கணக்கில் இருந்து மற்றொரு வங்கிக்கணக்கிற்கு எளிதாக பணத்தை Transfer செய்ய முடியும். இவ்வாறு transfer செய்ய Bank Account Number, IFSC Code போன்றவை தேவைப்படுவதில்லை. மொபைல் நம்பர் அல்லது UPI ID இருந்தாலே பண பரிமாற்றம் செய்யலாம்.

Read  Top 5 Best Mobile Payment Apps in India 2021: UPI Payment

Who Started UPI

UPI ஆனது, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் National Payments Corporation of India (NPCI) இணைந்து ஜனவரி 2016 இல் தொடங்கப்பட்டது. NPCI என்பது பல்வேறு வங்கிகளை இணைக்கவும், நிதிகளை பரிமாற்றவும் அனுமதிக்கும் Rupay Payments உள்கட்டமைப்பை இயக்குகிறது. 

இந்த சேவை தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் சில தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு குறுகிய காலத்திற்குள் அனைத்து வங்கிகளும் சொந்த UPI செயலிகளை உருவாக்க ஆரம்பித்தன.

How do UPI Transactions Work

பொதுவாக வங்கிகள் வழங்கும் மொபைல் பேங்கிங் மற்றும் நெட் பேங்கிங் மூலம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, அதற்க்கு சில தகவல்களை தேவைப்படும். அதாவது, நீங்கள் பணம் அனுப்பும் நபரின் Bank Account Number, IFSC Code போன்றவை தேவைப்படும்.

ஆனால் UPI முறையில் பரிவர்த்தனை செய்யும்போது மொபைல் எண், ஆதார் எண் அல்லது UPI ID ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதுமானது ஆகும். இந்த முறையில் ஒரு கணக்கில் இருந்து எந்தஒரு வங்கிக்கணக்கிற்கும் பணத்தை அனுப்ப முடியும்.

Read  How to use Google Pay: Step by Step Complete Guide

எடுத்துக்காட்டாக, SBI கணக்கில் இருந்து மற்றொரு SBI கணக்கிற்கோ அல்லது இந்தியன் வங்கி கணக்கிற்க்கோ அனுப்ப முடியும். UPI Transaction யை பொறுத்தவரை வங்கி வேறுபாடுகள் ஏதும் கிடையாது. மொபைல் நம்பர் மூலமாகவே வங்கிக்கணக்கிற்கு பணம் அனுப்பப்படுகிறது. இதனால் வங்கிக்கணக்கு எண், பெயர், IFSC Code போன்றவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.

What is UPI ID

UPI ID என்பது ஒரு வங்கிக்கணக்கிற்கான தனித்துவ அடையாளமாகும். அதாவது UPI இல் உங்களை அடையாளம் காணும் முகவரியாகும். இது பணத்தை அனுப்பவும் மற்றும் பெறவும் பயன்படுகிறது.  

பொதுவாக UPI ID உங்களின் மொபைல் நம்பர் மற்றும் வங்கியின் பெயர் அல்லது உங்களின் Gmail ID மற்றும் வங்கியின் பெயர் (Google Pay இல்) என்ற வடிவத்தில் இருக்கும். எடுத்துக்காட்டாக, 90958468XX@ybl  அல்லது  sravananl547@oksbi 

Benefits of UPI

  • இதன் மூலம் பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாகும். 
  • பரிவர்த்தனையின் மூலம் அனுப்பப்படும் பணமானது உடனடியாக பயனாளரின் கணக்கிற்கு சென்றுவிடுகிறது.
  • Mobile Recharge, DTH மற்றும் EB Bill போன்றவற்றிக்கான கட்டணங்களை இதன் மூலம் செலுத்தலாம்.
  • மளிகைக்கடைகள், மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றிற்கான பணத்தை செலுத்தலாம்.
  • இந்த பயன்பாட்டின் மூலம் மற்றவர்களிடம் பண கோர முடியும்.
  • Bank Account Balance யை தெரிந்துகொள்ள முடியும்.
  • UPI பரிவர்த்தனைகள் மிகவும் பாதுகாப்பானவை ஆகும்.
Read  UPI என்றால் என்ன? | UPI Meaning in Tamil

How to Register UPI 

UPI Register செய்ய தேவையானவை:

  • உங்கள் வங்கிக்கணக்கில் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் 
  • ஒரு ஸ்மார்ட் போன் 
  • இன்டர்நெட் இணைப்பு 
  • ATM அட்டை 

பொதுவாக அனைத்து UPI செயலிகளையும் Register செய்ய பின்வரும் செயல்முறை பின்பற்றப்படுகிறது.

Step 1: Google Play Store அல்லது Apple App Store இல் இருந்து Bhim App அல்லது உங்களின் வங்கியின் UPI செயலியை Download செய்யவும்.

Step 2: செயலியை Open செய்து மொழியை தேர்வு செய்யவும். பிறகு Mobile Number யை Verify செய்யவும்.

Step 3: உங்களின் வங்கியை தேர்வு செய்து வங்கிக்கணக்கு எண்ணை Add செய்க.

Step 4: ATM Card தகவல்களை கொண்டு UPI PIN நம்பரை உருவாக்கவும்.  Money Transfer செய்யும்போது இந்த UPI PIN நம்பரை உள்ளிட நேரிடும்.

Step 5: இப்பொழுது உங்களின் UPI செயலியை வெற்றிகரமாக Register செய்துவிட்டீர்கள்.

இந்த பயன்பாட்டை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது இந்தியா பணமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகர்வதை உறுதி செய்கிறது. இது பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும்பாலான வங்கிகள் அனைத்தும் இந்த UPI சேவையை வழங்குகின்றன. 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole