Voter ID

How to Change Name in Voter id Card Online

.

தற்போது Voter ID Card இல் பெயர் திருத்தம் (Name Correction) செய்வது மிகவும் எளிதாகும். இதற்க்கு உங்களிடம் ஒரு ஸ்மார்ட் போன்  அல்லது கணினி இருந்தாலே போதுமானது ஆகும். ஒரு சில நிமிடங்களில் உங்களால் வாக்காளர் அடையாள அட்டையில் Name Change செய்யலாம்.

இந்தியாவில் 18 வயதை நிரம்பிய அனைத்து இந்திய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்காளர்களே தேர்வு செய்ய முடியும்.

தேர்தலில் வாக்களிக்கும் பொருட்டு இந்திய தேர்தல் ஆணையம் Voter ID Card யை வழங்குகிறது. அந்த வாக்காளர் அட்டையில் வாக்களிப்பவரின் Photo, Name, Date of Birth, Address மற்றும் தொகுதி போன்ற தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

சில நேரங்களில் உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் தவறுதலாக இருக்கலாம். அதாவது உங்களின் பெயருக்கான எழுத்துகள் தவறாக குறிப்பிடப்பட்டிருக்கலாம். அவ்வாறு இருப்பின் அதை சரிசெய்வது முக்கியமாகும்.

உங்களின் Voter Card இல் இருக்கும் Name யை Change செய்வதற்கு நீங்கள் சிரமப்பட தேவையில்லை. நீங்கள் உங்களின் வீட்டில் இருந்தவாறே வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தத்தை செய்யலாம்.

வாக்காளர் அட்டையில் உள்ள பெயரை திருத்துவதற்கான முழு செயல்முறையையும் தகுந்த புகைப்படங்களுடன் உங்களுக்கு விளக்கப்போகிறேன்.

Required Documents For Voter ID Name Correction 

நீங்கள் Voter ID யில் Name Correction செய்வதற்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டிருக்க வேண்டும்.

  • ஆதார் கார்டு (Aadhaar Card)
  • ஓட்டுநர் உரிமம் (Driving License)
  • பான் அட்டை (Pan Card)
  • மதிப்பெண் சான்றிதழ் ( Marksheet)
Read  NVSP Portal Registration: Voter ID Portal Login & Reset Password

Reason For Change / Correction Name in Voter ID 

பொதுவாக கீழ்கண்ட காரணங்களால் வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம் செய்யப்படுகிறது.

  • வாக்காளர் அட்டையில் உங்களின் பெயர் பிழையாக இருக்கும்போது பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
  • பெண்கள் பெரும்பாலும் திருமணத்திற்கு பிறகு, தனது கணவரின் பெயரை சேர்த்துக்கொள்வார்கள். இந்த காரணத்தினாலும் பெயர் திருத்தம் செய்யலாம்.
  • நீங்கள் உங்களின் பெயரை மாற்றிக்கொண்டால் அதை வாக்காளர் அட்டையிலும் மாற்றம் செய்ய வேண்டும்.

How to Change Name in Voter ID Card Online

இனி வாக்காளர் அட்டையில் எவ்வாறு பெயர் திருத்தம் செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

Step 1: நீங்கள் முதலில் தேசிய வாக்காளர் சேவைகள் போர்டல் இணையதளமான nvsp.in  என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 

Step 2: அதில் Login / Register என்பதை கிளிக் செய்யவும்.

Click Login/Register - Voter Services

Step 3: உங்களின் User Name மற்றும் Password யை உள்ளிட்டு Login என்பதை அழுத்தவும்.

Read  Voter ID Correction: Name,Address,DOB & Photo in Online

Login Your Voter Service Account

நீங்கள் இன்னும் கணக்கை Register செய்யவில்லை என்றால், Dont’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்து கணக்கை உருவாக்கவும்.

மேலும் படிக்கHow to Register Account For Voter service 

Step 4: Account யை Login செய்தவுடன் Correction in personal details என்பதை கிளிக் செய்க.

Select Correction Personal Details - Change Name Voter ID

Step 5: ஏற்கனவே Self என்று தேர்வாகி இருக்கும். இப்பொழுது Next என்பதை அழுத்தவும்.

Click Next - Change Name Voter ID

Step 6: மொழியை தேர்வு செய்யும் இடத்தில் தமிழ் / Tamil என்பதை தேர்வு செய்க.

Select Tamil language

Step 7: இப்பொழுது அனைத்தும் தமிழ் மொழியில் மாறியிருக்கும். உங்களின் மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி போன்றவற்றை சரியாக தேர்வு செய்யவும்.

Choose Your Assembly Details

விண்ணப்பதாரரின் விவரங்கள்

Step 8: உங்களின் பெயர் ஏற்கனவே ஆங்கிலத்தில் இருக்கும். அதற்க்கு நேராக உள்ள இடத்தில் தமிழில் Type செய்யவும்.

Type Your Name - Voter ID Name Correction

வாக்காளர் பட்டியலின் பாகம் எண், வரிசை எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை எண் போன்றவை ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும்.

Read  How to Download Voter ID Card Online: e-EPIC Card Download

சரிசெய்யப்பட வேண்டிய பதிவில் டிக் குறியிடுக

Step 9: வாக்காளர் அட்டையில் நீங்கள் எதை Correction செய்ய வேண்டுமோ அதை டிக் செய்யவும்.

Tick Correction Option - Name Change Voter ID

தற்போது நாம் Voter ID Card இன் Name Change செய்வதால் பெயர் என்பதை மட்டும் டிக் செய்க. நீங்கள் இன்னும் வேறு ஏதேனும் மாற்ற விரும்பினால் அதையும் டிக் செய்யலாம்.

திருத்தப்பட வேண்டிய சரியான விவரங்களை உள்ளிடுதல் 

Step 10: இப்பொழுது நீங்கள் வாக்காளர் அட்டையில் திருத்தப்பட வேண்டிய தகவல்களை உள்ளிடவும்.

Enter Correct Details

ஆவணத்தை பதிவேற்றவும் 

Step 11: இதில் பெயர் மாற்றத்திற்கான ஆவணத்தை பதிவேற்றவும். 

Upload Supporting Document - Voter ID Correction

மேலும் உங்களின் Email மற்றும் Mobile நம்பரை Type செய்யவும். ஆனால் இவை இரண்டும் கட்டாயம் அல்ல.

உறுதி ஆவணம்

Step 12: கடைசியாக இடம், Captcha போன்றவற்றை Type செய்து Submit என்பதை அழுத்தவும். 

நீங்கள் Submit செய்வதற்கு முன்பு Enter செய்த தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

Now Click Submit

Step 13: பிறகு இறுதியாக ஒரு Reference Number வரும். அதை குறித்துக்கொள்ள வேண்டும்.

Reference Number For Voter ID Name Change

இந்த எண்ணை கொண்டு உங்களின் விண்ணப்பத்தின் நிலையை (Status) அறியலாம்.

 இன்று நீங்கள் Voter ID Card இல் பெயரை எவ்வாறு திருத்தம் செய்வது என்று கற்றுக்கொண்டீர்கள். நீங்கள் வாக்காளர் அட்டையில் எதை மாற்ற வேண்டும் என்றாலும் இந்த வழிமுறையை பயன்படுத்தலாம். இந்த கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். 

இதை பற்றிய சந்தேகங்களுக்கு கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest