How to Download Voter ID Card Online: e-EPIC Card Download
உங்களின் Digital Voter ID அல்லது e-Voter ID Card யை Download செய்ய விரும்புகிறீர்களா? அதை சுலபமாக நீங்களே செய்யலாம். உங்களின் மொபைல் போன் அல்லது மடிக்கணினியின் மூலம் சில நிமிடங்களில் டிஜிட்டல் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். இதற்கான முழு செயல்முறையை தேவையான படங்களுடன் பகிர்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு Election Commission of India (ECI) ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டையை PDF வடிவில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்க்கு கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய வாக்காளர்களுக்கு மட்டுமே இந்த வசதி வழங்கப்பட்டு இருந்தது. அதாவது புதியதாக பதிவு செய்யும் வாக்காளர்களுக்கு மட்டுமே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி இருந்தது. ஆனால் தற்போது அனைத்து வாக்காளர்களும் பதிவிறக்கம் செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது.
Authority | Election Commission of India |
Service Category | e-Voter Card Download |
Cost for Download | Free |
Download Website | https://www.nvsp.in/ |
Other Names | e-EPIC Card, Digital Voter Card, e-Color Voter ID, |
Toll-free Number | 1800111950 |
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை என்றால் என்ன?
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை என்பது, ஒவ்வொரு வாக்காளரும் தங்களின் வாக்காளர் அட்டையை மின்னணு வடிவில் (e-Voter Card) பதிவிறக்கம் செய்வதாகும். இது பார்ப்பதற்கு அசல் வாக்காளர் அடையாள அட்டையை போலவே வண்ணமயமாக இருக்கும். இதனை டவுன்லோடு செய்யும்போது PDF வடிவில் இருக்கும். பதிவிறக்கம் செய்தபின் மொபைல் போனில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் அல்லது Print எடுத்து லேமினேஷன் செய்துகொள்ளலாம்.
டிஜிட்டல் வாக்காளர் அட்டையில் என்னென்ன தகவல்கள் இருக்கும்?
ஒரு அசல் வாக்காளர் அடையாள அட்டையில் என்னென்ன தகவல்கள் இருக்குமோ அவை அனைத்தும் இந்த இ-வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் இருக்கும். அவை கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
- வாக்காளர் அடையாள அட்டை எண் (Voter ID Number)
- வாக்காளரின் புகைப்படம் (Elector Photo)
- வாக்காளரின் பெயர் (Name of Elector)
- தந்தை பெயர் ( Name of Father)
- பிறந்த தேதி (Date of Birth)
- முகவரி (Address)
- QR Code
- பதிவிறக்கம் செய்த நாள் (Download Date)
Steps to Download Voter ID Card Online
பின்வரும் படிகளை பின்பற்றி உங்களின் e-Voter ID Card யை Download செய்துகொள்ளலாம்.
Step 1: முதலில் https://www.nvsp.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 2: Login / Register என்பதை தேர்வு செய்க.
Step 3: உங்களின் User Name மற்றும் Password யை உள்ளிட்டு Login செய்யவும். ஒருவேளை உங்களுக்கு இந்த இணையதளத்தில் கணக்கு இல்லையென்றால், Dont have account, Register as a new user என்பதை கிளிக் செய்து கணக்கை உருவாக்கவும்.
Step 4: E-EPIC Download என்பதை கிளிக் செய்யவும்.
Step 5: உங்களின் EPIC அல்லது Voter ID Number யை Enter செய்து Serach செய்யவும்.
Step 6: இப்பொழுது வாக்காளரின் தகவல்களை வரும். அதற்க்கு கீழே உள்ள Send OTP என்பதை கிளிக் செய்யவும்.
Step 7: உங்களின் மொபைல் எண்ணிற்கு பெறப்பட்ட OTP யை Enter செய்து Verify செய்யவும்.
Step 8: OTP யை Verify செய்த பிறகு Captcha வை Type செய்து Download e-EPIC என்ற பட்டனை அழுத்தவும். இப்பொழுது உங்களின் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை PDF வடிவில் Download ஆகும்.
குறிப்பு:
நீங்கள் ஆன்லைன் மூலம் வாக்காளர் அட்டையை பதிவிறக்கம் செய்ய Voter Card இல் மொபைல் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும்.
உங்களின் மொபைல் எண் ஒன்றிற்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டையுடன் பதிவு செய்திருந்தால், உங்களால் பதிவிறக்கம் செய்ய முடியாது. அதாவது உங்களின் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள எண்ணிற்கும், உங்களின் மொபைல் எண் பதிவு செய்திருந்தால் பதிவிறக்கம் செய்ய முடியாது. ஒரு மொபைல் எண் ஒரு வாக்காளர் அடையாள அட்டைக்கு மட்டுமே பதிவு செய்திருக்க வேண்டும்.
நீங்கள் மொபைல் நம்பரை வாக்காளர் எண்ணுடன் பதிவு செய்ய அல்லது ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண்ணை மாற்ற How to Link Mobile Number with Voter ID என்ற கட்டுரையை காணவும்.