What is EPIC Number in Voter ID Card: வாக்காளர் அட்டை
வாக்காளர் அடையாள அட்டையில் EPIC Number என்றால் என்ன? உங்களின் EPIC Number யை நம்பரை ஆன்லைன் மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பது? போன்றவற்றை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
18 வயது நிறைவடைந்த அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த வாக்காளர் அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகிறது. இதை இந்தியா முழுவதும் அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தலாம்.
Voter ID Card ஆனது ஊராட்சி தேர்தல், நகர தேர்தல், மாநில மற்றும் தேசிய தேர்தல்களில் தங்களின் வாக்குகளை போட அனுமதிக்கிறது.
இப்பொழுது வரும் டிஜிட்டல் ஓட்டர் ஐடி கார்டில் EPIC என்ற Number இடம் பெற்றிருக்கும். பழைய ஓட்டர் ஐடி கார்டுகளில் வேறுவிதமான வடிவில் எண்கள் இருக்கும். இதை பற்றிய விவரங்களை இதில் காணலாம்.
Table of Contents
What is EPIC Number in Voter ID Card
EPIC Number என்பது Electors Photo Identification Card ஆகும். இதை தமிழில் வாக்காளர்கள் புகைப்பட அடையாள அட்டை என்று அழைக்கலாம்.
நீங்கள் இதை குழப்பிக்கொள்ள தேவையில்லை. இந்த EPIC நம்பர் ஆனது ஓட்டர் ஐடி நம்பராகும். ஓட்டர் ஐடி எண்ணும் EPIC எண்ணும் ஒன்றாகும்.
இதற்கு முன்பு இருக்கும் பழைய வாக்காளர் அடையாள அட்டைகளில் 14 இலக்க வாக்காளர் அடையாள எண் இருக்கும். ஆனால் இப்பொழுது வரும் புதிய Digital Voter ID Card களில் 10 இலக்க EPIC Number யை கொண்டிருக்கும்.
மேலும் படிக்க: How to Change Name in Voter id Card Online
How to Find EPIC Number in Online
தற்போது வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் Digital Voter ID Card வழங்கப்படுகிறது. அதில் EPIC எண் அச்சடிக்கப்பட்டிருக்கும். ஆனால் பழைய வாக்காளர் அட்டையில் நீண்ட 14 இலக்க வாக்காளர் எண் கொண்டிருக்கும். அத்தகைய வாக்காளர்கள் தங்களுக்கான புதிய EPIC எண்ணை எவ்வாறு ஆன்லைன் மூலம் கண்டுபிடிப்பது என்பதை பற்றி அறிந்துகொள்வது அவசியமாகும்.
அதற்கான செய்முறை இங்கே:
Step 1: https://electoralsearch.in/ என்ற இணையதளதளத்திற்கு செல்லவும்.
Step 2: உங்களின் Name, Age or Date of Birth, Father / Husband Name, Gender, State, District, Assembly Constituency போன்ற தகவல்களை Enter செய்யவும்.
Step 3: அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட பிறகு Search என்ற பட்டனை அழுத்தவும்.
Step 4: இப்பொழுது உங்களின் EPIC Number மற்றும் மற்ற தகவல்கள் தெரிவதை காண்பீர்கள்.
குறிப்பு:
நீங்கள் உங்களின் தகவல்களை Enter செய்யும்போது Voter ID Card இல் இருப்பதை போன்று உள்ளிட வேண்டும். ஒருவேளை நீங்கள் எழுத்து பிழையோடு Enter செய்தால், உங்கள் Voter Number தேடல் முடிவுகளில் தோன்றாமல் போகும்.
How to Find EPIC Number in Voter Helpline Mobile App
நீங்கள் Mobile App மூலமாகவும் உங்களின் EPIC எண்ணை தெரிந்துகொள்ளலாம். அதற்கான செயல்முறைகள் இங்கே:
Step 1: உங்களின் ஸ்மார்ட் போனில் Voter Helpline என்ற செயலியை Download செய்யவும்.
Step 2: Search Your Name in Electoral Roll என்ற தேடல் பெட்டியை கிளிக் செய்க.
Step 3: அதில் Search by Details என்பதை தேர்வு செய்க.
Step 4: உங்களின் பெயர், தந்தையின் பெயர் போன்ற கேட்கப்பட்ட தகவல்களை நிரப்பவும். பிறகு Search என்ற பட்டனை அழுத்தவும்.
Step 5: இப்பொழுது உங்களின் Voter ID Card பற்றிய அனைத்து தகவல்களும் தெரிவதை காணலாம். தேவைப்பட்டால் Download என்பதை அழுத்தி பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும் படிக்க: How to Apply for Voter ID Card Online
முடிவுரை
நீங்கள் இன்னும் பழைய வாக்காளர் அடையாள அட்டையை தான் வைத்துள்ளீர்கள் என்றால், புதிய டிஜிட்டல் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது நீங்கள் ஏதேனும் திருத்தம் செய்தாலும் டிஜிட்டல் வாக்காளர் அட்டை வந்துவிடும்.
இந்த கட்டுரையில் EPIC நம்பர் என்றால் என்ன மற்றும் அதை இணையதளம், மொபைல் செயலி மூலமாக எவ்வாறு தெரிந்துகொள்வது போன்ற தகவல்களை தெரிந்துகொண்டீர்கள். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் கருத்துகளை கீழே உள்ள Comment பிரிவில் பதிவிடவும்.