How to Search Your Name in Voter List Online

இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலை வெளியிடும். அந்த பட்டியலில் உங்களின் பெயர் உள்ளதா என்பதை Online மூலமாக Check செய்து கொள்ளலாம். Voter List -ல் உங்களின் பெயர் இருப்பதை எப்படி தெரிந்துகொள்வது என்பதை பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

Voter ID Card அல்லது Election Card என்பது தகுதியுள்ள இந்திய குடிமகனுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகும். இந்த அடையாள அட்டை, வாக்காளர் பட்டியலின் துல்லியத்தை குறிப்பிடுவதற்கும், தேர்தல் மோசடிகளை தடுக்கவும் உதவுகிறது.

Table of Contents

What is Voter List 

வாக்காளர் பட்டியல் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் தொகுக்கப்பட்ட விரிவான பட்டியல் ஆகும். இந்த வாக்காளர் பட்டியலில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் உள்ள வாக்காளர்களின் தகவல்கள் இருக்கும். அதாவது வாக்காளர்களின் பெயர்கள், தொகுதி எண், வரிசை எண் போன்ற தகவல்கள் இருக்கும். 

Read  How to Apply for a New Voter ID Card Online

தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வருடமும் Voter List -யை தங்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடும். தேர்தல் நேரங்களில் Booth Slip -யை தொலைத்துவிட்டாலும், Online மூலம் உங்களின் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.  இதனால் Booth Slip இல்லாவிட்டாலும், வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயரை தேட வேண்டிய அவசியம் இருக்காது.

மேலும் படிக்க – NVSP Portal Registration

Benefits of Online Voter List

இணையதள வாக்காளர் பட்டியலின் மூலம் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.

  • உங்களின் Voter ID Card -யை நீங்கள் தொலைத்துவிட்டால், Online மூலம் உங்களின் Voter ID Number மற்றும் பிற தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.
  • தேர்தலின் போது Booth Slip -யை தொலைத்துவிட்டால், வரிசை எண் மற்றும் வாக்களிக்கும் இடம் போன்றவற்றை Online-ல் பார்த்து கொள்ளலாம்.
  •  நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, எந்த நேரத்திலும் Online வாக்காளர் பட்டியலில் தேடலாம்.
  • வாக்காளர் பட்டியலை ஆன்லைனில் தேடுவதற்கு ஒரு ஸ்மார்ட் போன் அல்லது கணினி இருந்தாலே போதுமானது ஆகும்.

மேலும் படிக்க – How to Apply for Voter ID Card Online

Read  How to Download Voter List in Online 2023

How to Search Your Name on the Voter List ?

வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயரை கீழ்கண்ட செயல்முறையின் மூலம் கண்டுபிடிக்கலாம்.

Step 1: NVSP என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: Search in Electoral Roll என்பதை கிளிக் செய்யவும். இப்போது அடுத்த திரையில் electoral search என்ற இணையதளம் திறக்கும்.

Select Search in Electoral Roll- Voter List

ஆன்லைன் Voter List இல் உங்களின் Name யை இரண்டு வழிகளில் Search செய்யலாம்.

  1. உங்களின் EPIC எண்ணை கொண்டு தேடலாம்.
  2. உங்களின் தகவல்களை கொண்டு தேடலாம்.

 EPIC எண்ணை கொண்டு தேடுதல்:

Step 3: Search by EPIC Number என்பதை தேர்வு செய்யவும்.

Select Search by EPIC Number - Voter List

Step 4: EPIC No என்னும் இடத்தில் உங்களின் Voter ID எண்ணை கொடுக்கவும்.

Step 5: பிறகு State என்னும் இடத்தில் மாநிலத்தை தேர்வு செய்து, Search என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

View your details

Step 6: தற்போது வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களின் தகவலும் தெரியும்.

தகவல்களை கொண்டு தேடுதல்: 

Read  How to Download Voter ID Card Online: e-EPIC Card Download

Step 7: Search by Details என்பதை தேர்வு செய்யவும்.

Step 8: இந்த பக்கத்தில் உங்களின் தகவல்களை கொடுக்க வேண்டும். அதாவது Name, Age, Father Name, Gender, State, District, Assembly Constituency போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.

Select Details Search

Step 9: Search என்பதை கிளிக் செய்தால், நீங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பல முடிவுகள் வரலாம். அவற்றில் உங்களுடைய சரியான Voter Number -யை கண்டுபிடித்து கிளிக் செய்ய வேண்டும்.

List details

Step 10: தற்போது உங்களின் அனைத்து தகவல்களும் தோன்றுவதை காணலாம்.

View your Voter information

உங்களின் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால், அதே நேரத்தில் Voter ID எண்ணையும் மறந்துவிட்டால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இந்த செயல்முறையை பயன்படுத்தி உங்களின் Voter ID எண்ணை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தாலுக்கா அலுவலகத்தில் உங்களின் வாக்காளர் அடையாள எண்ணை சொல்லி அதை உடனே Print எடுத்துக்கொள்ளலாம். 

மேலும் படிக்க – How to Voter ID Verification in Online

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *