How to Download Voter List in Online 2023
உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்வது மிகவும் எளிதாகும். இதற்காக நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய தேவையில்லை. நீங்கள் இருக்கக்கூடிய பகுதியின் Voter List -யை Online மூலமாக PDF வடிவில் Download செய்து அதில் உங்களின் பெயர் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளலாம். அதை பற்றிய விவரங்களை இந்த கட்டுரையில் காணலாம்.
நீங்கள் வாக்காளர் அட்டையை பெற்றிருந்தாலும், வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருந்தால் மட்டுமே தேர்தலில் உங்களால் வாக்களிக்க முடியும். எனவே வாக்காளர் நீங்கள் வாக்களிக்க வேண்டுமென்றால், வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்க வேண்டும்.
ஒரு சில காரணங்களால் உங்களின் பெயர் Voter List இல் இருந்து விடுபட்டு இருக்கலாம். அவ்வாறு விடுபட்டு இருந்தால் அதை நீங்களே Check செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிக்கு புகார் தெரிவிக்கலாம்.
சரி இப்போது வாக்காளர் பட்டியல் என்றால் என்ன என்பதை தெரிந்துகொண்டு, அதை ஏன் பதிவிறக்கம் செய்ய வேண்டும் மற்றும் எப்படி Download செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
Table of Contents
What is Voter List?
Voter List என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் உறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் ஆகும். இந்த வாக்காளர் பட்டியல் இந்தியா முழுவதும் மாநிலம், மாவட்டம், நகரம், தொகுதி, கிராமம் மற்றும் தெரு வாரியாக பிரிக்கப்பட்டிருக்கும். இது அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்காளர்களை எளிதில் அடையாளம் காண உதவுகிறது.
மேலும் Voter List -ல் உள்ளவர்கள் மட்டுமே தேர்தலின் போது வாக்களிக்க முடியும். தேர்தல்களின் போது போலியான வாக்காளர்களை கண்டறிவதற்கும், அதேநேரத்தில் உண்மையான வாக்காளர்களை உறுதிப்படுத்தவும் வாக்காளர் பட்டியல் பயன்படுகிறது.
வாக்காளர் பட்டியலை ஏன் பதிவிறக்கம் செய்ய வேண்டும் ?
நாம் ஏன் Voter List -யை Download செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா ?
இந்திய தேர்தல் ஆணையம் அவ்வப்போது Voter List -யை புதுப்பிக்கிறது. அப்படி புதுப்பிக்கும்போது தகவல்களில் முரண்பாடுகள் ஏதேனும் இருந்தால், அத்தகைய வாக்காளர்களின் பெயர்கள் Voter List -ல் இருந்து நீக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் இருந்து கீழ்கண்ட காரணங்களால் பெயர் நீக்கப்படுகிறது.
- வாக்காளரின் மரணம்
- போலி வாக்காளர்கள்
- தவறான விவரங்கள்
மேற்கூறிய காரணங்கள் அல்லது தவறுதலாக வாக்காளர் பட்டியலில் இருந்து, உங்களின் பெயரை நீக்கி இருந்தால் தேர்தல்களில் உங்களால் வாக்களிக்க முடியாது. ஆகவே வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயரை தேடுவது முக்கியமாகும்.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை இணையத்தளத்தில் பராமரிக்கிறது. மேலும் Voter List யை Online -ல் இருந்து Download செய்யும் வசதியையும் வழங்குகிறது. நீங்கள் பதிவிறக்கம் செய்யும் வாக்காளர் பட்டியல் PDF வடிவில் இருக்கும்.
பதிவிறக்கம் செய்யும் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயரையும் மற்றும் உங்களின் குடும்பத்தினரின் பெயரையும் Check செய்து கொள்ளலாம். உங்களின் வாக்காளர் அட்டையை ஆன்லைன் மூலம் தேட How to Find Your Voter ID in Online என்ற பதிவை காணவும்.
How to Download Voter List in Online 2023
நீங்கள் வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால் கீழ்கண்ட செயல்முறையை பின்பற்ற வேண்டும்.
Step 1: முதலில் NVSP என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
Step 2: Download Electoral Roll PDF என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 3: இந்த பக்கத்தில் மாநிலத்தை தேர்வு செய்து Go என்பதை கிளிக் செய்க.
Step 4: தற்போது மாநில தேர்தல் ஆணைய இணையதளத்திற்கு Redirect ஆகும். பிறகு Special Summary Revision என்பதை கிளிக் செய்க.
Step 5: முதலாவதாக உள்ள Final Publication of Electoral Roll – 2023 என்பதை தேர்வு செய்யவும்.
Step 6: இந்த பக்கத்தில் உங்களின் மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதியை தெரிவு செய்து சமர்ப்பிக்க என்பதை கிளிக் செய்க.
Step 7: தற்போது நீங்கள் தெரிவு செய்த சட்டமன்றத்தின் அனைத்து பகுதிகளின் Voter List -ம் தோன்றுவதை காண்பீர்கள். பாகம் எண்ணை (Part Number) கொண்டு உங்களின் தெருக்கான வாக்காளர் பட்டியலை எளிதில் கண்டுபிடிக்கலாம். உங்களின் பகுதிக்கான வாக்காளர் பட்டியலை கண்டுபிடித்த பின்பு, அதன் மேல் கிளிக் செய்ய வேண்டும்.
Step 8: இதில் கீழே உள்ள Verification Code -யை Enter செய்து சமர்ப்பிக்க என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் ஒவ்வொரு முறையும் பதிவிறக்கம் செய்யும்போது இந்த Verification Code யை உள்ளிட வேண்டியதிருக்கும்.
Step 9: நீங்கள் தெரிவு செய்த வாக்காளர் பட்டியல் PDF வடிவில் தோன்றும். உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இவ்வாறு ஒவ்வொரு முறையும் வாக்காளர் பட்டியலை வெளியிடும் அதில் உங்களின் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் எங்கும் அலைய வேண்டிய தேவையில்லை. மேற்கூறிய செயல்முறைகளில் அதை Online மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். நீங்கள் புதியதாக வாக்காளர் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை Apply for New Voter ID Card in Online கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.