Voter ID

How to Find My Polling Booth Tamil Nadu: வாக்குச்சாவடியை எவ்வாறு கண்டறிவது

வாக்கு செலுத்துவதற்கான உங்களின் Polling Booth எது என்று உங்களுக்கு தெரியவில்லையே? கவலை வேண்டாம். வெறும் சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் அதை தெரிந்துகொள்ளலாம். 

நீங்கள் சட்டமன்ற தேர்தல் அல்லது உள்ளாட்சி தேர்தல் போன்ற எந்த தேர்தலாக இருந்தாலும், உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் அதாவது Polling Booth இல் தான் வாக்களிக்க முடியும். மற்ற வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியாது. ஏனெனில் உங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மட்டுமே, உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கும். 

தேர்தலில் வாக்களிப்பதற்கு முன் வாக்காளர்களுக்கு Booth Slip என்ற வாக்குச்சாவடி சீட்டை கொடுப்பார்கள். அதில் வாக்கு செலுத்துபவர்கள் வாக்காளர் எண், பெயர், வரிசை எண் மற்றும் வாக்குச்சாவடியின் பெயர் போன்றவை இடம் பெற்றிருக்கும். அந்த சீட்டை வாக்குச்சாடிக்கு கொண்டு செல்லும்போது, உங்களின் வாக்குச்சாவடி மற்றும் Voter List இல் உங்களின் வரிசை எண்ணை கண்டுபிடிப்பதற்கு எளிதாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் விரைவாக வாக்களித்துவிட்டு வரலாம்.

ஒருவேளை உங்களிடம் Booth Slip இல்லை என்றால் வாக்களிக்க தாமதம் ஏற்படலாம். இதை தடுக்க உங்களிடம் Booth Slip இல்லையென்றாலும், உங்களின் வாக்குச்சாவடி மற்றும் வரிசை எண் போன்றவற்றை தெரிந்துகொண்டு போனால் காத்திருக்காமல் விரைவாக வாக்களிக்கலாம்.

Read  How to Change Name in Voter id Card Online

ஆனால் அதை எப்படி தெரிந்துகொள்வது என்று கேட்கிறீர்களா? இதற்க்கு நெட் வசதியுடன் கூடிய ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதுமானது ஆகும். சரி அதை எப்படி தெரிந்துகொள்வது என்று பார்க்கலாம்.

புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க How to Apply for a New Voter ID Card Online என்ற கட்டுரையை படிக்கவும்.

How to Find My Polling Booth Tamil Nadu

Step 1: உங்களின் மொபைலில் உள்ள Chrome Browser இல் https://www.nvsp.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

Step 2: அதில் Search in Electoral Roll என்பதை அழுத்தவும்.

Search in Electoral Roll

Step 3: Search by EPIC No என்பதை தேர்வு செய்து, உங்களின் EPIC Number அதாவது உங்களின் Voter ID Number, மாநிலம் போன்றவற்றை Type செய்து Search செய்யவும்.

ECI-Voter-Information

Step 4: View Details என்பதை கிளிக் செய்யவும்.

Voter ID Details

Step 5: இப்பொழுது உங்களின் பெயர், வாக்காளர் அட்டை எண், வரிசை எண் மற்றும் Polling Station அல்லது Polling Booth போன்ற தகவல்கள் இருக்கும். 

Read  NVSP Portal Registration: Voter ID Portal Login & Reset Password

How to Find My Polling Booth Tamil Nadu

இந்த பதிவில் உங்களின் வரிசை எண் மற்றும் வாக்குச்சாவடியை ஆன்லைன் மூலம் எப்படி தெரிந்துகொள்வது என்று அறிந்துகொண்டீர்கள். இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimized by Optimole