Voter ID

How to Link Aadhaar with Voter ID in Online Tamil: Full Guide

உங்களின் வாக்காளர் அடையாள அட்டையை வீட்டில் இருந்தவாறே ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமா? உங்களின் பதில் ஆம் என்றால், இந்த கட்டுரை உங்களுக்கானது தான். ஆன்லைன் மூலம் Voter ID கார்டை Aadhaar Number உடன் Link செய்வதற்கான முழு செயல்முறையையும் தகுந்த படங்களுடன் உங்களுக்கு விளக்குகிறேன்.

வாக்காளர் அட்டையை ஏன் ஆதாருடன் இணைக்க வேண்டும்?

வாக்காளர் அடையாள அட்டையானது, தேர்தல்களில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. இந்த வாக்களிக்கும் உரிமையின் மூலம் தான் ஒரு நாட்டின் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில் சில முக்கிய சீர்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த சீர் திருத்தங்களில் ஒன்று தான் வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதாகும்.

போலி வாக்காளர்கள் கள்ள ஓட்டுக்களை போடுவதின் மூலம், அது ஒரு ஜனநாயகத்தையே சிதைக்கிறது. எனவே போலி வாக்காளர்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனில் ஒரே நபர் பல்வேறு தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்திருப்பதை இந்த நடைமுறையின் மூலம் தடுக்க முடியும். எனவே அனைவரும் தங்களின் வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக படிவம் 6B (Form 6B) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படிவத்தை பயன்படுத்தி Voter ID யை Aadhaar Number உடன் Link செய்யலாம். இவ்வாறு லிங்க் செய்வதற்கான வசதி ஆன்லைன் மூலமாகவே வழங்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே கணினி அல்லது மொபைல் மூலமாக லிங்க் செய்ய முடியும். இதற்கான முழு செயல்முறையையும் உங்களுக்கு விளக்குகிறேன்.

சரி வாருங்கள் ஆன்லைன் மூலம் எப்படி லிங்க் செய்வது என்று பார்ப்போம்.

வாக்காளர் அட்டையை ஆதாருடன் லிங்க் செய்வதன் சுருக்கம்:

DepartmentElection Commission Of India
IntentLink Voter ID with Aadhaar Card
Name of Form6B
Needed DocumentsAadhaar Card, Voter ID Card, Mobile Number
Apply ModeOnline & Offline
Starting Date01/08/2022
Ending Date31/03/2023
Website Portalwww.voterportal.eci.gov.in
Read  How to Delete Voter ID From Voter List in Online

How to Link Aadhaar with Voter ID Online (Form 6B)

நீங்கள் வாக்காளர் அட்டையை ஆதாருடன் லிங்க் செய்வதற்கு, முதலில் Voter Portal இல் கணக்கை திறக்க வேண்டும். கணக்கை திறப்பது என்பது பெரிய விஷயமில்லை. ஒரு மொபைல் எண் அல்லது ஈமெயில் கொண்டு கணக்கை திறந்துவிடலாம்.

Voter Portal இல் நீங்கள் ஏற்கனவே கணக்கு வைத்திருந்தால் நேரடியாக Login செய்யலாம். ஒருவேளை கணக்கு இல்லையென்றால் பின்வரும் செயல்முறையை பின்பற்றி கணக்கை திறக்கலாம்.

Create an Account in Voter Portal 

Step 1: முதலில் https://voterportal.eci.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: அதில் Create an Account என்பதை கிளிக் செய்க.

Create Account in Voter Portal

Step 3: உங்களின் Email Id அல்லது Mobile Number யை Enter செய்து Send OTP என்பதை அழுத்தவும்.

Enter Mobile Number in Voter Portal

Step 4: இப்பொழுது நீங்கள் Enter செய்த மொபைல் எண்ணிற்கு 6 இலக்க OTP Number வரும். அதை உள்ளிட்டு Verify என்பதை கிளிக் செய்யவும்.

OTP Verification in Voter Portal

Step 5: தற்போது Password யை உருவாக்கும் பக்கம் திறக்கும். அதில் புதிய Password யை Enter செய்ய வேண்டும். நீங்கள் உருவாக்கும் கடவுச்சொல்லானது பெரிய எழுத்து, சிறிய எழுத்து, சிறப்பு எழுத்துக்கள், எண்கள் ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும். உதாரணமாக, PRaveen@7869 என்றவாறு இருக்க வேண்டும்.

பிறகு Terms of Services என்ற Check Box யை டிக் செய்து Create Account என்ற பட்டனை அழுத்த வேண்டும்.

Set Password in Voter Portal

Step 6: இப்பொழுது நீங்கள் Voter Portal க்கான கணக்கை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள். அதற்கான செய்தி திரையில் தோன்றும். தற்போது Welcome என்பதை கிளிக் செய்யவும்.

Welcome to the voter portal

Step 7: கிளிக் செய்த சிறிது நேரத்தில் Profile தகவல்களை Enter செய்வதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களின் பெயர், மாநிலம் மற்றும் பாலினம் ஆகியவற்றை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும். தற்போது Account யை உருவாக்கும் அனைத்து செயல்முறைகளும் முடிந்தது.

Voter Portal Profile Edit

Link Aadhaar With a Voter ID Card 

Step 8: கடைசியில் உள்ள Aadhaar Linkage என்பதை தேர்வு செய்யவும்.

voter to aadhaar link

Step 9: Let’s Start என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Read  How to Change Name in Voter id Card Online

voter card to aadhaar link

Step 10: இப்பொழுது உங்களுக்கு இரண்டு தேர்வுகள் தோன்றும். அதில் இரண்டாவதாக உள்ள YES I Have Voter ID Number என்பதை தேர்வு செய்யவும்.

voter card link to aadhaar number

Step 11: உங்களின் 10 இலக்க Voter ID Number யை Enter செய்யவும். இந்த Voter ID எண்ணை EPIC நம்பர் என்றும் கூறுவார்கள். Enter செய்த பிறகு Fetch Details என்பதை அழுத்தவும். நீங்கள் Enter செய்த வாக்காளர் எண், வாக்காளர் பட்டியலில் இருந்தால் Proceed என்ற பட்டன் தோன்றும். அந்த பட்டனை கிளிக் செய்யவும்.

Enter Voter ID Number for Link to aadhaar

Step 12: தற்போது உங்களின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து தகவல்களும் தோன்றும். அதில் கீழே உள்ள Save &Continue என்பதை அழுத்தவும்.

how to link voter id with aadhaar

Step 13: உங்களின் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிட்டு Send OTP என்பதை கிளிக் செய்க.

Voter Portal OTP Verification

Step 14: மொபைல் எண்ணிற்கு வரும் OTP Number யை உள்ளிட்டு Verify என்பதை அழுத்துக.

OTP Number Voter Card

Step 15: Details of Person for Form -6B என்ற பக்கம் தோன்றும். அதில் Yes, I Have Aadhaar Number என்பதை டிக் செய்யவும்.

தற்போது உங்களின் Aadhaar Number மற்றும் ஆதாரில் இருப்பதை போன்று பெயர் ஆகியவற்றை Enter செய்யவும். இதில் நீங்கள் பெயரை ஆங்கிலத்தில் Type செய்யும் போது, தமிழில் பெயர் தானாகவே தோன்றும். அது சரியாக இருந்தால் அப்படியே விட்டுவிடலாம்.

ஒருவேளை தமிழில் பெயர் தவறாக இருந்தால், அதை நீக்கிவிட்டு நீங்களே தமிழில் Type செய்ய வேண்டும். பெயரை தமிழில் Type செய்வதற்கு Google Inuput Tool அல்லது பிற Tools களை பயன்படுத்தலாம்.

பிறகு கடைசியாக இருக்கும் Save & Continue என்பதை அழுத்தவும்.

Form 6B - Voter to aadhaar link

Step 16: இப்பொழுது Declaration பக்கம் திறக்கும். அதில் தேதி மற்றும் பெயர் ஆகியவை ஏற்கனவே நிரப்பப்பட்டிருக்கும். Place என்ற இடத்தல் உங்கள் ஊரின் பெயரை Enter செய்யவும். பிறகு Save & Continue யை கிளிக் செய்யவும்.

voter to aadhaar link declaration

Step 17: பிறகு கடைசியாக Form 6B இன் முழு படிவம் தோன்றும். அதில் அனைத்து தகவல்களும் நிரப்பப்பட்டிருக்கும். அதை நீங்கள் ஒருமுறை சரிபார்த்துவிட்டு Submit என்பதை அழுத்தவும்.

Voter Portal Form 6B

Step 18: இப்பொழுது Congratulations! You have submitted your application for form-6B in electoral roll என்ற செய்தி தோன்றும். அவ்வளவு தான் நீங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கு வெற்றிகரமாக விண்ணப்பித்துவிட்டீர்கள். 

Read  NVSP Portal Registration: Voter ID Portal Login & Reset Password

How to Check Voter to aadhaar link status

திரையில் ஒரு Referance ID தோன்றும். மேலும் அது உங்களின் மொபைல் எண்ணிற்கும் SMS வழியாக அனுப்பி வைக்கப்படும். அந்த எண்ணை கொண்டு விண்ணப்பத்தை Track செய்யலாம்.

How to Track Status for Aadhaar to Voter ID Link Application

நீங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை இணைப்பதற்கு விண்ணப்பித்த பிறகு, அந்த விண்ணப்பத்தின் நிலையை அவ்வப்போது தெரிந்துகொள்ள முடியும். உங்களின் விண்ணப்பத்தை Approve செய்துவிட்டால் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுவிடும்.

அந்த விண்ணப்பத்தின் நிலையை எப்படி தெரிந்துகொள்வது என்று பார்ப்போம்.

Step 1: https://voterportal.eci.gov.in என்ற இணையதளத்தில் உங்களின் கணக்கை Login செய்யவும்.

Step 2: Track Status > Application என்பதை தேர்வு செய்க.

Step 3: அதில் Reference Number யை உள்ளிட்டு Track Your Status என்பதை கிளிக் செய்யவும்.

how to track voter to aadhaar linking status

Step 4: தற்போது உங்களின் விண்ணப்பத்தின் நிலையை காணலாம்.

Track aadhaar to voter link status

இதையும் படியுங்கள்:

முடிவுரை

இந்த பதிவில் வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் எவ்வாறு இணைப்பது என்பதற்கான முழு செயல்முறையையும் தெரிந்துகொண்டீர்கள். இதை நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இணைக்க முடியும். இதே போன்று உங்களின் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள எண்களையும் அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்க முடியும். இதில் சந்தேகம் ஏதேனும் இருப்பின் கீழே பதிவிடவும்.

Frequently Asked Questions (FAQ) 

வாக்காளர் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமா?

ஆம்.


வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைப்பதால் என்ன பயன்?

போலி வாக்காளர்களை தடுக்க முடியும்.


ஆதார் மற்றும் வாக்காளர் எண்ணை எந்த முறையில் இணைப்பது?

Online அல்லது Offline மூலமாக இணைக்கலாம்.


வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைக்க எந்த படிவத்தை நிரப்ப வேண்டும்?

படிவம் 6B (Form 6B).


வாக்காளர்களே மொபைல் அல்லது கணினி மூலம் இணைக்க முடியுமா?

நிச்சயமாக இணைக்கலாம்.


அருகில் உள்ள நெட் சென்டரில் இணைக்க முடியுமா?

முடியும்.


வாக்காளர் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?

வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) , ஆதார் அட்டை (Aadhaar Card) மற்றும் மொபைல் நம்பர் (Mobile Number).


ஓட்டர் கார்டை இணைக்கும் இணையதளம் என்ன?

https://voterportal.eci.gov.in


EPIC Number மற்றும் Voter ID Number ஆகிய இரண்டும் ஒன்றா?

ஆம். பழைய வாக்காளர் அடையாள எண் அதிக நீளம் கொண்டதாக இருக்கும். தற்போது புதிய 10 இலக்க வாக்காளர் எண்களாக வழங்கப்படுகிறது. இந்த புதிய எண்களை EPIC Number என்று கூறுவர். எனவே EPIC மற்றும் Voter Number ஆகிய இரண்டும் ஒன்றாகும்.


EPIC என்பதன் விரிவாக்கம் என்ன?

EPIC என்பதின் விரிவாக்கம் Election Photo Identity Card ஆகும்.


வாக்காளர் அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைக்க கடைசி நாள் எப்பொழுது?

கடைசி நாள்: 31/03/2023.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest