NVSP Portal Registration: Voter ID Portal Login & Reset Password
NVSP Portal-லில் Account-யை Registration செய்வதன் மூலம் அனைத்து வகையான Voter Service-களையும் Online மூலமாக பெற முடியும்.
இந்தியா பல மில்லியன் கணக்கான மக்கள் தொகையை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். மேலும் பன்முகத்தன்மையையும், எண்ணற்ற அரசியல் கட்சிகளையும் கொண்ட வலிமையான நாடாகும். தேர்தல்கள், இந்தியாவில் ஒரு சிக்கலான மற்றும் இன்றியமையாத அம்சமாகும். இந்தியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
தேர்தல்களில் வாக்களிக்க ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் உரிமையுண்டு. மேலும் வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் ஜனநாயக கடமையாகும்.
தேர்தல்களின் போது ஏராளமான மோசடிகள் நடைபெறுவதை தடுப்பதற்கு இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID Card) அறிமுகப்படுத்தியது. இந்த Voter ID Card-யை வாக்களிப்பதற்கு அடையாள அட்டையாக பயன்படுத்தப்படுகிறது.
Table of Contents
NVSP Registration
இணைய சேவை இல்லாத காலத்தில் புதிய Voter ID Card-க்கு Apply செய்தல் மற்றும் ஏற்கனவே இருக்கும் Voter ID Card-ல் திருத்தங்கள் செய்தல் போன்றவற்றை Offline-ல் தான் செய்ய முடியும். அதாவது அதற்கான Form-யை நிரப்பி, தேவையான ஆவணங்களுடன் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் இந்த நடைமுறை மக்களுக்கு தேவையில்லாத அலைச்சல்களையும், கால விரயத்தையும் ஏற்படுத்தியது. மேலும் தேர்தல் அலுவலர்களுக்கு விவரங்களை சரிப்பார்ப்பதற்கான வேலைப்பளுவும் அதிகரித்தது.
இணைய சேவை வந்த பிறகு இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) NVSP என்ற National Voter Service Portal என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இந்த மூலமாக அனைத்து வாக்காளர் சேவைகளையும் Online மூலமாகவே பெற முடிந்தது. அதாவது புதிய Voter ID Card -க்கு Apply செய்தல் மற்றும் அதில் திருத்தங்கள் செய்தல் போன்றவற்றை Online மூலமாக செய்ய முடியும்.
இதற்க்கு முன்பு வரை, வாக்காளர்கள் NVSP Portal-லில் நேரடியாக புதிய Voter ID Card -க்கு Apply செய்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல் போன்றவைகளை மேற்கொண்டிருக்கலாம்.
ஆனால், தற்போது NVSP Portal -லில் சில மாற்றங்களுடன் புதிய Version-யை Update செய்துள்ளனர். இதற்க்கு மேல் வாக்காளர்கள் அனைத்து வாக்காளர் சேவைகளையும் (Voter Service) ஆன்லைனில் பெற NVSP Portal -லில் Account-யை Registration செய்ய வேண்டும்.
How to Register Account in NVSP Portal
கீழ்கண்ட செயல்முறைகளின் மூலம் NVSP Portal-லில் Account-யை Register செய்யலாம்.
Step 1: முதலில் NVSP Portal என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தை அணுக வேண்டும்.
Step 2: Login / Register என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இப்பொழுது Login பக்கம் திறக்கும். அதில் Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: தற்போது Account-யை Register செய்யும் பக்கம் Open ஆகும். அதில் முதலில் உங்களின் மொபைல் எண்ணை உள்ளிட்டு Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 5: இப்போது உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை இதில் Enter செய்து Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 6: அதற்கு கீழே I have EPIC number மற்றும் I don’t have EPIC number என்று இரண்டு Option இருக்கும்.
Step 7: உங்களிடம் Voter ID Card Number இருந்தால் I have EPIC number என்பதை தேர்வு செய்யவும்.
ஒருவேளை, உங்களிடம் Voter ID Card Number இல்லையென்றால் I don’t have EPIC number என்பதை தேர்வு செய்யவும்.
பெரும்பாலும் அனைவருக்கும் Voter ID Card நம்பர் இருக்கும் என்பதால் முதலில் உள்ள I have EPIC number என்பதை தேர்வு செய்யவும்.
Step 8: EPIC Number, Email ID மற்றும் Password போன்றவற்றை Enter செய்து Register என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
தற்போது NVSP Portal-லில் உங்களின் கணக்கு Register ஆகிவிடும்.
குறிப்பு:
ஒரு மொபைல் எண்ணிற்கு ஒரு கணக்கை மட்டுமே Open செய்ய இயலும்.
Login NVSP Account
நீங்கள் NVSP-ல் Account-யை Register செய்த பின்பு அதை Login செய்யலாம்.
NVSP கணக்கை Username மற்றும் Password-யை கொடுத்து Login செய்ய வேண்டும்.
Username என்பது Mobile Number, EPIC மற்றும் Email Id இவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். Password என்பது நீங்கள் Register செய்யும்போது எந்த Password-யை கொடுத்தீர்களோ அதை கொடுத்து Login என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
NVSP Portal – Voter Services
NVSP கணக்கை Login செய்தவுடன் அதன் Home Page திறக்கும். கீழ்கண்ட சேவைகளை NVSP Portal மூலம் பெறலாம்.
- புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல் (Apply for New Voter ID)
- சுய விவரங்கள் மற்றும் முகவரியை திருத்துதல் ( Personal Details & Address Correction)
- வேறொரு தொகுதிக்கு இடம் பெயர்தல் (migration to another place)
- வாக்காளர் பட்டியலில் தேடுதல் (search in electoral roll)
- படிவத்தின் நிலையை கண்காணித்தல் (track application status)
- வாக்காளர் பட்டியலை பதிவிறக்கம் செய்தல் (Download Electoral)
- வாக்காளர் நீக்குதல் (Deletion of Enrollment)
How to Reset/Forgot Password – NVSP Portal
National Voter Service Portal கணக்கின் Password-யை மறந்துவிட்டால் அதை Reset செய்துகொள்ளலாம். அதற்கான செயல்முறைகளை கீழே தரப்பட்டுள்ளது.
Step 1: Login பக்கத்தில் உள்ள Forgot Password என்பதை கிளிக் செய்யவும்.
Step 2: தற்போது Reset Password என்னும் பக்கம் திறக்கும். அதில் உங்களின் மொபைல் எண்ணை Enter செய்து Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: நீங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை இதில் உள்ளிட்டு Verify என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 4: பிறகு புதிய Password-யை Enter செய்து Reset Password என்பதை கிளிக் செய்தால், Password Change ஆகிவிடும்.
Benefits
வாக்காளர் சேவையை (Voter Service) இணையம் மூலம் பெறுவதால் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.
- விண்ணப்பதாரர்களுக்கு புதிய Voter ID அட்டைக்கு விண்ணப்பித்தல் மற்றும் திருத்தங்கள் செய்வதற்கு தேவையற்ற அலைச்சல் இருக்காது.
- வாக்காளர் சேவையை இணையம் மூலமாக பெறுவதற்கு கணினி அல்லது ஆன்ராய்டு மொபைல் இருந்தால் போதுமானது.
- விண்ணப்பத்தின் நிலையை ஆன்லைன் மூலம் கண்காணிக்க முடியும்.
மேலும் படிக்க – How to Apply Voter ID Card Online