Voter ID

How to Apply for a New Voter ID Card Online

Voter ID Card அல்லது EPIC (Electors Photo Identity Card) என்று அழைக்கப்படும் வாக்காளர் அடையாள அட்டையானது, ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. 18 வயது நிரம்பிய அனைத்து இந்திய குடிமக்களும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க நீங்கள் எங்கும் சென்று அலைய வேண்டிய தேவையில்லை. நீங்களே வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் மூலம் புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

அவ்வாறு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை? எந்த இணையதளத்தில் விண்ணப்பிப்பது? மற்றும் எவ்வாறு Apply செய்வது போன்ற பல்வேறு விவரங்களை விரிவாக இந்த பதிவில் காணலாம்.

வாக்காளர் அடையாள அட்டை 

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission Of India) வாக்களிப்பதற்கு  தகுதியுள்ள ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குகிறது. சுதந்திரமான மற்றும் நியாயமான ஜனநாயக தேர்தல்களின் போது ஆள்மாறாட்டம் மற்றும் மோசடிகளை தடுப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும். 

மேலும் இந்த வாக்காளர் அட்டையை நாடு முழுவதும் ஒரு அடையாள சான்றாகவும் பயன்படுத்தலாம். வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் Voter ID Card-க்கு Apply செய்து வாக்காளர் அடையாள அட்டையை பெற வேண்டும். தேர்தல்களின் போது ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

Voter ID Card-ல் என்னென்ன விவரங்கள் இருக்கும்?

Voter ID Card என்பது இந்திய அரசாங்கத்தால் தனிமனித அடையாளமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணம் ஆகும். ஒரு வாக்காளர் அடையாள அட்டையில் கீழ் காணும் தகவல்களை கொண்டிருக்கும்.

  • தனித்துவ அடையாள எண் (Unique ID Number)
  • வாக்காளரின் புகைப்படம் (Electors Photo)
  • உறவினரின் பெயர் (Relation Name)
  • இனம் (Gender)
  • பிறந்த தேதி (Date of Birth)
  • முகவரி (Address)
  • தொகுதியின் தகவல்கள் (AC Details)
Read  How to Delete Voter ID From Voter List in Online

Eligibility

நீங்கள் புதிய Voter ID Card -க்கு Apply செய்யும்போது கீழ் காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரருக்கு நிரந்தர முகவரி இருக்க வேண்டும். 

Documents Required For New Voter ID Card

புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது கீழ்கண்ட ஆவணங்களை கொண்டிருக்க வேண்டும்.

  • வயதிற்கான சான்று (Age Proof)
  • முகவரி சான்று (Address Proof)
  • புகைப்படம் (Photography)

வயதிற்கான சான்றாக (Age Proof) ஏற்றுக்கொள்ள கூடிய ஆவணங்கள்:

  • Birth Certificate
  • Marksheet of Class 10 or 8 or 5
  • Indian Passport
  • PAN Card
  • Driving License
  • Aadhar Letter Issued by UIDAI

முகவரி சான்றாக (Address Proof) ஏற்றுக்கொள்ள கூடிய ஆவணங்கள்:

  • Indian Passport
  • Driving License
  • Bank/Kisan/Post Office Current Pass Book
  • Ration Card
  • Income Tax Assessment Order
  • Rent Agreement
  • Water Bill
  • Telephone Bill
  • Electricity Bill
  • Gas Connection Bill
  • Post/Letter/Mail Delivered through Indian Postal Department

How to Apply For Voter ID Card Online

புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு எளிமையாக Online மூலமாகவே Apply செய்யலாம். வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பிக்க நீங்கள் எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. உங்களின் மொபைல் அல்லது கணினியின் மூலம் நீங்களே Apply செய்யலாம்.

வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைன் வழியே Apply செய்வதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 1: முதலில் NVSP என்ற National Voter Service Portal தளத்தை அணுகவும்.

Step 2: NVSP Portal-லில் உங்களின் கணக்கை Login செய்யவும்.

Read  How to Download Voter List in Online 2023

NVSP Portal Login

Step 3: Login செய்தவுடன் Fresh Inclusion/Enrollment என்பதை கிளிக் செய்யவும்.

Click New Voter Apply

Step 4: தற்போது Citizenship என்ற பக்கம் வரும். அதில் I reside in India என்பதை தேர்வு செய்து, அதற்கு கீழே மாநிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Select State

Step 5: Address என்னும் பக்கத்தில் உங்களின் முழுமையான முகவரியை கொடுக்க வேண்டும்.

நீங்கள் இடது பக்கத்தில் ஆங்கிலத்தில் Enter செய்யும்போது, வலது பக்கத்தில் தானாகவே தமிழில் வந்துவிடும். ஒருவேளை தமிழில் தவறாக இருந்தால் நீங்களே தமிழில் Type செய்ய வேண்டும்.

Enter Address Details

Step 6: Upload Document என்ற இடத்தில் முகவரி சான்றுக்கான Documnet-யை Upload செய்ய வேண்டும்.

Step 7: அதற்கு கீழே உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவரது வாக்காளர் அடையாள எண்ணை கொடுத்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 8: Date of Birth என்ற பக்கத்தில் நீங்கள் பிறந்த தகவல்களை கொடுக்க வேண்டும்.

Step 9: பிறகு வயதுக்கான Document-யை Upload செய்ய வேண்டும்.

Step 10: அதற்கு கீழே உள்ள Download Age Declaration Form என்பதை கிளிக் செய்தால் ஒரு படிவம் Download ஆகும். அந்த படிவத்தை நிரப்பி அதை Scan செய்து Upload செய்ய வேண்டும்.

Date of Birth Details

Step 11: இப்பொழுது Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 12: Your assembly constituency என்ற பக்கத்தில் உங்களின் சட்டமன்ற தொகுதியை தேந்தெடுத்து Next என்பதை கிளிக் செய்க.

Assembly

Step 13: Personal Details எனும் பக்கத்தில் அதில் கேட்கப்பட்ட உங்களின் சுயவிவர தகவல்களை கொடுக்க வேண்டும்.

Personal Details

Step 14: Upload Document என்ற இடத்தில் உங்களின் புகைப்படத்தை Upload செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Photo Upload

Step 15: தற்போது Additional Information என்ற பக்கம் வரும். அதில் நீங்கள் ஊனமுற்றவராக இருந்தால் அதன் வகையை தேர்வு செய்ய வேண்டும். மேலும் உங்களின் மின்னஞ்சல் மற்றும் மொபைல் நம்பர் போன்ற தகவல்களையும் கொடுக்கலாம்.

Read  How to Link Mobile Number with Voter ID Card Online

Step 16: தகவல்களை கொடுத்த பின்பு Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Additional Details

Step 17: Declaration பக்கத்தில் உங்களின் ஊரின் பெயரை Enter செய்து Next என்பதை கிளிக் செய்க.

place

Step 18: அடுத்து கடைசியாக Preview என்ற பக்கம் திறக்கும். அதில் நீங்கள் ஆரம்பத்தில் இருந்து Enter செய்த அனைத்து தகவல்களும் ஒரே பக்கத்தில் வரும். நீங்கள் கொடுத்த தகவல்கள் சரியாக உள்ளதா என்று சோதனை செய்து, சரியாக இருந்தால் Submit என்பதை கிளிக் செய்யவும்.

Preview FormPreview Form 1

Step 19: தற்போது உங்களின் Application வெற்றிகரமாக Submit செய்யப்பட்டது. இப்போது ஒரு Reference Number தோன்றும் அதை குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பு:

நீங்கள் Apply செய்யும்போது * என்ற Symbol இருக்கும் இடங்களில் கட்டாயம் நிரப்ப வேண்டும்.

Document-களை Upload செய்யும்போது Jpg அல்லது Jpeg என்ற வடிவத்தில் தான் Upload செய்ய வேண்டும். மேலும் இவற்றின் அளவு 2MB -க்கு அதிகமாக இருக்கக்கூடாது.

How to Track Voter ID Application Status 

விண்ணப்பதாரர்கள் வாக்காளர் அடையாள அட்டையை விண்ணப்பித்த பிறகு அந்த விண்ணப்பத்தின் நிலையை கண்காணிக்கலாம். நீங்கள் Apply செய்த பின்பு கிடைத்த Reference Number-யை கொண்டு ஆன்லைனில் Application Status-யை Track செய்யலாம்.

Step 1: NVSP Portal -லில் Track Application Status என்பதை கிளிக் செய்க.

Voter id Track Status

Step 2: பிறகு Reference Number Enter செய்யும் பக்கம் திறக்கும்.

voter track

Step 3: அதில் Reference Number-யை Enter செய்து Track Status என்பதை கிளிக் செய்தால் விண்ணப்பத்தின் நிலையை அறியலாம். 

voter track1

 

விண்ணப்பதாரரின் விண்ணப்பத்தினை தேர்தல் அதிகாரி Approve செய்துவிட்டால், அதற்கான Voter ID Card நம்பர் Generate ஆகிவிடும். மேலும் புதிய வாக்காளர் அட்டையை விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

முடிவுரை 

இந்த பதிவில் புதிய வாக்காளர் அட்டைக்கு ஆன்லைன் மூலம் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றிய முழுமையான தகவல்களை தெரிந்து கொண்டீர்கள். இந்த தகவல்களை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இதை பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே பதிவிடவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Follow us on Facebook Follow us on Twitter Follow us on Pinterest