How to Delete Voter ID From Voter List in Online
ஒருவர் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால், முதலில் Voter ID Card -க்கு விண்ணப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்பித்த சில நாட்களில் வாக்காளர் அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இருப்பினும் சில காரணங்களால், வாக்காளர் பட்டியலில் இருந்து Voter ID Card -யை நீக்கம் (Delete) செய்ய விரும்பலாம். அவ்வாறு நீக்கம் செய்வதற்கான செயல்முறையை இந்த பதிவில் காணலாம்.
Table of Contents
ஏன் Voter ID Card -யை ரத்து செய்ய வேண்டும் ?
வாக்காளர்கள் Voter ID Card -க்கு Apply செய்வதற்கு தெரிந்திருப்பதை போல, அதை ரத்து செய்வதற்கும் அவசியம் அறிந்திருக்க வேண்டும். தேர்தல் வாக்கெடுப்பில் இருந்து உங்களின் Voter ID Card -யை ரத்து செய்யாமல் இருந்தால், அது போலி வாக்களிப்பு மற்றும் சமூக தேர்தல் தீமைகளுக்கு வழி வகுக்கும்.
Voter ID Card -யை Deletion செய்வதற்கான காரணங்கள் பின்வருமாறு:
- உங்களின் பெயரில் இரண்டு வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தால், அதில் ஒன்றை ரத்து செய்ய வேண்டும்.
- வாக்காளர் மரணமடைந்துவிட்டால் அவரது பெயரை நீக்க வேண்டும்.
- வாக்காளர்கள் வேறு நகரம் அல்லது மாநிலத்திற்கு செல்லும்போது.
- வேறு ஒரு நாட்டில் குடிமகனாக இருந்தால்.
How to Delete Your Voter ID From Voter List
நீங்கள் வாக்காளர் அடையாள அட்டையை Online வழியே எளிமையாக Delete செய்யலாம். இதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Step 1: National Voter Service Portal (NVSP) இணையதளத்தில் உங்களின் கணக்கை Login செய்ய வேண்டும்.
Step 2: Deletion of Enrollment (Self/Family) என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இதில் உங்களின் Voter ID Card -யை நீக்க வேண்டுமென்றால் Self என்றும், குடும்பத்தினர் என்றால் Family என்றும் தேர்வு செய்ய வேண்டும்.
Step 4: பிறகு Next என்பதை கிளிக் செய்க.
Step 5: தற்போது வாக்காளர் அட்டையை நீக்கம் செய்வதற்கான Form 7 இருக்கும்.
Step 6: State, District மற்றும் Assembly ஆகியவற்றை தேர்வு செய்யவும்.
Step 7: தற்போது மூன்று விதமான விருப்பங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு வேண்டிய விருப்பத்தை தேர்வு செய்க.
முதல் விருப்பத்தில் ஒரு நபரை தேர்தல் பட்டியலில் சேர்ப்பதை எதிர்ப்பது. இரண்டாவதாக ஒரு நபரின் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நிரந்தரமாக நீக்குவது. மூன்றாவதாக உங்களின் பெயரை பட்டியலில் இருந்து நீக்குவது.
Step 8: Particulars of the applicant என்ற பகுதியில் உங்களின் தகவல்களை கொடுக்க வேண்டும்.
Step 9: அதற்கு கீழே உள்ள பகுதியில் நீங்கள் நீக்க வேண்டிய நபரின் தகவல்களை கொடுக்க வேண்டும்.
Step 10: உங்களுடைய பெயரை தான் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகிறீர்கள் என்றால் Same as Above என்பதை டிக் செய்யவும். தற்போது மேலே உள்ள தகவல்களை அனைத்து கீழே Copy ஆகிவிடும்.
Step 11: Reason for Objection/Deletion என்ற இடத்தில் பெயரை நீக்குவதற்கான காரணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
Step 12: Place என்ற இடத்தில் உங்களின் ஊரின் பெயரை கொடுத்து Submit என்பதை கிளிக் செய்க.
Step 13: உங்களின் விண்ணப்பம் வெற்றிகரமாக Submit செய்யப்பட்டு Reference Number வரும். இதை கொண்டு விண்ணப்பத்தின் Status -யை அறியலாம்.
உங்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தும், நீங்கள் வாக்களிக்கும் உரிமையை பயன்படுத்தாவிட்டால் அது முறைகேடான வாக்களிப்புக்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் தலைவிதியையே மாற்றலாம். எனவே வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, மேற்கூறிய காரணங்களில் ஏதாவது இருந்தால் Voter List இல் இருந்து உங்களின் Voter ID யை Delete செய்ய வேண்டும்.
மேலும் படிக்க –