How to Voter ID Verification in Online | NVSP Portal | Tamil
வாக்காளர்கள் Online மூலமாகவே Voter ID Verification செய்யும் வசதியை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இதன் மூலம் வாக்காளர்களே தங்களின் வாக்காளர் அட்டையை Online மூலம் சரிபார்த்து கொள்ளலாம்.
ஒரு தனிநபரின் முக்கியமான ஆவணங்களில் Voter ID Card -ம் ஒன்றாகும். இந்த Voter ID ஒரு தனிநபருக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. மேலும் இது முகவரி மற்றும் அடையாள சான்றாகவும் பயன்படுகிறது.
வாக்காளர்கள் தங்களின் Voter ID Card -ல் உள்ள தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை Online வழியாக சரிபார்க்கலாம். அதாவது வாக்காளர் அட்டையில் உள்ள Name, Date of Birth, Address, Photo போன்ற தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை சோதனை செய்துகொள்ளலாம். ஒருவேளை, அதில் திருத்தங்கள் ஏதாவது செய்ய வேண்டி இருந்தால் செய்து கொள்ளலாம்.
இதற்காக தேர்தல் ஆணையம் Electors Verification Program (EVP) என்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள், அவர்களின் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் தகவல்களை அவர்களே இணையம் மூலமாக சரிபார்க்கலாம்.
மேலும் படிக்க – NVSP Portal Registration
Table of Contents
Why Need Electors Verification Program (EVP)
வாக்காளர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயரலாம். இதனால் Voter ID Card -ல் முகவரி மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். வாக்காளர் அட்டையில் இது போன்ற ஏதாவது திருத்தங்கள் செய்வதற்கு எளிமையான வழியை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக தேர்தல் ஆணையம் Electors Verification Program என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் படி தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வாக்காளர்களின் EPIC எண்ணை உள்ளிட்டு தேடினால், அவர்களின் அனைத்து தகவல்களையும் திரையின் முன் காணலாம். வாக்காளரின் அனைத்து தகவல்களும் சரியாக இருப்பின், அதில் ஏதாவது ஓரு அடையாள சான்றை கொடுத்து Verification செய்யலாம். ஒருவேளை, அதில் திருத்தங்கள் செய்ய வேண்டுமென்றால், வாக்காளர்களே செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு தனிநபரும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். Voter ID Verification -யை செய்வதற்கு கணினி அல்லது ஸ்மார்ட் போன் இருந்தாலே போதுமானது ஆகும்.
Electors Voter Verification process-ன் நன்மைகள்
- Voter ID Card -ல் திருத்தங்கள், இடம் பெயர்தல் போன்றவற்றிற்கான படிவங்களை Online மூலமாகவே Submit செய்யலாம்.
- வாக்கு சாவடிகளின் தகவல்கள், தேர்தல்களை அறிவித்தல், தேர்தல் பட்டியலில் மாற்றம் போன்ற சேவைகளுக்கு நிரந்தர Login வசதி உள்ளது.
- மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல்களை வழங்கியிருந்தால் தேர்தல் பட்டியல் மற்றும் வாக்கு சாவடிகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் SMS மூலம் எச்சரிக்கை செய்தி வரும்.
- வாக்காளர் தகவல் சீட்டு கிடைக்கும்.
மேலும் படிக்க – How to Change Name in Voter id Card Online
How to Verify Voter ID Through Electors Verification Program
ஒவ்வொரு வாக்காளரும் கீழ்கண்ட செயல் முறையை பயன்படுத்தி வாக்காளர் அட்டையை சரிபார்த்து கொள்ளலாம்.
Step 1: முதலில் NVSP என்ற National Voter Service Portal இணையதளத்திற்குள் செல்ல வேண்டும்.
Step 2: Login / Register என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 3: இப்பொழுது உங்களின் Username மற்றும் Password -யை Enter செய்து NVSP கணக்கை Login செய்ய வேண்டும்.
Step 4: தற்போது NVSP Portal -லின் Home Page திறக்கும். அதில் Electors Verification Program (EVP) என்ற தேர்வை கிளிக் செய்க.
EVP-ன் கீழ் நீங்கள் செய்ய வேண்டிய செயல்பாடுகள் நான்கு படிகளில் இருக்கும்.
படி 1
Step 5: Verify Self Details என்பதை கிளிக் செய்க.
Step 6: இப்போது உங்களின் Name, Relative Name, Age, Gender போன்ற தகவல்கள் வரும். மேலும் Verification & Authentication Status என்ற இடத்தில் Not Submitted என்று இருக்கும்.
Step 7: Verify My Details என்னும் இடத்தில் கிளிக் செய்க.
Step 8: தற்போது வாக்காளரின் போட்டோவுடன் கூடிய அனைத்து தகவல்களும் தோன்றும்.
Step 9: வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் சரியாக இருந்தால் பின்வருமாறு செய்ய வேண்டும்:
- Information Displayed Above is Correct என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- Upload Document என்ற இடத்தில் ஏதாவது ஒரு அடையாள சான்றை (ID Card) Upload செய்து Submit என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் Submit செய்த பிறகு Verification & Authentication Status -ல் Check செய்தால் Submitted என்று இருக்கும். எனவே தற்போது நீங்கள் Voter ID Verification -யை வெற்றிகரமாக செய்துவிட்டீர்கள்.
Step 10: வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களில் திருத்தம் செய்ய வேண்டியது இருந்தால் பின்வருமாறு செய்க:
- ஒருவேளை, Voter ID Card -ல் திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தால், Information Displayed Above Need Correction என்பதை தேர்வு செய்து Next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்பொழுது நீங்கள் திருத்தம் செய்ய வேண்டியதை டிக் செய்க.
- டிக் செய்தவுடன் சரியான தகவல்களை Enter செய்வதற்கான Option திறக்கும். அதில் வேண்டிய தகவல்களை உள்ளிட வேண்டும்.
- பிறகு திருத்திய தகவல்களுக்கு ஆதாரமாக பட்டியலில் கொடுக்கப்பட்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை Upload செய்து View Application Preview என்பதை கிளிக் செய்க.
- தற்போது நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் ஒரே பக்கத்தில் இருக்கும். அதை ஒருமுறை சரிபார்த்து Submit என்பதை கிளிக் செய்க.
- உங்களின் Application -யை தேர்தல் அதிகாரிகளால் Verify செய்யப்பட்டு, 2 முதல் 3 வாரங்களுக்குள் வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் திருத்தப்படும்.
படி 2:
Step 11: Pollling Station Feedback என்பதை கிளிக் செய்து உங்களின் வாக்குசாவடி பற்றிய கருத்துகளை கொடுக்க வேண்டும்.
Step 12: இந்த பக்கத்தில் உங்களின் வாக்குச்சாவடியின் தகவல்கள் (Polling Station Details) கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் அதற்க்கு கீழே உள்ள வினாக்களுக்கு Yes (or) No என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
பிறகு கடைசியாக Submit என்பதை கிளிக் செய்தால் உங்களின் கருத்துகள் பதிவு செய்யப்பட்டு விடும்.
Polling Station பற்றிய கருத்துகளை அறிவதற்கான வினாக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
- வாக்குச் சாவடிக்கான அணுகுமுறை நல்ல நிலையில் உள்ளதா?
- வாக்குச் சாவடியை அடைவதற்கு நீங்கள் செல்லும் பாதையில் இயற்கை தடை ஏதேனும் உள்ளதா ?
- உங்களின் வாக்குச் சாவடிக்கான தூரம் 2 கிலோமீட்டருக்குள் உள்ளதா ?
- வாக்குச் சாவடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரேம்ப் வசதிகள் உள்ளதா?
- வாக்குச்சாவடி கட்டிடம் நல்ல நிலையில் உள்ளதா ?
- ஒருவேளை வாக்குச்சாவடி கட்டிடம் சரில்லை என்றால், அதற்கு அருகில் அரசு கட்டிடம் ஏதாவது உள்ளதா ?
படி 3
Step 13: Family Listing & Authentication என்பதை கிளிக் செய்து உங்கள் குடும்பத்தினரின் Voter ID Card தகவல்களையும் சரிபார்க்க வேண்டும்.
Step 14: Family Member பட்டியலில் ஏற்கனவே உங்களின் Voter ID Card தகவல்கள் இருக்கும்.
Step 15: EPIC என்ற இடத்தில் உங்கள் குடும்பத்தினரின் வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு Add to Family என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Step 16: இப்பொழுது ஒரு நீங்கள் Add செய்த குடும்ப உறுப்பினரின் தகவல்கள் புகைப்படத்துடன் வரும். அதில் Relation Type என்னும் இடத்தில், உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன உறவுமுறை என்பதை தேர்வு செய்து Add Member என்பதை கிளிக் செய்க.
Step 17: இதேபோல் உங்களின் குடும்பத்தில் அனைவரின் Voter ID Card தகவல்களையும் Add செய்து Have you added all family members? என்ற கேள்விக்கு Yes என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
Step 18: இப்போது Submit என்பதை கிளிக் செய்க.
Step 19: நீங்கள் Add செய்த அனைத்து குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் பட்டியல் தோன்றும். அதில் கீழே உள்ள Click here என்பதை அழுத்தவும்.
Step 20: பிறகு குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டை தகவல்களை Verification செய்ய வேண்டும்.
படி 4
Step 21: Un Enrolled Members என்பதில் உங்கள் குடும்பத்தில் 16 மற்றும் 17 ஆகிய வயதுள்ளவர்களின் தகவல்களை கொடுக்கலாம்.
Step 22: அவர்களின் Date of Birth -யை உள்ளிட்ட வேண்டும்.
Step 23: பிறந்த தேதியை கொடுத்தபின்பு அவர்களின் தகவல்களை Enter செய்ய வேண்டும்.
Step 24: பிறகு கடைசியாக Add Member என்பதை கிளிக் செய்தால் Add ஆகிவிடும்.
Step 25: உங்கள் குடும்பத்தில் அவ்வாறு யாரும் இல்லையென்றால், Step 4 -யை தவிர்த்துவிடலாம்.
அனைத்து வாக்காளர்களும் மேற்கண்ட செயல்முறைகளின் மூலம் வீட்டில் இருந்தவாறே வாக்காளர் அட்டையை சரிபார்த்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் அலுவலகங்களுக்கு அலைய வேண்டிய தேவை இருக்காது. மேலும் உங்களின் குடும்ப உறுப்பினர்களின் வாக்காளர் அடையாள அட்டைகளையும் Verification செய்துகொள்ளலாம்.
மேலும் படிக்க – How to Apply for Voter ID Card Online